India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் உள்ள இடத்தில் புதிதாக தலைமை செயலகக் கட்டிடம் கட்ட அரசு ஆலோசிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த இடத்திற்கு அதிகாரிகள் அண்மையில் சீல் வைத்தனர். இதை தொடர்ந்து அங்கு தற்பாேதைய தலைமை செயலகக் கட்டிடத்துக்கு பதில் புதிய கட்டிடம் கட்ட அரசு ஆலோசிப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அங்கு கட்டலாமா? வேண்டாமா? கீழே பதிவிடுங்கள்.
இந்திய ரயில்வேக்கு அதிக லாபம் ஈட்டி தரும் ரயில் பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதிகம் லாபம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு சதாப்தி அல்லது வந்தே பாரத் ரயில் வரும். ஆனால் அதுதான் இல்லை. நிஜாமுதீன் முதல் பெங்களூரு செல்லும் பெங்களூரு ராஜதானி எக்ஸ்பிரஸ் (NO: 22692) 2022-23 நிதியாண்டில் அதிக வருவாயை ஈட்டியுள்ளது. 5,09,510 பயணிகள் மூலம் ₹1,76,06,66,339 வருவாய் ஈட்டியுள்ளது.
தேமுதிக 20ம் ஆண்டு விழாவில் விஜயகாந்தை நினைத்து பிரேமலதா கலங்கியது உருக்கத்தை ஏற்படுத்தியது. கோயம்பேட்டில் அக்கட்சியின் 20ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விஜயகாந்த் சிலை, பெயர்பலகையை பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் இல்லாத விழாவில் கொடி ஏற்றியது வருத்தமாக இருப்பதாக கண் கலங்கினார்.
CPM கட்சிக்கு புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்ய தீவிர ஆலோசனை தொடங்கி உள்ளது. சீதாராம் யெச்சூரி மறைவால் அப்பதவி காலியாக உள்ளது. இதையடுத்து புதிதாக ஒருவரை தேர்வு செய்ய ஆலோசனை தொடங்கி உள்ளது. அப்பதவிக்கு பிருந்தா காரத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அவர் மறுத்தால், மூத்த தலைவர்கள் M.A. பேபி அல்லது பி.வி. ராகவலு தேர்ந்து எடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது
ஒரே நாளில் 1.14 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் நேற்று நடைபெற்றது. 27 மாநிலங்களிலுள்ள உயர்நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றில் கிரிமினல் சாராத சிவில் வழக்குகள் குறித்து விசாரிக்கப்பட்டன. இதன்மூலம் 1,14,56,529 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ₹8,482 கோடி செட்டில் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சட்ட சேவைகள் ஆணையம் கூறியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ள வங்கதேச அணியினர் இன்று சென்னை வரவுள்ளனர். முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் வரும் 19ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், நாளை முதல் அந்த அணியினர் பயிற்சியை தொடங்கவுள்ளனர். இந்திய அணியினர் கடந்த 12ஆம் தேதி முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான BAN அணியில் முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல்-ஹசன், லிட்டான் தாஸ் உள்பட 16 பேர் இடம் பெற்றுள்ளனர்.
விண்வெளியில் வீரர்கள் வாக்களிக்க அமெரிக்க அரசு வழிவகை செய்துள்ளது. தேர்தல் அதிகாரிகள் விண்வெளி வீரர்களுக்கான <<14104028>>வாக்குச்சீட்டை<<>> நாசாவுடன் சேர்ந்து PDF வடிவத்தில் அனுப்புவர். வீரர்கள் தங்கள் விருப்பமான வேட்பாளரை கிளிக் செய்து நாசாவுக்கு திருப்பி அனுப்புவர். ரகசிய வாக்கெடுப்பை உறுதி செய்ய PDF பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்படும். 1997இல் டேவிட் வுல்ஃப் முதன்முறையாக விண்வெளியில் இருந்து வாக்களித்தார்.
ரயில்வேயில் 8,113 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி ஆன்லைனில் தொடங்கியுள்ளது. ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேலாளர் உள்ளிட்ட இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ரயில்வே ஆள்தேர்வு இணையதளத்தில் நேற்று முதல் பதிவு தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக். 13 கடைசி நாள் ஆகும். வயது வரம்பு 18-36 வரை ஆகும். இந்தத் தகவலை வேலைத் தேடும் நண்பர்களுக்கும் பகிருங்க.
பெரியாரையும் வணங்குவேன், பெருமாளையும் கும்பிடுவேன் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார். இந்து மதத்தை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவோர், திராவிட இயக்கங்கள் இந்துக்களுக்கு எதிரானவை என்று சாயம் பூசுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆன்மீகமும் நல்லது, இந்து மதமும் நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார். துரை வைகோவின் இந்த கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க? கீழே பதிவிடுங்கள்.
மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாமகவை அழைக்காதது ஏன் என்பது குறித்து விசிக விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி துணை பொது செயலாளர் S.S. பாலாஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பாமக பேசும் மது ஒழிப்பில் விசிகவுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறினார். சாதிய அரசியலால் ஏற்பட்டுள்ள அவப்பெயரை மறைக்க மது ஒழிப்பு குறித்து பாமக பேசுகிறது, அதனாலேயே சாதிய, மதவாத கட்சிகளை அழைக்கவில்லை என்றார்.
Sorry, no posts matched your criteria.