India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெலுங்கு ரசிகர்களுடன் குஷ்பு கலந்துரையாடினார். அப்போது குஷ்பு கோயில் குறித்து அவர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய நேரத்தில் படங்களில் பிஸியாக இருந்தேன். தமிழும் படிக்க தெரியாது. அதனால் எனக்கு கோயில் கட்டுவதையே நான் அறியவில்லை. அது தெரியவந்த பிறகு, அதனை தடுக்க விரும்பினேன். ஆனால் தாமதமாகி விட்டதால் அப்படியே விட்டுவிட்டேன்” எனக் கூறினார்.
➤சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கு செபாஸ்டியன் கோ உள்பட 7 பேர் போட்டியிட முடிவு. ➤குவாடலராஜா ஓபன் டென்னிஸ்: ஆஸி., வீராங்கனை ஒலிவியாவை வீழ்த்தி போலந்து வீராங்கனை மகதலேனா ஃபெச் சாம்பியன் பட்டம் வென்றார். ➤ICC ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் & வீராங்கனை விருதுகளை வெல்லாலகே & ஹர்ஷிதா வென்றனர். ➤ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை: இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவுடன் இன்று மோதவுள்ளது.
➤ஆப்கானிஸ்தான்: குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் பணியை தலிபான் அரசு நிறுத்தியுள்ளது. ➤பிலிப்பைன்ஸ்: தலைநகர் மணிலாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. ➤சீனா: பெபின்கா புயல் கரையை கடக்கும்வரை 500 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது. ➤பப்புவா நியூ கினியா: பழங்குடியின குழுக்கள் இடையே மோதலில் 50 பேர் உயிரிழப்பு.
மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றிற்கும் இன்று விடுமுறை ஆகும். அதேபோல், தமிழகம் முழுவதும் இன்று அனைத்து வங்கிகளும், ரேஷன் கடைகளும் இயங்காது. குறிப்பாக, டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கதேச அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என கவாஸ்கர் IND வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். PAK அணியை அதன் சொந்த மண்ணில் BAN வீழ்த்தி சாதித்துள்ளதாகவும், அனைத்து வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 4 மாதத்தில் நடைபெறும் 10 டெஸ்ட் போட்டிகளில் IND அணி குறைந்தது 5 போட்டிகளில் வென்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குக்கு செல்ல முடியும் என்றார்.
தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியமில்லை என ப.சிதம்பரம் கூறியுள்ளார். குறைந்தபட்சம் அரசியலமைப்பில் 5 திருத்தங்கள் மேற்கொண்டால் மட்டுமே ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியம் என்றும், ஆனால் காங்கிரஸ் அதை கடுமையாக எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தை நிறைவேற்றும் அளவுக்கு மக்களவை, மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் தெரிவித்தார்.
பஞ்சபூத தலங்களில் நீர் தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை வழிபட்டால் துன்பங்கள் நீர்போல விலகும் என்பது ஆன்றோர் வாக்கு. பிரம்மனுக்கு ஈசனும், ஈஸ்வரியும் மாறுவேடத்தில் காட்சித்தந்த இத்தலத்திற்கு கோச்செங்கட்சோழன் கோயில் கட்டி எழுப்பியதாக ஸ்தல புராணம் கூறுகிறது. இங்குச் சென்று, இறைவனுக்கு வில்வ மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, தேவாரம் பாடி வணங்கினால் வாழ்வில் மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம்.
Debit card இல்லாமல் UPI வாயிலாக ATMல் டெபாசிட் செய்யும் வசதி விரைவில் அனைத்து வங்கிகளிலும் அறிமுகமாக உள்ளது. ஏற்கெனவே, Axis, யூனியன் வங்கி ATMகளில் இவ்வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதை மற்ற வங்கிகளும் விரைவில் விரிவுப்படுத்த உள்ளன. ATM ஸ்கிரீனில் தோன்றும் QR கோடை UPIல் ஸ்கேன் செய்து, ரகசிய எண்ணை பதிவு செய்து பணத்தை வைத்தால் டெபாசிட் ஆகிவிடும். இதில் அதிகபட்சமாக ₹50,000 வரை டெபாசிட் செய்யலாம்.
மருத்துவர்களின் 4 கோரிக்கைகளில் 3ஐ ஏற்பதாக மேற்குவங்க CM மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் மருத்துவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, காவல் ஆணையர், இணை ஆணையர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளை நீக்க சம்மதம் தெரிவித்தார். மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் கூறினார். பயிற்சி மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி, சீனாவுடன் இன்று மோதுகிறது. ஏற்கெனவே லீக் போட்டியில் 3 – 0 என்ற கோல் கணக்கில் சீனாவை இந்தியா துவம்சம் செய்திருந்தது. இந்நிலையில், மாலை 3.30 மணிக்கு மகுடத்திற்கான இறுதி சுற்றில் இந்திய அணி விளையாடவுள்ளது. முன்னதாக, 3ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் கொரியா அணிகள் மோதுகின்றன. All the best team India.
Sorry, no posts matched your criteria.