news

News September 15, 2024

JUST NOW: இபிஎஸ் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு

image

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் இன்று பங்கேற்க இருந்த பொதுக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அண்ணா பிறந்தநாளையொட்டி, மதுரவாயலில் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் இபிஎஸ் உரை நிகழ்த்துவதாக இருந்தது. இந்நிலையில் அந்தக் கூட்டத்தை வருகிற 21ம் தேதிக்கு அதிமுக ஒத்திவைத்துள்ளது. நிர்வாகி ஒருவர் உயிரிழந்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

News September 15, 2024

மழைநீர் வடிகால்: அக்.15 கெடு

image

மழைநீர் வடிகால் பணியை அடுத்த மாதம் 15க்குள் முடிக்க தலைமைச் செயலாளர் முருகானந்தம் கெடு விதித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழைகாலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது. இதைத்தடுக்க மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், தலைமைச் செயலகத்தில் நடந்த கூட்டத்தில் அக்டோபர் 15ம் தேதிக்குள் அதை செய்து முடிக்கும்படி முருகானந்தம் உத்தரவிட்டார்.

News September 15, 2024

அண்ணா வழியில் அதிமுக பயணிக்கும்: இபிஎஸ்

image

சமத்துவ சமுதாயம் காண அண்ணா வழியில் அதிமுக அயராது உழைக்கும் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். அண்ணா பிறந்த நாளையொட்டி அவர் Xஇல் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டுக்கு புதிய அரசியல் பாதையை வகுத்து தந்த அரசியல் பேராசான் அண்ணா என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இதனிடையே, அண்ணா சாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு இபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

News September 15, 2024

EB பில்லை குறைக்கும் ரகசியம் AC ரிமோட்டில் இருக்கு!

image

AC பயன்பாடு அதிகமாக இருப்பதால் மின் கட்டணமும் அதிகரிக்கிறது. இதனை குறைக்க AC ரிமோட்டில் ஒரு சூட்சமம் உள்ளது. அதாவது, டெம்ப்ரேச்சரை ஒரு டிகிரி கூட்டுவதன் மூலம் 6% மின் உபயோகத்தை குறைக்க முடியுமாம். AC டெம்ப்ரேச்சரை 20°C பதிலாக, 24°C வைத்து உபயோகித்தால் 24% மின்சாரத் தேவையை குறைக்கலாம். அதே போல இரவு முழுவதும் AC ஓடுவதை தவிர்க்க ரிமோட்டில் உள்ள ‘டைமர்’ வசதியை உபயோகித்து Auto-Off செய்யலாம்.

News September 15, 2024

களை எடுக்க ஸ்டாலின் முடிவு?

image

திமுகவில் குறுநில மன்னர்கள் போல செயல்படும் நிர்வாகிகளை களை எடுக்க CM ஸ்டாலின் முடிவு செய்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அக்கட்சியின் பவள விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. அப்போது, திமுக கட்சி நலனுக்காக சில அதிரடி முடிவுகள், அறிவிப்புகளை அவர் எடுப்பார் எனக் கூறப்படுகிறது. அப்போது மூத்த தலைவர்கள் பலரின் சுமையை குறைத்து, இளம் தலைமுறைக்கு பொறுப்புகளை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

News September 15, 2024

ஒணம் பண்டிகை எதிரொலி: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

image

ஓணம் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று கிலோ ₹1500க்கு விற்ற மல்லிகை இன்று ₹2500க்கு விற்கப்படுகிறது. மேலும், கனகாம்பரம் ₹1100, மல்லி ₹1300க்கு விற்பனையாகிறது. அரளி பூ ₹80, செண்டுமல்லி ₹70, சாமந்தி பூ ₹120, சம்பங்கி பூ ₹80 உள்ளிட்ட பூக்கள் இன்று ₹10 – ₹20 வரை விலை அதிகரித்துள்ளது. பூக்களின் வரத்து குறைந்ததால், விலை அதிகரித்ததாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

News September 15, 2024

டிஜிபிக்களுக்கு அமித் ஷா உத்தரவு

image

தாக்குதல் ட்ரோன், ஆன்லைன் மோசடியால் பிரச்னை ஏற்படும் முன்பு, தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்களுக்கு அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான 2 நாள் டிஜிபிக்கள் மாநாட்டில் அவர் பேசினார். அப்போது, தீவிரவாத ஒழிப்பு பணிகளில் என்ஐஏவும், காவல்துறையும் இணைந்து செயல்படவும், 2047க்குள் வளர்ந்த, வலுவான இந்தியா என்ற மோடியின் லட்சியத்தை சாத்தியமாக்க பணியாற்றவும் கேட்டுக் கொண்டார்.

News September 15, 2024

அண்ணா பிறந்தநாள்: முதல்வர் மரியாதை

image

அண்ணாவின் 116ஆவது பிறந்த தினத்தையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு, கனிமொழி எம்.பி, ஆ.ராசா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி ஏராளமான திமுக தொண்டர்கள் அங்கு குவிந்ததால், காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

News September 15, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) அணுக்கரு இயற்பியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 2) சோகத்தை வெளிப்படுத்தும் ராகம் எது? 3) திமிங்கலத்தின் உடலில் எவ்வளவு ரத்தம் உள்ளது? 4) சிப்பியில் முத்து உருவாக எத்தனை ஆண்டுகள் ஆகும்? 5)உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது? 6) 100% மறுசுழற்சி செய்யப்படும் பொருள் எது? 7) தூய்மையான நீரின் pH மதிப்பு எவ்வளவு? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News September 15, 2024

அனுபவம் இல்லா நிர்வாகிகள்.. தாங்குவாரா விஜய்?

image

தவெக கட்சியை ஆரம்பித்த விஜய், கையோடு மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார். தற்போது வரை அவர் கட்சியில் மாநாடு நடத்திய அனுபவம் கொண்ட யாரும் இல்லை. அனைவரும் அனுபவம் இல்லாத நிர்வாகிகள்தான். இதனால், வெளியில் இருந்து வரும் அழுத்தங்களை அவர் தனி ஆளாக தாங்குவாரா? என அரசியல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து உங்கள் அபிப்ராயத்தை கீழே பதிவிடுங்கள்.

error: Content is protected !!