India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶ செப்.15 (ஆவணி 30) ▶ ஞாயிறு ▶ நல்ல நேரம்: 7.45 -8.45 AM & 03.15 – 04.15PM ▶ கெளரி நேரம்: 10:45 – 11:45AM & 01:30 – 02:30PM ▶ இராகு காலம்: 04:30 – 06:00PM ▶ எமகண்டம்: 12:00 – 01:30PM ▶ குளிகை: 03:00 – 04:30PM ▶ திதி: துவாதசி மாலை 3:30 வரை ▶ நட்சத்திரம் 05:30 PM வரை திருவோணம் ▶ சூலம்: மேற்கு ▶ பரிகாரம்:வெல்லம் ▶ அமிர்தாதி யோகம்: மரணயோகம் ▶ சந்திராஷ்டமம்: மி.சீருடம், திருவாதிரை
தமது ஆட்சி அமைந்து 100 நாள்கள் கூட நிறைவடையாத நிலையில், ₹15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்ததாக PM மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஹரியானாவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ஏழை மக்களுக்கு 3 கோடி வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், மத்தியில் ஹாட்ரிக் ஆட்சி கொடுத்ததை போன்று, ஹரியானாவிலும் ஹாட்ரிக் வெற்றி தர வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதலில் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் பெஸ்ட் த்ரோவாக 87.86 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த அவர் நூலிழையில் (0.01மீட்டர்) முதலிடத்தை தவறவிட்டார். டைமண்ட் லீக் 2022இல் முதலிடம் பெற்ற நீரஜ், டைமண்ட் லீக் 2023இல் 2ஆவது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
▶ 1987 – இந்திய அமைதிப் படைக்கு எதிராக திலீபன் நல்லூரில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.▶ 1981 – தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.▶ 1959 – டெல்லியில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவை தொடங்கப்பட்டது.▶ 1909 – முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த தினம்.▶ 1967 – நடிகை ரம்யா கிருஷ்ணன் பிறந்த தினம்.▶ 1950 – மறைமலை அடிகள் மறைந்த தினம்.▶ இந்தியாவில் பொறியாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பொதுவாக தாய்தான் மகனுக்கு பெயர் சூட்டுவார். ஆனால், தமிழ்த்தாய் மண்ணுக்கு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டும் பெருமையை பெற்றவர் அண்ணா. தென்னாட்டு பெர்னாட்ஷா என்ற புகழ் பெற்ற இவர், திரைப்படங்கள் வாயிலாக பகுத்தறிவு கருத்துகளை பரப்பினார். பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக்கட்சியில் இணைந்து, பின் திமுகவை தொடங்கினார். 1967இல் முதல்வராக அரியணை ஏறி, பல முன்னோக்கு சட்டங்களுக்கு விதை போட்டார்.
இன்று (செப். 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

இந்தியாவில் அனைத்து நதிகளும் மேற்கு – கிழக்கு நோக்கி பாய்கின்றன. ஆனால், குஜராத் to ம.பியில் பாயும் நர்மதை மட்டும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பாய்கிறது. இந்து புராணத்தின் படி, நர்மதாவும், சோனா பத்ராவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் சோனாவுக்கு பணிப்பெண் மீது ஆர்வம் இருப்பது தெரிய வரவே, நர்மதா தனது இடத்தில் இருந்து எதிர்திசைக்கு சென்றதால் நதியும் அப்படி பாய்வதாக ஒரு நம்பிக்கையும் உண்டு.
ஆஃப்ரோ – ஆசியா கோப்பை தொடரை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. இதில் ஆஃப்ரோ அணியில் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளும், ஆசியா அணியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளை சேர்ந்த வீரர்களும் இடம்பெற்றிருப்பார்கள். இத்தொடர் 2005, 2007இல் நடைபெற்ற நிலையில் அதன்பின் நடைபெறவில்லை. மீண்டும் IND-PAK வீரர்கள் இணைந்து விளையாடினால் எப்படி இருக்கும்?
Sorry, no posts matched your criteria.