India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி முதல்வர் பதவியிலிருந்து விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து அண்மையில்தான் அவர் வெளிவந்தார். இந்த சூழலில், டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், 2 நாள்களுக்குப் பிறகு பதவி விலக போவதாகவும், மக்கள் தீர்ப்பு அளிக்கும் வரை முதல்வர் பதவியில் அமர போவதில்லை என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக, திமுக உள்ளிட்ட எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதற்கான சூழல் தமிழகத்தில் உருவாகாது என்றும் குறிப்பிட்டார். கூட்டணி ஆட்சி என்பது நிலையாக இருக்காது என்றும், மக்கள் நலனில் சமரசம் செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகில் உள்ள 820 கோடி மக்களில் வெறும் 4.3% பேர் மட்டுமே பூரண உடல்நலத்துடன் உள்ளதாக Global Burden of Disease ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், 1990 – 2013 வரையில், 188 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 95.7% பேர் ஏதாவது ஒரு நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். 50% பேர் தசை தொடர்பான பிரச்னை, மனநலம், போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான நோய்களால் அவதிப்படுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை விதிகளின்படி (139A), ஒரு நபர் இரண்டு பான் கார்டுகளை வைத்திருக்க கூடாது. இரண்டு கார்டுகள் இருந்தால் ஐடி சட்டம் 1961 பிரிவு 272இன் கீழ் ₹10,000 அபராதம் விதிக்கப்படும். எனவே இரு அட்டைகள் இருந்தால் ஒன்றை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். வரி செலுத்துவோரது நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும், முறைகேடுகளைச் சரிபார்க்கவும் 10 இலக்க எண் கொண்ட Pan Card-ஐ மத்திய அரசு ஒதுக்குகிறது.
மீட்டரை மக்களே தனியாரிடம் வாங்கலாம் என்று TANGEDCO தெரிவித்துள்ளது. புதிய மீட்டர் பொருத்த, பழுதான மீட்டரை மாற்ற TANGEDCO மீட்டருக்கு மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஹோலி மீட்டர்ஸ், கேபிடல் பவர் சிஸ்டம்ஸ், லிங்க்வெல், ஸ்நைய்டர் எலக்ட்ரிக், எச்பிஎல் எலக்ட்ரிக், செக்யூர் நிறுவன மீட்டர் வாங்கி அளித்தால், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருத்தி தரப்படும் என தெரிவித்துள்ளது.
எல்கேஜி படித்தாலும் தங்களுக்கும் சமூக பொறுப்பு உள்ளது என்று <<14105963>>அன்புமணிக்கு<<>> திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். சிதம்பரத்தில் முதலில் தாம் போட்டியிட்டபோது நிகழ்ந்த மிகப்பெரிய வன்முறைக்கு பாமகவே காரணம், ஆனாலும் அதை மறந்து அக்கட்சியுடன் தமிழர் நலனுக்காக கூட்டணி சேர்ந்ததாக அவர் கூறினார். பிறகு விசிகவுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்பட்ட அவதூறால் விலகியதாகவும் அவர் தெரிவித்தார்.
விராட் கோலியிடம் இருந்து பாக். கேப்டன் பாபர் அசாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமென அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “கேப்டன் பதவி என்பது சிறிய விஷயம். பதவியில் இல்லாவிட்டாலும், அணியின் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு கோலி விளையாடுகிறார். அவரை போல பாபரும் தனது உடற்தகுதி & பணியில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வித் தொலைக்காட்சியில் நாளை முதல் 20ம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நேரலையாக காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் என்றும், பிறகு மறுஒளிபரப்பு இரவு 7- 9 மணி வரை ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
உத்தராகண்டில் சிக்கியுள்ள 30 தமிழர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். வானிலை சீரானதும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் நடவடிக்கை தொடங்கும் என்றும், அனைவரும் தற்போது பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலூரில் இருந்து சென்ற 30 சுற்றுலா பயணிகள் நேற்று அங்கு நடந்த நிலச்சரிவில் சிக்கினர்.
அவசர தேவை, பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களால் Second Hand பொருட்களை வாங்குவார்கள். எந்த காரணமாக இருந்தாலும் சரி, ஹேர் ரீமுவல் டிவைஸ்களை Second Handஇல் வாங்கவே கூடாது என டெக்கிஸ் அறிவுறுத்துகிறார்கள். பிறர் பயன்படுத்திய Razors, Epilators மூலம் அலர்ஜி, எரிச்சல், பாக்டீரியா & வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ளது. இதுபோன்ற பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள புதிய பெர்சனல் கேர் கருவிகளை வாங்கி பயன்படுத்தவும்.
Sorry, no posts matched your criteria.