news

News September 17, 2024

டெல்லியின் 3ஆவது பெண் முதல்வராகும் அதிஷி

image

டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வராக AAP-யின் அதிஷி பதவியேற்க உள்ளார். அம்மாநிலத்தில் இதுவரை 2 பெண்கள் மட்டுமே முதல்வராக இருந்துள்ளனர். கடந்த 1998இல் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் சில வாரங்கள் முதல்வராக இருந்துள்ளார். அதை தொடர்ந்து காங்கிரஸின் ஷீலா தீட்சித் 1998 முதல் 2013 வரை தொடர்ந்து 3 முறை முதல்வராக இருந்துள்ளார். டெல்லியில் ஆட்சியில் இந்த 3 கட்சிகளுமே பெண்களை முதல்வர் பதவியில் அமர்த்தியுள்ளன.

News September 17, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14120186>>GK<<>> வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) J.F.எண்டர்ஸ் 2) 3 ஜனவரி 3) Light Emitting Diode 4) சிலோன் கெஜட் 5) சலவைக்கல் 6) கெமர் அரசர் II சூர்யவர்மன் 7) H₂O 8) விரால். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News September 17, 2024

பிறந்தநாள் வாழ்த்துகள் மேஸ்ட்ரோ: ஜெய் ஷா

image

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அஸ்வினுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது X பக்கத்தில், “இந்தியாவின் ஸ்பின் மேஸ்ட்ரோ அஷ்வினுக்கு வாழ்த்துகள். பந்தைக் கொண்டு நீங்கள் செய்யும் மேஜிக்கைப் பார்ப்பது ஒரு உண்மையான பாக்கியம். நீங்கள் தொடர்ந்து புதிய வரையறைகளை அமைக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

News September 17, 2024

இனி ஒரு மின் இணைப்புக்கே 100 யூனிட் இலவசம்?

image

ஒரே உரிமையாளரின் இரு மின் இணைப்புகளை ஒருங்கிணைந்து, ஒரு இணைப்புக்கு மட்டும் 100 யூனிட் இலவச மின்சாரம் கழிக்கப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த, அதுபோன்ற இணைப்பு உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்களை கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக மின்வாரியத்தின் சாஃப்ட்வேர்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News September 17, 2024

Health Tips: கல்லீரல் பாதிப்பை உணர்த்தும் 9 அறிகுறிகள்

image

உடலில் ஏற்படும் 90% நோய்களுக்கு கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளே காரணமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்லீரல் பாதிப்பின் 9 அறிகுறிகளைப் பற்றி காண்போம்:- 1) காய்ச்சல் & உடல் சோர்வு 2)குமட்டல் & வாந்தி 3) வயிறு & கால் வீக்கம் 4) தோல் அரிப்பு 5) பசியின்மை 6) தூக்கமின்மை 7) கவனச்சிதறல் 8) வாய் துர்நாற்றம் & நாக்குப் புண் 9) ரத்தப்போக்கு ஆகியவை ஆகும். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்!

News September 17, 2024

பெண்களுக்கு நைட் ஷிப்ட் கிடையாதா? SC ஆவேசம்

image

மே. வங்கத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் பெண் மருத்துவர்களை இரவுப் பணியில் அமர்த்தக் கூடாது என மம்தா அரசு உத்தரவிட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், “பெண்கள் இரவில் பணி செய்யக் கூடாது என எப்படி உங்களால் கூற முடியும். அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே உங்கள் (அரசு) வேலை. பெண் மருத்துவர்களுக்கு தேவை பாதுகாப்பு தானே தவிர, சலுகை கிடையாது” எனத் தெரிவித்தார்.

News September 17, 2024

தமிழகத்திற்கு 2 நாள்களுக்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் இன்றும், நாளையும் 2-4°C வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிக வெப்பநிலை, ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என்றும் கணித்துள்ளது. மாநிலத்தில் மே மாத அக்னி நட்சத்திரத்திற்கு நிகராக செப்டம்பர் மாதத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 40°C மேல் வெயில் வாட்டி வதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

News September 17, 2024

T20 உலகக் கோப்பையை வெல்வோம்: ஹர்மன்பிரீத்

image

T20 மகளிர் உலகக் கோப்பையை நிச்சயம் வெல்வோம் என இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். T20 போட்டிகளில் கடைசி 4-5 ஓவர்கள் மிக முக்கியம் என்றும், அதில் இந்திய அணி வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்.3 முதல் அக்.20 வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. IND தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை அக்.4ல் எதிர்கொள்கிறது.

News September 17, 2024

சட்டம் அறிவோம்: BNS பிரிவு 80 என்ன சொல்கிறது?

image

திருமணமான 7 ஆண்டுகளுக்குள் ஒரு பெண் (தீக்காயம் & உடற்காயங்கள்) அசாதாரண சூழ்நிலையில் உயிரிழந்தாலோ, இறப்பதற்கு முன் கணவர் அல்லது அவரது உறவினரால் வரதட்சணை கேட்டு கொடுமை & துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிந்தாலோ அந்த மரணம் வரதட்சணை கொடுமை மரணம் என வரையறுக்கப்படும். BNS சட்டப் பிரிவு 80இன் படி குற்றமாகும். இதற்கு 7 ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை வரை தண்டனையாக விதிக்கப்படும்.

News September 17, 2024

CM-ஐ சில அமைச்சர்கள் தவறாக வழி நடத்துகிறார்கள்: PMK

image

அரசு வேலை வாய்ப்பில் வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக PMK தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பை அரசு நடத்தினால் மட்டுமே, 10.5% இடஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினை சில அமைச்சர்கள் தவறாக வழிநடத்தி வருவதாகவும், அதனால் தான் இடஒதுக்கீட்டை பெறுவதில் காலதாமதம் ஆவதாகவும் அவர் விமர்சித்தார்.

error: Content is protected !!