India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

*வரும் நவ.4-ம் தேதி முதல் ‘பேட் கேர்ள்’ படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. *துருவ் விக்ரமின் ‘பைசன்’ 10 நாள்களில் ₹55 கோடி வசூலித்துள்ளதாக தகவல். *சமந்தா நடிக்கும் புதிய படத்திற்கு ‘மா இண்டி பங்காரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. *ஜித்து மாதவன் இயக்கும் படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். *விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ படத்தை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

இன்று (அக்.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்புவதற்காக, கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட 36,000 நெல் மூட்டைகள் இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, கடந்த 10 நாள்களாக பெய்த மழையில் நனைந்த நெல் மூட்டைகள் முளைக்க தொடங்கிவிட்டதாகவும் அன்புமணி பேசியுள்ளார்.

நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக UGC அறிவித்துள்ளது. இந்த பட்டியலில், 10 பல்கலை.,களுடன் டெல்லி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக உ.பி.யில் 4, ஆந்திராவில் 2, மேற்கு வங்கத்தில் 2, கேரளாவில் 2, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒரு பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக தெரிவித்துள்ளது. மேற்கூறிய கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பட்டங்கள் அங்கீகரிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.

*புரோ கபடியில் பாட்னா பைரேட்ஸ் 46-37 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தி எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேற்றம். *வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20-ல் வெஸ்ட் இண்டீஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. *ஆசிய யூத் கேம்ஸ் மகளிர் ஹேண்ட்பாலில், இந்தியா 33-17 என்ற புள்ளிகள் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது. *ராஜஸ்தானுக்கு எதிரான ரஞ்சி போட்டியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடுவார் என தகவல்.

நான் இசையமைக்கும் படங்களில் இளையராஜா உள்ளிட்ட பிற இசையமைப்பாளர்களின் பாடல்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என நிவாஸ் கே பிரசன்னா தெரிவித்துள்ளார். ‘பைசன்’ படத்தின் ‘சீனிக்கல்லு’ பாடலுக்கு பதிலாக ‘மலர்ந்தும் மலராத’ பாடலை மாரி செல்வராஜ் வைக்க இருந்தாா். தன்னை வைத்து கொண்டு இன்னொருவர் பாடலை போடலாமா என கோபமடைந்து, அடுத்த 10 நிமிடத்தில் போட்ட டியூன் தான் ‘சீனிக்கல்’ என்று அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் அடுக்குமாடி கட்டுவதற்கு வழங்கிய அனுமதியை TN அரசு ரத்து செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். வனத்துறை, CMDA உள்ளிட்ட அரசுத் துறைகள், சட்டத்தை மீறி அனுமதி தந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை, தமிழக பாஜக சந்தித்து சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் போராட்டம் நடத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

புயல் பாதிப்பு எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை(அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அந்தந்த கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்வதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. மொன்தா புயல் நாளை தீவிர புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால், கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கப்படவுள்ளது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.