India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் விஷால் தரிசனம் செய்தார். மூலவர் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையில் கலந்து கொண்ட அவர், சண்முக விலாசம் மண்டபம் முன்பு மனம் உருகி வேண்டிக் கொண்டார். கோயிலுக்கு வெளியே ரசிகர்கள் அவரை சூழ்ந்த கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நடிகர் விஷாலுடன் திருச்சி ஆதீனமும் இணைந்து சாமி தரிசனம் செய்தனர்.
அசைவ உணவுகளை எடுத்து கொண்ட பிறகு சில உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் அது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். பொதுவாக உணவு எடுத்துக் கொண்ட பிறகு செரிமான உறுப்புக்கள் அமிலங்களை சுரக்கும். இந்த நேரத்தில் ஐஸ்கிரீம், சோடா போன்ற குளிர்ச்சியான உணவுகளை எடுப்பது அதனை மட்டுப்படுத்துவதோடு, அஜீரணம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே இவற்றை உடனே உட்கொள்ளாதீர்கள்.
நடிகர் விஜய் கட்சியோடு, DMDK கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சி துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பதிலளித்துள்ளார். முதலில் விஜய் தனது மாநாட்டை நடத்தி முடித்துவிட்டு, தனது கட்சி கொள்கைகள் குறித்து அறிவித்தால் அதன் பிறகு கூட்டணி குறித்து பேசலாம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால் மகிழ்ச்சி என்றும், கடந்த 2016 தேர்தலில் அதை வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில், அவரது சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைப்போம் என உறுதியளித்தார். அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்ற எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாகவும், அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கட்சி பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மலையாள தேசத்தில் மகாபலி மன்னரை வரவேற்கும் வகையில், வாசலில் அத்திப்பூ கோலமிட்டும், நடனமாடியும் மகிழ்ச்சியுடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஓணத்தை அழகாக கேரள சேலையில் பிரபல நடிகைகளும் கொண்டாடி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். இணையத்தில் அதிக லைக்ஸ் குவித்து இருக்கும் அவர்களின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…
சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 20% உயர்த்தி இருப்பது தெரிந்ததே. இதனால் அனைத்து வகை எண்ணெய்களின் விலையும் லிட்டருக்கு ₹20 வரை அதிகரித்துள்ளது. இது நுகர்வோர் மீதான நிதி சுமையை மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ரீடைல் கடைகளில் பாமாயில் ₹100இல் இருந்து ₹115 ஆகவும், சன்ஃபிளவர் ஆயில் ₹115இல் இருந்து ₹140 ஆகவும், கடலை எண்ணெய் ₹155இல் இருந்து ₹165 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினத்தை முன்னிட்டு நாளை (16.09.2024) சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 டோக்கன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல் 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையையொட்டி TVK தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் அவர், “மலையாள சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்” என்று தமிழிலும், மலையாளத்திலும் பதிவிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது சர்ச்சையான நிலையில், விஜய்யின் ஓணம் வாழ்த்தை சில அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
டெல்லி CMஆக ஆம் ஆத்மியை சேர்ந்த ஒருவர் விரைவில் பதவியேற்பார் என்று <<14107241>>கெஜ்ரிவால் <<>>தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நவம்பரில் தேர்தல் நடத்தும்படி வலியுறுத்துவதாக கூறினார். தேர்தல் நடக்கும் வரை ஆம் ஆத்மியை சேர்ந்த ஒருவர் CMஆக இருப்பார், 2-3 நாள்களில் எம்எல்ஏக்கள் அவரை தேர்வு செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.
ஆப்கனில் கிரிக்கெட்டை படிப்படியாக தடை செய்ய தலிபான்கள் அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட், ஷரியா சட்டத்திற்கு எதிரானதாக இருப்பதாக தலிபான் தலைவர் ஹிபத்துல்லா நம்புகிறார். இதன் காரணமாக கிரிக்கெட் தடை செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி வளர்ந்து வரும் ஆப்கன் அணியினரின் தலைமேல் இடி இறக்குவது போல வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.