news

News September 15, 2024

மதிப்பீட்டுத் தேர்வு: அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு

image

கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துவது தொடர்பாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், பள்ளிக் கல்வித்துறை சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அதில், தேர்வுக்கான வினாத்தாள் ‘மாநில மதிப்பீட்டுப் புலம்’ இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும், தேர்வுக்கு ஒருநாள் முன்பாக வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஏதேனும் சிக்கல் இருந்தால் ‘14417’ என்ற உதவி மைய எண்ணை அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News September 15, 2024

திருமாவளவன் எதை சார்ந்து இருக்கிறார்? – L.முருகன்

image

சாதி, மத அமைப்பு என பிறரை குறிப்பிடும் முன்பு, திருமாவளவன் என்ன அமைப்பை நடத்துகிறார் என்பதை உணர வேண்டும் என Union Min. L.முருகன் வலியுறுத்தியுள்ளார். குறிப்பிட்ட சாதியின் கட்சித் தலைவராக அவர் உள்ளதாக குறிப்பிட்ட முருகன், பிறரை கூறும் முன்பு தன்னை ஒருமுறை திருமா., சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார். மேலும், விசிக குறிப்பிட்ட சமுதாய மக்களுக்காகவா? தமிழக மக்களுக்காகவா? எனவும் அவர் வினவியுள்ளார்.

News September 15, 2024

ஸ்ரேயாஸ் அணி 2ஆவது தோல்வி

image

துலிப் கோப்பை தொடரின் 2ஆவது சுற்றில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி (இந்தியா டி) தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியா ஏ அணியுடன் நடைபெற்ற போட்டியில் 488 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்தியா டி அணி 301 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி 186 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம், நடப்பு தொடரில் இந்தியா டி அணி 2ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.

News September 15, 2024

அண்ணா பிறந்தநாள்: திமுகவுக்கு தகுதி இல்லை

image

அண்ணா பிறந்தநாளை கொண்டாட திமுகவுக்கு தகுதி இல்லை என்று அதிமுக விமர்சித்துள்ளது. அண்ணா பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர், கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் ஒரு திட்டத்திற்கு கூட அண்ணா பெயரை திமுக அரசு வைக்கவில்லை, கருணாநிதி புகழை பாடி கொண்டுள்ளது என்று சாடினார். அண்ணா கொள்கை மறைக்கப்பட்டு RSS கிளையாக திமுக மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்

News September 15, 2024

6-9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு

image

நடப்பு கல்வியாண்டிற்கான கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு அக்டோபர் முதல் ஜனவரி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், அக்.7-10ஆம் தேதி வரை முதல்கட்ட தேர்வு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6-9ஆம் வகுப்பு வரை படிக்கு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக அவ்வப்போது இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

News September 15, 2024

இயக்குநர் தமிழுடன் இணையும் ‘#கார்த்தி 29’

image

கார்த்தியின் 29வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர் தயாரிக்கும் இப்படத்தை ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய தமிழ் இயக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ல் படம் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 1960ல் நடந்த கேங்ஸ்டர் கதையை மையப்படுத்தி படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது. அதற்கேற்ப, பிளாக் & வொயிட்டில் கடலில் கப்பல் செல்வது போன்ற போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

News September 15, 2024

அப்படி தோணுச்சுனா Retired ஆயிடுவேன்: அஸ்வின்

image

எனக்கு இது போதும் எனத் தோன்றும் போது, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். எப்போதுமே, எதிர்காலத்தை கணக்கில் வைத்துக்கொண்டது கிடையாது எனக் கூறிய அவர், இன்று மட்டுமே தான் வாழ விரும்புகிறேன் என்றார். மேலும், வயதாகும்போது கூடுதல் பயிற்சி தேவை என்பதால், கடந்த 3 ஆண்டுகளாக கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News September 15, 2024

FLASH: விசிகவுக்கு பாஜக ஆதரவு

image

திருமாவளவன் கூட்டணியில் அதிகாரப் பகிர்வு கேட்பது நியாயமான கோரிக்கை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், அவரின் கோரிக்கைக்கு பாஜக 100% ஆதரவு தருவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, 1977ஆம் ஆண்டு முதல் மத்தியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவதாக சுட்டிக் காட்டிய திருமா, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றாலும் கூட, அதிகாரத்தை சமமாக பகிர்ந்துள்ளதாக பாராட்டியிருந்தார்.

News September 15, 2024

‘Worst..’ ஓலா ஸ்கூட்டர் வாங்கிய விரக்தியில்..!

image

பெங்களூருவில் ஓலா EV ஸ்கூட்டர் வாங்கிய விரக்தியடைந்த பெண் ஒருவரின் பதிவு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எதற்கும் பயனற்ற EV, இதை வாங்க வேண்டாம் என எழுதிய பதாகையை வண்டியின் முன் வைத்து எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். அடிக்கடி breakdown, சாப்ட்வேர் பிரச்னைகளின் விரக்தியில் அவர் இதை செய்துள்ளார். சமீபத்தில் ஓலா EV வாங்கிய ஒருவர், வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தீ வைத்தது குறிப்பிடத்தக்கது.

News September 15, 2024

அவரு எங்கயும் போகமாட்டார்: அப்பாவு

image

திமுக கூட்டணியை விட்டு திருமாவளவன் எங்கும் செல்ல மாட்டார் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். மதுவிலக்கு குறித்த திமுகவின் கொள்கைகளை, 2016 தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்த அவர், திருமாவளவன் கருத்து குறித்து CM ஸ்டாலின் விளக்கம் தந்துவிட்டதாகவும் கூறினார். முன்னதாக அக்.2 மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு திருமா., அழைப்பு விடுத்திருந்தார்.

error: Content is protected !!