news

News September 14, 2024

‘தளபதி 69’ படத்தின் அறிவிப்பு வெளியானது

image

விஜய் நடிக்க உள்ள கடைசிப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை ஹெச்.வினோத் இயக்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். படத்தின் பெயர் குறிப்பிடப்படாமல் ‘தளபதி 69’ என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘The Torch Bearer Of Democracy’ என்று குறிப்பிட்டு, தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டு அக்டோபரில் இப்படம் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News September 14, 2024

2.50 லட்சம் பேர் வரவில்லை

image

TNPSC குரூப் 2 முதல்நிலை தேர்வு எழுத 2.50 லட்சம் பேர் வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 2,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப இன்று தேர்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க சுமார் <<14098119>>7.90 லட்சம்<<>> பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதன்படி, தேர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால், விண்ணப்பித்தோரில் 2.50 லட்சம் பேர் வரவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.

News September 14, 2024

சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

image

சிவகங்கை அருகே சுற்றுலா வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் வந்தவர்களில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்றுள்ளனர். அப்போது தஞ்சையில் இருந்து வந்த கார் வேன் மீது மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. அத்துடன், வேனில் இருந்த மலேசிய சுற்றுலா பயணிகள் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

News September 14, 2024

விதிகளை மதிக்காத மொபைல் நிறுவனங்கள்

image

சில மொபைல் நிறுவனங்கள், சந்தை போட்டி விதிகளை மீறியது இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தின் (CCI) அறிக்கையில் தெரியவந்துள்ளது. சாம்சங், சியோமி, ஒன்பிளஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் அமேசான், ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து சில மொபைல் மாடல்களை பிரத்யேகமாக வெளியிடுகிறது. இது சுதந்திரமான மற்றும் நியாயமான சந்தை போட்டிக்கு எதிரானது மட்டுமல்லாமல், நுகர்வோர் நலனுக்கும் எதிரானது என CCI அறிக்கையில் கூறியுள்ளது.

News September 14, 2024

தமிழக மீனவர்களுக்கு மொட்டை அடித்து அட்டூழியம்

image

கடந்த மாதம் 26ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களுக்கு தலா ₹5,000 அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்நிலையில் தாயகம் திரும்பிய மீனவர்கள் தங்களுக்கு இலங்கை அரசு மொட்டை அடித்து அனுப்பியதாக குற்றம் சாட்டியதையடுத்து, தங்கச்சி மடம் பகுதி மீனவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News September 14, 2024

₹100 கருணாநிதி நாணயம் விலை ₹4,180

image

மறைந்த Ex முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக (1924-2024) மத்திய அரசு ₹100 நாணயம் வெளியிட்டது. இந்த நாணயம் தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. மத்திய அரசின் <>இந்த<<>> இணையதள முகவரியில் ₹4,180 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். முன்னதாக, கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கு மத்திய அரசு ₹2,500 விலை நிர்ணயித்திருந்த நிலையில், திமுக சார்பில் ₹10,000க்கு விற்கப்பட்டது.

News September 14, 2024

திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறது: திருமா

image

திமுக கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து விசிக எப்போதுமே பேசவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் தான் இப்போதும் விசிக இருக்கிறது என்றும், கூட்டணி தொடரும் எனவும் விளக்கமளித்துள்ளார். அத்துடன், மது ஒழிப்பு மாநாட்டை தேர்தலுடன் தொடர்புபடுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்ட அவர், தேர்தல் கூட்டணிக்காக மாநாட்டை நடத்தினால், அதைவிட அசிங்கம் தனக்கு கிடையாது என்றும் ஆதங்கப்பட்டார்.

News September 14, 2024

‘கொட்டுக்காளி’ OTT ரிலீஸ்

image

சூரி நடித்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வருகிற 27ஆம் தேதி Simply South ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் பல ஓடிடி தளங்களில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றது. மண் சார்ந்த கதையை நேர்த்தியாக படமாக்கிய இயக்குநர் எஸ்.வினோத்ராஜை பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

News September 14, 2024

Tech Talk: இதை செக்கெண்ட் ஹேண்டில் வாங்காதீங்க!

image

அவசர தேவை, பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் Second Hand பொருட்களை வாங்குவார்கள். எந்த காரணமாக இருந்தாலும் சரி, ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்களை Second Hand ஆக வாங்கவே கூடாது என டெக்கிஸ் அறிவுறுத்துகிறார்கள். கேமரா, ஸ்மார்ட் அசிஸ்டென்ட் தயாரிப்புகள் PreHack செய்ய வாய்ப்புள்ளதால் இவற்றை Reset செய்வது போதுமானதாக இருக்காது. இது அந்நியர்களுக்கு சாதகமான அணுகலை வழங்கி, உங்களின் Privacyக்கு அச்சுறுத்தலை அளிக்கலாம்.

News September 14, 2024

அன்னபூர்ணா சர்ச்சை: பாஜக நிர்வாகி நீக்கம்

image

கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவர் சதீஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அன்னபூர்ணா ஹோட்டல் தொடர்பாக அவர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாஜக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கெனவே, அன்னபூர்ணா குழும தலைவர், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

error: Content is protected !!