India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு வேலை வாய்ப்பில் வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக PMK தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை அரசு நடத்தினால் மட்டுமே, 10.5% இடஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினை சில அமைச்சர்கள் தவறாக வழிநடத்தி வருவதாகவும், அதனால் தான் இடஒதுக்கீட்டை பெறுவதில் காலதாமதம் ஆவதாகவும் அவர் விமர்சித்தார்.
விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பது போல் தெரிவதாக தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார். திராவிட சாயலில் வேறொரு கட்சி தேவையில்லை என்றும், தேசிய சாயலில் வளர வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், விஜய் மாற்றி பயணிப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். அண்ணா, பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், அவர்கள் வலியுறுத்திய பாதையில் பயணிப்போம் என்று கூறியிருந்தார்.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் டீசர் அடுத்த வாரம் ரிலீஸாகுமென தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் படக்குழு ரிலீஸ் தேதிக்கான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில், இப்படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களை இத்தகவல் உற்சாகம் அடையச் செய்துள்ளது.
மே.வங்க மக்களின் நம்பிக்கையை இழந்த மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது. பெண் மருத்துவர் வழக்கில், மம்தாவே முக்கிய குற்றவாளி என்றும், முதல்வர் பதவியில் தொடர அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை எனவும் சாடியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையை முதலில் ஏற்க மறுத்த மம்தா, தற்போது 4இல் 3 கோரிக்கையை ஏற்றுள்ளார்.
டெல்லியின் புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். Oxford பல்கலைக்கழகத்தில் படித்த அவர், டெல்லி அரசின் 14 துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறார். கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது அரசு நிர்வாகத்தை இவர் திறம்பட வழிநடத்தினார். கெஜ்ரிவாலின் அதீத நம்பிக்கையை பெற்ற இவர், BJP தரும் நெருக்கடியை சமாளித்து ஆட்சியை சிறப்பாக நடத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி கண்ட அமெரிக்காவுக்கே நானோ டெக்னாலஜியை அறிமுகப்படுத்திய பெருமையை AMES ஆய்வு இயக்குநர் கரூர் தமிழன் மெய்யப்பனையே சேரும். தமிழ்வழியில் படித்த அவர், Nano Technology மூலம் கருவிகளை உருவாக்கி NASA விண்வெளி ஆராய்ச்சிப் பணியை எளிதாக்கியுள்ளார். 350க்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ள இவர், Sensor 3D Printer போன்ற 25க்கும் மேற்பட்ட படைப்புரிமைகளையும் பெற்றுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே விஜய்யின் அரசியல் பேச்சுகள், திராவிட சித்தாந்தத்தையே எதிரொலித்து வந்திருக்கின்றன. ஒன்றிய அரசு, நீட் எதிர்ப்பு என திமுகவின் சொல்லாடல்களே அவரது பேச்சிலும் இருந்தது. தற்போது பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, சமூக நீதிப் பாதையில் பயணிப்போம் என விஜய் கூறியுள்ளார். திமுக என்ற இரும்புக் கோட்டையை தகர்க்க, அதன் ஆயுதத்தையே விஜய் கையில் எடுத்துள்ளார் என்றே தோன்றுகிறது.
டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி (43) பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரைத்தார். இதனையடுத்து, AAP எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் புதிய சட்டமன்றக்குழு தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, இன்று மாலை 4 மணிக்கு, துணை நிலை ஆளுநரை சந்திக்கும் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, புதிய முதல்வருக்கான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் வழங்க உள்ளார்.
விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் நிச்சயம் கலந்துகொள்வோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று CM ஸ்டாலினை சந்தித்த திருமா, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். முதல்வரும் மூத்த அமைச்சர்களை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளார். இதனிடையே, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை அவர் இன்னும் அழைக்கவில்லை என கூறப்படுகிறது.
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஜெர்மனியில் செவிலியர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேருவோருக்கு இலவசமாக ஜெர்மன் மொழி கற்றுத்தரப்படும். மாத சம்பளம் 2,300 முதல் 3,300 யூரோ (ரூ.2 லட்சம் – 3 லட்சம்). வயது வரம்பு: 35 வயதிற்குள். கல்வித் தகுதி: Bsc or GMN. கூடுதல் தகவல்களை நான் முதல்வன் வலைதளத்திலோ, செய்தி மக்கள் தொடர்புத்துறை சமூக ஊடக பக்கங்களிலோ தெரிந்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.