news

News September 17, 2024

6 சார் பதிவாளர் அலுவலகங்களில் ரெய்டு

image

தமிழகத்தில் 6 சார் பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். குடியாத்தம், விக்கிரவாண்டி, பொன்னேரி, திருக்கோவிலூர், காடாம்புலியூர் (கடலூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.11.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சார் பதிவாளர் அலுவலகங்களில் சோதனை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 17, 2024

74வது பிறந்தநாள்: மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து

image

74ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடும் பிரதமர் மோடிக்கு பாஜக தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். திரிபுரா முதல்வரும், பாஜக மூத்தத் தலைவருமான மாணிக் சாகா வெளியிட்ட பதிவில், பாரத தாயின் மகன், தொலைநோக்குத் தலைவருக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார். அதேபோல், பல்வேறு மாநில முதல்வர்கள், பாஜக மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News September 17, 2024

பருப்பு, பாமாயில் விலை அதிகரிப்பு

image

அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட விளைச்சல் குறைவு, வரத்து பாதிப்பால் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. பாமாயில் லிட்டருக்கு ₹19 உயர்ந்துள்ளது. கடலை பருப்பு கிலோ ₹20, துவரம் பருப்பு ₹10, உளுந்து, சிறுபருப்பு ₹5 உயர்ந்துள்ளது. மிளகு விலை கடந்த மாதத்தை காட்டிலும் ₹100 அதிகரித்துள்ளது. இதேபோல் அனைத்து மளிகை பொருள்களும் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

News September 17, 2024

புதிய வரலாறு படைப்பாரா அஷ்வின்?

image

BAN தொடரில் 9 விக்கெட் எடுத்தால், அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த IND வீரர் என்ற சாதனையை அஷ்வின் படைப்பார். முன்னாள் வீரர் ஜாகீர் கான் 31 விக்கெட் எடுத்துள்ள நிலையில், அஷ்வின் 23 விக்கெட் எடுத்துள்ளார். அதே போல், டெஸ்ட் சாம்பியன் வரலாற்றில் நாதன் லயனும், அஷ்வினும் தலா 10 முறை, 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். அதை முறியடித்து முதல் இடத்திற்கு அவர் செல்ல 5 விக்கெட் தேவைப்படுகிறது.

News September 17, 2024

Finance Tips: ‘ஓவர் டிரேடிங்’ வணிகம் செய்யாதீர்!

image

பங்குச்சந்தையில் லாபகரமான வர்த்தகராக இருக்க விரும்புபவர்கள் தங்களுக்கென எப்போதுமே தனி நிதி மேலாண்மை கொள்கையை வைத்திருக்க வேண்டும். பங்குச்சந்தையில் அதிக லாபம் & நஷ்டம் ஏற்படும்போது ‘ஓவர் டிரேடிங்’ சேருவது மூலதனத்தை இழக்கச் செய்து விடும். எனவே, பயனுள்ள வகையில் பணத்தை எங்கே, எதில், எப்படி, எவ்வளவு முதலீடு செய்வது? ரிஸ்க் – வெகுமதி விகிதம், வர்த்தக மோசடி போன்ற விஷயங்களை அறிந்திருக்க வேண்டும்.

News September 17, 2024

தேசியக் கொடி ஏந்தினால் வேலை: அமித் ஷா

image

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் நாளை தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், ரம்பன் மாவட்டத்தில் அமித் ஷா நேற்று பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது: தீவிரவாதிகளை விடுவிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் போராடுகின்றன. தீவிரவாதத்தை வேரறுக்க பாஜக உறுதிப்பூண்டுள்ளது. தேசியக் கொடி ஏந்தினால் வேலை வழங்குவோம். கல்லையோ, துப்பாக்கியையோ தொட்டால் சிறையில் இடம் வழங்குவோம்” எனக் கூறினார்.

News September 17, 2024

JUST NOW: மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து

image

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மரியாதைக்குரிய பிரதமர் மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

News September 17, 2024

குஷ்பு கோயில் இருக்கா இல்லையா?

image

குஷ்புவுக்கு தமிழ் ரசிகர்கள் கட்டிய <<14120187>>கோயில்<<>> எங்கே உள்ளது என இதுவரை உறுதியான தகவல்கள் இல்லை. திருச்சியின் குண்டூர் பர்மா காலனியில் பல ஆண்டுகளுக்கு முன்பு குஷ்புவுக்கு கோயில் கட்ட அவரது ரசிகர்கள் முயற்சித்ததாகவும், ஆனால் அது கைவிடப்பட்டதாகவும் பிரபல பத்திரிகை செய்தி வெளியிட்டது. ஒருசிலர் உறையூரில் குஷ்பு கோயில் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் இதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

News September 17, 2024

50,000 மத்திய அரசு வேலை… Apply

image

மத்திய அரசு துறைகளில் 50,000க்கும் மேற்பட்ட காலி இடங்களுக்கு விண்ணப்பப்பதிவு முழு வீச்சில் நடைபெறுகிறது. SSC மூலம் 39,481 கான்ஸ்டபிள் வேலை, ITBP இல் 819, CISFஇல் 1,130, ரயில்வேயில் 11,558 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு இருந்தன. இதையடுத்து, ஆன்லைனில் விண்ணப்பத்தை அனைவரும் பதிவு செய்து வருகின்றனர். இந்த தகவல் உங்களுக்கு பயன் அளித்திருக்கும். நண்பர்களுக்கும் இதைப் பகிருங்க.

News September 17, 2024

எனக்கு கோயில் கட்டுவதை தடுத்திருப்பேன்: குஷ்பு

image

தெலுங்கு ரசிகர்களுடன் குஷ்பு கலந்துரையாடினார். அப்போது குஷ்பு கோயில் குறித்து அவர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய நேரத்தில் படங்களில் பிஸியாக இருந்தேன். தமிழும் படிக்க தெரியாது. அதனால் எனக்கு கோயில் கட்டுவதையே நான் அறியவில்லை. அது தெரியவந்த பிறகு, அதனை தடுக்க விரும்பினேன். ஆனால் தாமதமாகி விட்டதால் அப்படியே விட்டுவிட்டேன்” எனக் கூறினார்.

error: Content is protected !!