India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி – மும்பை நெடுஞ்சாலையில் பள்ளம் ஏற்பட்டதற்கு எலி தான் காரணம் என கூறிய ஊழியரை ஒப்பந்த நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. எலி அல்லது அதுபோன்ற சிறிய விலங்குகள் பள்ளம் தோண்டியதால் நீர் கசிந்து சாலையில் பள்ளம் உருவானதாக அவர் கூறியிருந்தார். பராமரிப்பு மேலாளராக இருந்த அவருக்கு எந்த தொழில்நுட்ப அறிவும் இல்லை என, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்றுவரும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சொந்த மண்ணில் சதம் அடித்து அசத்தியுள்ளார். மொத்தம் 108 பந்துகளை எதிர்கொண்ட அவர், 10 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 100* ரன்கள் அடித்துள்ளார். இது சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவரது 6வது சதமாகும். மறுமுனையில் நிதானமாக ஆடிவரும் ஜடேஜா 79* ரன்களுடன் களத்தில் உள்ளார். சற்றுமுன் வரை இந்தியா 330/6 ரன்கள் எடுத்துள்ளது.
நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான் இன்று காலை சல்மான் கானுடன் வாக்கிங் சென்றார். அப்போது அவர்களை ஒரு பைக் வழிமறித்தது. பின்னால் இருந்த பர்தா அணிந்த பெண், பைக்கில் இருந்து இறங்கி வந்து சலீம் கானிடம், ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்க்கு போன் செய்யவா எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். ஏற்கனவே அந்த ரவுடியிடம் இருந்து அவருக்கு மிரட்டல் வந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
INDvBAN டெஸ்ட் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். வங்கதேசத்தில் நடந்த வன்முறையில் இந்துக்கள் சிலர் கொல்லப்பட்டதாகக் கூறி, டெஸ்ட் போட்டியை தடை செய்யுமாறு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடம் கடிதம் வழங்கப்பட்டது. கடிதத்தை பெற்றுக்கொண்டபோதும், தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், சம்பத் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் நடைபெற்றுவரும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் சிறப்பாக ஆடிவரும் ஜடேஜா அரைசதம் அடித்துள்ளார். அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து வங்கதேசத்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட அவர் 73 பந்துகளில் 50* ரன்கள் அடித்துள்ளார். சிறப்பாக ஆடிவரும் அஸ்வின் 73* ரன்களுடன் களத்தில் உள்ளார். இவர்களது நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி தற்போது வரை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.
டிரம்ப் – மோடி சந்திப்பை இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) மறுக்கவோ அல்லது உறுதியோ செய்யவில்லை. வரும் 21ஆம் தேதி நடக்க உள்ள QUAD மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளார். பிரதமரின் இந்த 3 நாள் பயணத்தின் போது, மோடியை சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார். ஆனால், பிரதமருக்கு பல சந்திப்புகள் இருப்பதாக மட்டும் MEA குறிப்பிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவலுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் இந்திய அரசு, அஜித் தோவல், RAW முன்னாள் தலைவர் சமந்த் கோயல், ஏஜெண்ட் விக்ரம் யாதவ், தொழிலதிபர் நிகில் குப்தா ஆகியோர் 21 நாட்களுக்குள் பதிலளிக்க சம்மன் அனுப்பியுள்ளது.
ஜியோ மீண்டும் 1 வருடம் இலவச offer, நிபந்தனையுடன் அறிமுகம் செய்துள்ளது. ₹3,599 ரீசார்ஜ் செய்தால் ஆண்டுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு உள்ளிட்டவற்றை ஜியோ வழங்குகிறது. இந்நிலையில், ₹50 செலுத்தி Jio fiber book செய்து, அந்த இணைப்பு பெறுவோருக்கு ₹3,599 திட்டத்தை இலவசமாக வழங்குகிறது. Fiber இணைப்பை புதிதாக பெறுவோருக்கு offerஇல் 3 மாத இன்டர்நெட், 13 OTT, 800 இணையதள TV சேவைகளை அளிக்கிறது.
ஹரியானாவில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,100 வழங்கப்படும் என BJP அறிவித்துள்ளது. மானிய விலையில் ₹500க்கு சமையல் சிலிண்டர், மருத்துவம், பொறியியல் படிக்கும் SC, OBC பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வித் உதவித்தொகை , அக்னி வீரர்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் மாதம் ₹2000 வழங்கப்படும் என்று நேற்று அறிவித்திருந்தது.
உலகில் 60% பெண்கள் தங்கள் வாழ்நாளில் சிறுநீர் தொற்று (UTI) பிரச்னைகளை சந்திக்கின்றனர். இந்த உடல் உபாதை தொடர்ந்து ஏற்பட Escherichia coli பாக்டீரியா முக்கிய காரணமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Fridge-ல் நீண்ட நாள் இறைச்சியை பதப்படுத்தி உண்பது, E coli பாக்டீரியா தொற்று ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. எனவே, இறைச்சிகளை அன்றே சமைத்து சாப்பிடுவது மிகச்சிறந்தது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.