India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் நாளை வெப்பம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. பல மாவட்டங்களில் வெப்பநிலை மந்தமாகவே இருந்தது. இந்நிலையில், நாளை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரித்தது குறிப்பிடத்தக்கது.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் பேச்சாலும் செயலாலும் எதிரிகளைக் கூட கவர்ந்து விடுவீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆண்டியோ அரசனோ எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பழகும் பண்பும்,
நேர்மை, ஒழுக்கம், உண்மை, அறிவு ஆகியவற்றை மதிக்கும் குணமும் கொண்டிருப்பீர்கள். கற்பனை வளம், கலை ஆர்வம் உங்களிடம் இருக்கும் என்கிறது சாஸ்திரம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்டில் சொல்லுங்கள்.
UPI பரிவர்த்தனை மூலம் வரி செலுத்துவதற்கான உச்சவரம்பு ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. மேலும், மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனைகளின் உச்ச வரம்பு அதிகரிப்பும் நாளை அமலாகிறது. முன்னதாக ₹1 லட்சம் வரை UPI பரிவர்த்தனை மூலம் வரி செலுத்த முடியும். வரி செலுத்துவதை எளிமையாக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ள படம், கிராமத்து கதையம்சம் கொண்டதாக இருக்கும் என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். ‘திருச்சிற்றம்பலம்’ பட வெற்றிக்கு பின்னர் இருவரும் இணையும் புதிய படத்திற்கு, தற்காலிகமாக ‘DD4′ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது தனுஷ் இயக்கும் 4ஆவது திரைப்படமாகும். இதில் அருண் விஜய், அசோக் செல்வன் மற்றும் ராஜ்கிரண் ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யலாம் என கூறியுள்ளது.
விராட் கோலி தன்னுடைய Captaincy-யில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியதாக பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இன்று இந்திய அணியில் விளையாடும் பல வீரர்கள் தன்னுடன் விளையாடியவர்கள் தான் என்றும், தசைநார்களில் காயம் ஏற்பட்டதால் கிரிக்கெட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அன்றைய சூழலில் தான் ஒரு நல்ல கிரிக்கெட்டர் என கூறியுள்ளார்.
உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழர்கள் 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு CM ஸ்டாலின் இன்று காலை அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, 30 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் நாளை இரவு டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை அழைத்துவரப்பட உள்ளனர். தற்போது அவர்கள் தட்சுல்லா என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
2023- 24ஆம் நிதியாண்டில், GST வரி ஏய்ப்பு ₹2.01 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. துறை வாரியான அதன் விவரம்: ➤ஆன்லைன் விளையாட்டு – ₹81,875 கோடி ➤நிதி & காப்பீட்டு துறை – ₹18,961 கோடி ➤உலோகத் துறை – ₹16,806 கோடி ➤பான் மசாலா, புகையிலை, சிகரெட் – ₹5,794 கோடி ➤பணி ஒப்பந்தத் துறை – ₹2,846 கோடி ➤பிளைவுட், டிம்பர் & பேப்பர் – ₹1,196 கோடி ➤மின்னணு பொருட்கள் – ₹1,165 கோடி ➤மருத்துவத் துறை – ₹40 கோடி.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ₹1000 திட்டத்தின் இம்மாதத்திற்கான தவணை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ₹1000 வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு புதிதாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாக தெரிகிறது. உங்கள் கணக்கில் பணம் வந்ததா? செக் பண்ணுங்க.
பிஹாரில் ஆட்சிக்கு வந்தால் 1 மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். ‘ஜன் சுராஜ்’ அமைப்பின் தலைவரான அவர், மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வர வேண்டுமே தவிர, மொத்தமாக தடை விதிக்க முடியாது என்றார். இதனால் பிஹாருக்கு வர வேண்டிய ₹20 ஆயிரம் கோடி கலால் வரி கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். பிஹாரில் 2025இல் நடைபெறவுள்ள தேர்தலில் அவர் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளார்.
Sorry, no posts matched your criteria.