news

News September 14, 2024

உதயநிதி நேரில் சென்று மரியாதை

image

காமெடி நடிகர் கருணாகரனின் தந்தையும், மத்திய அரசின் உளவுத்துறை ஓய்வுபெற்ற அதிகாரியுமான காளிதாஸ் (77) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெறும் என கருணாகரன் தெரிவித்துள்ளார்.

News September 14, 2024

திருமா நேரில் அழைத்தால் பரிசீலனை: ADMK

image

மதுஒழிப்பு மாநாட்டிற்கு திருமாவளவன் நேரில் அழைத்தால், அதில் பங்கேற்பது குறித்து பரிசீலனை செய்வோம் என்று அதிமுக தெரிவித்துள்ளது. விசிக அழைப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு ஜெயக்குமார் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசிய வீடியோ குறித்த கேள்விக்கு, அக்கட்சியுடன் கூட்டணி அமைந்தாலும், ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு தராது என்றார்.

News September 14, 2024

சீன நிறுவனங்களில் முதலீடு: காங்கிரஸ்

image

SEBI தலைவர் மாதபி புரி புச் சீன நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக காங்கிரஸ் புது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. விதிகளை மீறி முறைகேடாக வருமானம் ஈட்டியதாக முன்பு குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு வெளியே பல நாடுகளில் அதிகளவு முதலீடு செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து பிரதமருக்கு தெரியுமா என்றும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

News September 14, 2024

இங்கு இரவு 9 மணிவரை இடி மின்னலுடன் மழை

image

இரவு 9 மணிவரை 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என கூறியுள்ளது. திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. SHARE IT

News September 14, 2024

விஜய்யின் கடைசி பட போஸ்டரும், அரசியலும்

image

விஜய்யின் கடைசி <<14101935>>பட போஸ்டர்<<>> வெளியாகி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதில், ‘ஜனநாயகத்தை காப்பதற்கான தீப்பந்தம் விரைவில் வருகிறது’ என்ற வாசகத்துடன், தீப்பந்தம் ஏந்தி நிற்கும் ஓவியமும் இடம்பெற்றுள்ளது. தேமுதிக கொடியிலும் தீப்பந்தம் இருக்கிறது. இதனால் அவர் விஜயகாந்த் அரசியல் பாணியை முன்னெடுக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. ஏற்கெனவே, ‘GOAT’ படத்திலும் விஜயகாந்த் AI மூலம் தோன்ற வைக்கப்பட்டிருந்தார்.

News September 14, 2024

மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

image

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை செப்.20 வரை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாற்றிய அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்த நிலையில், 3 நாள்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டது. நேற்றுடன் காவல் முடிந்த நிலையில் தற்போதுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

News September 14, 2024

ஆனா இது புதுசா இருக்குன்னே!

image

விபத்தில் சிக்கி இறந்தவருக்காக உறவினர்கள் வைத்த கண்ணீர் அஞ்சலி பேனர், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், சாலை விதிகளை பின்பற்றாததாலும், ஹெல்மெட் அணியாததாலும் ஏற்பட்ட சிறு விபத்து, மாரியப்பனின் உயிரை குடித்துவிட்டது என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்த இப்படி செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். நீங்கள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுபவரா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 14, 2024

செப்டம்பரில் OTT-யில் ரிலீசாகும் படங்கள்

image

இம்மாதத்தில் 3 முக்கிய தமிழ் படங்கள் OTT-யில் வெளியாக உள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் வரும் 20ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ரிலீசாகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வசூல், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘வாழை’ திரைப்படம் 27ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. அதே நாளில், அருள்நிதி நடித்த திகில் படமான ‘டிமான்ட்டி காலனி 2’ Zee 5 தளத்தில் ரிலீசாகிறது.

News September 14, 2024

‘குரூப் 2’ தேர்வில் ஆளுநர் குறித்து சர்ச்சை கேள்வி

image

தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ஆளுநர் குறித்து கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “இந்திய கூட்டாட்சியில் ஆளுநர் அரசின் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி என இருவித பணிகளை செய்கிறார். காரணம், ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது” என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துள்ள நிலையில், இந்த சர்ச்சை கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

News September 14, 2024

ஹங்கேரியில் இந்தியா ஆதிக்கம்!

image

ஹங்கேரியில் நடைபெறும் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது. மொத்தம் 11 சுற்றுகளாக போட்டி நடத்தப்படும் நிலையில், இன்று 3ஆவது சுற்று நடைபெற்றது. ஹங்கேரி B அணியை ஆடவர் அணியும், சுவிட்சர்லாந்தை மகளிர் அணியும் எதிர்கொண்டன. இதில், ஆடவர் அணி 3.5-0.5, மகளிர் அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிப் பட்டியலில் ஆடவர் அணி முதலிடத்தில் உள்ளது.

error: Content is protected !!