India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி TVK தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான X பதிவில் “சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியது. ‘மதராஸ் மாநிலம்’ என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றியது. தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த அண்ணாவின் பிறந்தநாளில், அவரது பணிகளை போற்றி மகிழ்வோம்” எனக் கூறியுள்ளார்.
2023 -24ஆம் நிதியாண்டில், நாடு முழுவதும் ₹2.01 லட்சம் கோடி மதிப்பிலான GST மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. GST புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் ₹70,985 கோடி மோசடி நடந்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் டெல்லி (₹18,313 கோடி), புனே (₹17,328 கோடி), குருகிராம் (₹15,502), ஹைதராபாத் (₹11,081 கோடி) வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்கவுள்ளார். BAN அணிக்கு எதிரான விளையாடவுள்ள அவர், தனது உடற்தகுதி & ஆட்டத் திறனை மேம்படுத்த சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸின் 25ஆவது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக ‘RL 25’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தை வீரா, கில்லாடி போன்ற படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
பிஎஸ்எப், சிஆர்பிஎப், எஸ்எஸ்பி, அசாம் ரைபிள், CISF, உள்ளிட்டவற்றில் 39,481 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 14ம் தேதி கடைசி நாளாகும். வயது வரம்பு 18- 23 வரை ஆகும். கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். வேலைக்கான தேர்வுகள் 2025 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது. கூடுதல் தகவலுக்கு https://ssc.gov.in/login காணலாம். SHARE IT
தமிழகத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தியில் புதிய உச்சம் எட்டப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் தேதி சூரிய சக்தி மூலம் 6,090 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதற்கு முன்பு செப்டம்பர் 7ஆம் தேதி 5,985 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டதே அதிகபட்ச அளவாக இருந்தது. இந்த எண்ணிக்கை விரைவில் 10 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரிக்கப்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இன்று 10 மணிக்கு GK வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) எர்னஸ்ட் ரூதர்போர்ட் 2) கரஹரப்ரியாவின் முகாரி ராகம் 3) 8,000 லிட்டர் 4)15 ஆண்டுகள் 5) இந்தியா 6) கண்ணாடி 7) 7 pH இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
ஓணத்துக்கு விஜய் வாழ்த்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓணத்துக்கு விஜய் இன்று காலை வாழ்த்து தெரிவித்ததை சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி, தமிழ் புத்தாண்டுக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும், ஆனால் மலையாளிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்றும் பதிவிட்டு வருகின்றனர். விஜய் செய்தது சரியா? கமெண்ட் பதிவிடுங்க
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ‘ரத்தமாரே’ படக்குழுவினர் வாழ்த்து பெற்றுள்ளனர். மூன்று பேரின் வாழ்வில் ‘அச்சம், மடம், பயிர்ப்பு’ என்ற 3 கோணங்களில் நடக்கும் சம்பவங்களை திரைக்கதையாக கொண்டு ‘ரத்தமாரே’ படம் உருவாகி இருப்பதாக தெரிகிறது. அறிமுக இயக்குநர் தினேஷா ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் லிவிங்ஸ்டன், அம்மு அபிராமி, வையாபுரி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பயத்தில் ஆழ்த்தி சம்மதத்துடன் உறவு கொண்டாலும் பலாத்காரமே (ரேப்) என்று அலகாபாத் HC தீர்ப்பளித்துள்ளது. ஆக்ராவை சேர்ந்தவர் தொடுத்த மேல்முறையீடு மனு, அலகாபாத் HCஇல் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் 2 பேரும் நன்கறிவர், ஆதலால் இது ரேப் இல்லை என வாதிடப்பட்டது. இதை ஏற்காத நீதிபதிகள், ஏமாற்றியோ (அ) பயத்தில் ஆழ்த்தியோ சம்மதத்துடன் உறவு கொண்டாலும் பலாத்காரம்தான் என தீர்ப்பளித்தது.
Sorry, no posts matched your criteria.