news

News September 15, 2024

திருமாவளவனுக்கு அன்புமணி எச்சரிக்கை

image

பாமகவை இழிவுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென விசிக தலைவர் திருமாவளவனுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாமகவை தரக்குறைவாக பேசுவதை நிறுத்தவில்லையெனில் பாமகவுக்கும் விசிகவை தரக்குறைவாக பேசத் தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மது ஒழிப்பில் பிஎச்டி பட்டம் வாங்கிய கட்சி பாமக. ஆனால் விசிகவோ எல்கேஜிதான் என்றும் விமர்சித்துள்ளார்.

News September 15, 2024

கொலிஜியம்: ஒப்புதலளிக்க தாமதம் ஏன் ? அரசு விளக்கம்

image

HC தலைமை நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க தாமதமாவது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்த வழக்கு SCஇல் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சில பிரச்னைக்குரிய தகவல் அரசிடம் இருப்பதே தாமதத்திற்கு காரணம் என்றும், விரைவில் சில தகவலை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று விசாரணை 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

News September 15, 2024

இட்லி தொண்டையில் சிக்கி பலி

image

ஒணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் நடந்த சாப்பாட்டு போட்டியில், இட்லி தொண்டையில் சிக்கிய முதியவர் உயிரிழந்தார். பாலக்காடு அருகே உள்ள கஞ்சிக்கோடு கொல்லப்புரா என்ற இடத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட சுரேஷ் என்பவர் வேகமாக சாப்பிட்ட போது, இட்லி தொண்டைக்குள் சிக்கியதில் மயங்கி விழுந்து பலியானார்.

News September 15, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤இலங்கை: 2025 பிப்ரவரியில் தனியார் பயன்பாட்டிற்காக வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்க இலங்கை அரசு முடிவு. ➤காங்கோ: ஆட்சியை கவிழ்க்க சதி செய்த அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு காங்கோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ➤ஈரான்: ISRC ஏவிய சம்ரான்-1 செயற்கைக்கோள் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ➤பாக்: தலிபான் ஆட்சி நடக்கும் ஆப்கனுக்கான பாக். தூதரை திரும்ப அழைத்து அந்நாடு உத்தரவிட்டது.

News September 15, 2024

படகு கவிழ்ந்து 64 பேர் பலி

image

நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 64 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்ஃபாரா மாநிலத்தில் 70 விவசாயிகளுடன் சென்ற மரபடகு விபத்தில் சிக்கியது. இதில் 6 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அந்த பகுதி விவசாயிகள் விவசாய பணிக்காக தினமும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆற்றைக் கடக்க 2 படகுகள் மட்டுமே உள்ளதால், சில நேரங்களில் கூட்ட நெரிசல் காரணமாக விபத்து ஏற்படுகிறது.

News September 15, 2024

விஜய் ஒரு சினிமா சொப்பனம்: பாஜக

image

விஜய் சிம்ம சொப்பனம் அல்ல, சினிமா சொப்பனம் என்று பாஜக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் பேசியபோது, MGR தவிர வேற சினிமா பிரபலங்கள் அரசியலில் ஜெயிக்கவில்லை என்று கூறினார். சிவாஜி, விஜயகாந்த், கார்த்திக் அரசியலில் தோல்வி அடைந்தனர். அதில் விஜய்யும் விதி விலக்கு அல்ல என்றும் தெரிவித்தார். விஜய் பற்றிய ராம ஸ்ரீனிவாசனின் விமர்சனம் குறித்து நீங்க என்ன நினைக்கறீங்க?

News September 15, 2024

₹2.02 லட்சம் கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

image

கடந்த 9 மாதங்களில் ₹2.02 லட்சம் கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதை ஜிஎஸ்டி டைரக்டர் ஜெனரலகம் கண்டுபிடித்துள்ளது. அதன் புள்ளி விவரத்தில், 2023இல் ₹1.01 லட்சம் கோடி வரிஏய்ப்பு நடந்ததாகவும், அதை விட 2 மடங்கு அதிக வரி ஏய்ப்பு 2024இல் நடைபெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பில் ₹82,000 கோடி அளவில் 78 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

News September 15, 2024

விளையாட்டு துளிகள்

image

*ஜெர்மனியில் நடைபெற்ற 13ஆவது ஐரோப்பிய டிராம் சாம்பியன்ஷிப்பில் புடாபெஸ்ட் (3,850) கோப்பையை வென்றது. *டைமண்ட் லீக்கில் ஆஸி., வீரர் மாத்யூ டென்னி 69.96 மீ., தூரம் வட்டு எறிந்து, 40 ஆண்டு லீக்கின் சாதனையை முறியடித்தார். *F4 இந்திய சாம்பியன்ஷிப்பில் பெங்களூரு ஸ்பீட்ஸ்டர்ஸ் அணி வென்றது. *வியட்நாம் ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இருந்து இந்தியாவின் துருவ் – தனிஷா ஜோடி உடல்நல குறைவு காரணமாக விலகியது.

News September 15, 2024

இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு…

image

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்பட்ட கறிக்கோழி விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. அந்தவகையில், கறிக்கோழி (உயிருடன்) விலை ஒரு கிலோ ₹2 உயர்ந்து ₹107ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலையில், எவ்வளவு குறைந்தாலும் சில்லறை விற்பனை விலையில் அதனை விற்பனையாளர்கள் அமல்படுத்துவதில்லை. இதனால், இன்று சில்லறை விற்பனையில் 1 கிலோ கோழி இறைச்சி ₹200 முதல் ₹220 வரை விற்பனையாகிறது.

News September 15, 2024

சற்றுமுன்பு: மலையாளத்தில் ஸ்டாலின் ஓணம் வாழ்த்து

image

ஓணம் பண்டிகையையொட்டி CM ஸ்டாலின் மலையாளத்தில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், உலகம் முழுவதும் உள்ள மலையாளிகளுக்கு எனது இதயம் நிறைந்த ஓணம் பண்டிகை வாழ்த்து எனக் கூறியுள்ளார். மிகப்பெரும் பேரிடரிலிருந்து மீண்டுவரும் கேரளாவில் வாழும் திராவிட சகோதர, சகோதரிகளுக்கு இப்பண்டிகை நம்பிக்கை மற்றும் சக்தியை தரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!