India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பருவநிலை மாற்றங்களில் இருந்து இமயமலையை காக்க, லே முதல் டெல்லி வரை சோனம் வாங்சுக் என்பவர் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். ஹிமாச்சலில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன் அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டுள்ளார். ‘நண்பன்’ படத்தின் ஒரிஜினல் ‘3 Idiots’-ல் வரும் அமீர்கானின், கதாபாத்திரம் இவரது Inspiration-ல் தான் உருவானது.
தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓணம், மிலாது நபியை ஒட்டி நேற்று முதல் பலர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்கின்றனர். இதனால், நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்கள் எறும்பு போல ஊர்ந்து செல்கின்றன. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை ஒட்டிய பகுதிகளிலும் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
சிலரது முகம் எப்போதுமே எண்ணெய் வடிந்தது போல காட்சியளிக்கும். இதற்கு தீர்வு இதோ.
*வெள்ளரிக்காயை பிசுபிசுப்பாக அரைத்து இரவு முகத்தில் தடவி காலையில் கழுவவும்.
*தக்காளிச் சாற்றை 15-30 நிமிடம் முகத்தில் ஊற வைத்த பிறகு, தண்ணீரில் சுத்தம் செய்யவும்.
*முட்டை வெள்ளைக் கருவை மட்டும் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்யலாம்.
*கற்றாழையை வாரம் இருமுறை அரைத்து தடவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் மணிமேகலை அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். குக்காக இருக்கும் மற்றொரு தொகுப்பாளர், தன்னுடைய பணியில் ஆதிக்கம் செலுத்துவதாகவும், பணம், புகழை விட சுயமரியாதையே முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் யாரை மறைமுகமாக தாக்குகிறார் என நீங்கள் நினைக்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.
நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவம் காங்கிரஸ் என, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். காங்கிரஸைவிட நேர்மையில்லாத, வஞ்சகமான கட்சி வேறு எதுவும் கிடையாது என குற்றஞ்சாட்டிய அவர், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே அந்தக் கட்சியின் நோக்கம் என்றார். மேலும், புதுப்புது பொய்களை சொல்வதற்காக, காங்கிரஸ் கட்சி ஒருநாளும் வெட்கப்பட்டது இல்லை எனவும் அவர் கடுமையாக சாடினார்.
மகளுக்கு ‘இந்தியா’ கோவாவில் வாழும் தன்னை ஃபீல்டிங் பயிற்சியாளராக BCCI வேண்டாம் என சொன்னது ஏமாற்றத்தை கொடுத்ததாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். BCCI சர்வதேச பயிற்சியாளரை விரும்பவில்லை, ஆனால் நான் உள்ளூர்காரர்தான், ஒருவேளை கோவாவைச் சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், வேறு ஒரு மெட்ரோ நகருக்கு குடிபெயர வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை ராஜ்பவனில் ‘ஸ்ரீராமா இன் தமிழகம்’ என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசினார். அப்போது ராமரை நீக்கிவிட்டு பார்த்தால் இந்தியா என்ற நாடே இல்லை என கூறினார். மக்கள் மனங்களில் இருந்து ராமரை ஒருபோதும் நீக்க முடியாது என அவர் தெரிவித்தார். மேலும் தர்மம் இல்லாமல் பாரதம் இல்லை என்றும், சனாதன தர்மம் ஒற்றுமை குறித்து பேசுவதாகவும் தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கூலி’. இதன் படப்பிடிப்பு விஜயவாடா அருகே நடைபெற்றுவரும் நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு அருகே கண்டெய்னர் முனையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் படக்குழுவினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்ட தருணம் பற்றி மோர்னே மோர்கல் பகிர்ந்துள்ளார். BCCI-யிடம் ஃபோனில் இந்த செய்தியை கேட்டபோது, தனியாக 5 முதல் 7 நிமிடங்கள் அமர்ந்து அந்த தருணத்தை ரசித்ததாக கூறியுள்ளார். இதை முதலில் மனைவியிடம் சொல்லாமல், அப்பாவிடம் சொன்னதாகவும் கூறியுள்ளார். மேலும், பல ஆண்டுகளாக கிரிக்கெட் ரசிகனாக இருந்துவரும் தனக்கு, இது ஒரு சிறந்த வாய்ப்பு என தெரிவித்துள்ளார்.
GST குறித்து பேசியது தொடர்பான விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக அன்னபூர்ணா நிர்வாகம் கேட்டுக்கொண்டது. GST கூட்டத்தில் தங்கள் உரிமையாளா் கேள்வியெழுப்பிய VIDEO வைரலானதால், தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அவர் அமைச்சரை சந்தித்து மன்னிப்பு கேட்டதாக குறிப்பிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் TN பாஜக மன்னிப்பு கேட்டதாகவும், வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.