news

News September 15, 2024

Apply Now: இன்றே கடைசி நாள்

image

IDBI வங்கியில் காலியாக உள்ள உதவி பொது மேலாளர் & மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள். வயதுவரம்பு: 28-40. சம்பளம்: ₹1,57,000. கல்வித் தகுதி: Any PG Degree, JAIIB, CAIIB, MBA (4 ஆண்டு பணி அனுபவம்). தேர்வு முறை: நேர்முகத் தேர்வு & குழு விவாதம். கூடுதல் தகவல்களுக்கு இணைய <>IDBI <<>>முகவரியை கிளிக் செய்யவும்.

News September 15, 2024

இன்று விரதம் இருந்தால் கிடைக்கும் பலன் தெரியுமா?

image

ஆவணி மாதம் சிங்க மாதம் ஆகும். இந்த மாதம், சூரியன் தன் சொந்த வீடான சிம்ம ராசியில் தங்கி இருப்பார். எனவே, இன்று விரதம் இருந்து சூரிய வழிபாடு நடத்தினால் பதவி உயர்வு கிடைக்கும் என்றும், புகழ் சேரும் என்றும் ஆன்மிகம் தெரிவிக்கிறது. காலையில் விளக்கு ஏற்றி சூரியனை வழிபட்டாலோ, சூரிய பகவான் படத்துக்கு செந்தாமரை, செம்பருத்தி சாற்றி வணங்கினாலோ மிகுந்த பலன் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. SHARE IT

News September 15, 2024

தொட்டில் குழந்தை திட்டம் கைவிடப்பட்டதா?

image

தொட்டில் குழந்தை திட்டம் செயல்படவில்லை, முடங்கி இருக்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜெயலலிதா தொடங்கி வைத்த அந்த திட்டம் கண்டுகொள்ள படாமல் இருப்பதாகவும், நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறுகையில், அந்த திட்டம் தொடர்ந்து செயல்படுவதாகவும், அதிமுக அரசை விட தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

News September 15, 2024

கலை ஆற்றலை அருளும் நடராசர்

image

ஐம்பெரும் அம்பலங்களில் பொன்னம்பலமான தில்லை நடராசரை வழிபட்டால் பிறவிப் பிணிகள் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ஈசனின் ஆனந்த தாண்டவத்தை கண்ணால் கண்டு பதஞ்சலி முனிவர் முக்திப் பெற்ற ஆகாயத் திருத்தலமான இக்கோயிலுக்கு விரதமிருந்து சென்று, இறைவனை தொழுது, வில்வ இலை மாலை சாற்றி, தேவாரம் பாடி, தீபாராதனையில் பங்கேற்று வணங்கினால் கல்விச் செல்வமும், கலை ஆற்றலும் கிட்டும் என்பது ஐதிகம்.

News September 15, 2024

கொடி விவகாரம்: விசிகவுக்கு அதிமுக ஆதரவு

image

மதுரையில் விசிக கொடி அகற்றப்பட்ட விவகாரத்தில், விசிகவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார் பேசிய போது, கொடியை கூட ஏற்ற முடியாத நிலை தமிழ்நாட்டில் உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். விசிக வீடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு, இந்த பதிவு மூலம் திமுக மீது திருமாவளவன் கடும் அதிருப்தியை வெளியிட்டு உள்ளதாக சாடினார். 2 கட்சிகளும் கூட்டணி அமைக்குமா? கமெண்ட் பண்ணுங்க.

News September 15, 2024

நடிகைகளை அமைதி காக்க அறிவுறுத்தல்?

image

பாலியல் புகார் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று நடிகைகளை நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. நடிகைகளை போனில் தொடர்பு கொண்டு சிலர் பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதேபோல், பாதிக்கப்பட்ட நடிகைகளை சமாதானம் செய்யவே நட்சத்திர கலைவிழா நடத்த தீர்மானிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகைகள் அமைதி காப்பார்களா? கமெண்ட் பண்ணுங்க

News September 15, 2024

SBI வங்கியில் 1,511 இடங்களுக்கு வேலைவாய்ப்பு

image

SBI வங்கியில் காலியாக உள்ள 1511 இடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி தொடங்கியுள்ளது. துணை மேலாளர், உதவி மேலாளர் நிலையிலான பதவிகளில் காலியாக இருக்கும் இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு நேற்று முதல் SBI இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. வேலைக்கு தேர்வு செய்யப்படுவோர் முதல் ஓராண்டு காலம் பயிற்சி அடிப்படையில் நியமிக்கப்படுவர். விண்ணப்பிக்க அக். 4 கடைசி. SHARE IT

News September 15, 2024

குழந்தைகளையும் விட்டு வைக்காத மாரடைப்பு

image

சமீப காலமாக வயதானவர்கள் மட்டுமின்றி, இளைஞர்களும் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் இதற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், உ.பி.யில் உள்ள லக்னோவில் 9 வயது சிறுமி மாரடைப்பால் பலியான சம்பவம் அனைவரையும் பதற வைத்துள்ளது. 3ஆம் வகுப்பு படிக்கும் மான்வி சிங், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

News September 15, 2024

விழாக்களில் ஏன் வாழைமரம் கட்டப்படுகிறது தெரியுமா

image

மக்கள் அதிகமாகக் கூடும் விழாக்களில் வாழைமரம், மாவிலைத் தோரணம் ஏன் கட்டுகிறார்கள் தெரியுமா?. அதிக மக்கள் கூடும் இடங்களில் வெளிப்படும் மூச்சுக்காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் வியர்வை நெடியால் மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. காற்றை தூய்மைப்படுத்தவும், காற்றில் ஆக்சிஜன் தரத்தை உயர்த்தவும் வாழை மரமும், மாவிலையும் உதவும். எனவே தான் விழா காலத்தில் வாழை மரமும், மாவிலையும் கட்டப்படுகிறது.

News September 15, 2024

6 நாட்களுக்கு மழை: RMC

image

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் 20ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டு உள்ளது. சென்னையின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

error: Content is protected !!