India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துலீப் கோப்பை தொடரில் முதலிடம் பிடித்த மயங்க் அகர்வால் தலைமையிலான ‘INDIA A’ டீம் கோப்பையை வென்றுள்ளது. INDIA – A, B, C, D என நான்கு அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் அனைத்து அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடியது. இதில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் A டீம் முதலிடத்தையும், 1 வெற்றி, 1 தோல்வி, 1 போட்டி டிராவுடன் ருதுராஜ் தலைமையிலான ‘INDIA C’ டீம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது.
‘96’ படத்தின் 2ஆம் பாகத்திற்கான கதையை 90% முடித்துவிட்டதாக இயக்குநர் பிரேம்குமார் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். மேலும், இந்த கதையை விஜய்சேதுபதியின் மனைவியிடம் சொல்லிவிட்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், 2ஆம் பாகம் காதலை மையப்படுத்திய படமாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பிரேம்குமார், இது ஃபேமிலி சென்டிமெண்டை பேசும் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஹங்கேரியில் நடைபெற்று வரும் 45வது செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. ஸ்லோவேனியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் குகேஷ், அர்ஜுன் வெற்றி பெற்றதன் மூலம் தங்கப்பதக்கம் உறுதியானது. இதனால், வரலாற்றில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக, சென்னையில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி வெண்கலம் வென்றிருந்தது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்த இந்திய அணியின் கீப்பர் ரிஷப் பண்ட், டெஸ்டில் இந்திய அணிக்காக அதிக சதம் அடித்த கீப்பர் என்ற தோனியின் சாதனையை சமன் செய்தார். இதையடுத்து பலரும் அவரை தோனியுடன் ஒப்பிட்டு பேசிவந்த நிலையில், தன்னை தோனியுடன் ஒப்பிட வேண்டாம் என பண்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார். தோனியின் அணியான CSKவின் சொந்த மண்ணில் சதம் அடித்தது மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்த நிலையில், இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 297 பொருள்கள் இந்திய வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் இதுவரை இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 640 பழங்கால பொருட்களை அமெரிக்கா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும், 20,000 பேர் நாய் கடியால் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது உலகளவில் நாய் கடியால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் (59,000) 35% ஆகும். 2021ல் இருந்து நாய் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தமிழகத்தில் தான் அதிகம் பேர் நாய் கடிக்கு ஆளாவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல் கூறியுள்ளது.
சு.வெங்கடேசன் எழுதிய ‘நவயுக நாயகன் வேள்பாரி’ நாவலின் உரிமத்தை இயக்குநர் ஷங்கர் வாங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் டிரெய்லரில், நாவலின் முக்கிய காட்சி இடம்பெற்றதை கண்டு வருத்தமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். படைப்பாளிகளின் உரிமைகள் மதிக்காவிட்டால், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் எந்த படத்தை குறிப்பிடுகிறார் என தெரிந்தால் கமெண்ட் செய்யவும்.
வங்கக்கடல் பகுதியில் நாளை காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக நாளை(செப்.23) புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் RMC கூறியுள்ளது.
‘கரகாட்டகாரன்’ படத்தில் நடித்து தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை கனகா. பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான இவர், 1990 காலகட்டங்களில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். கடைசியாக 1999-ல் வெளியான ‘விரலுக்கேத்த வீக்கம்’ படத்தில் நடித்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள ஷாப்பிங் மாலில் ரசிகர் ஒருவருடன் கனகா எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
2022ஆம் ஆண்டில் SC மக்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 51,656 வழக்குகள் பதிவான நிலையில், உ.பியில் மட்டும் 12,287 வழக்குகள் பதிவாகியுள்ளது. இது மொத்த வழக்குகளில் 23.78% ஆகும். அடுத்தபடியாக 8,651 வழக்குகளுடன் ராஜஸ்தான் 2ஆம் இடத்தில் உள்ளது. 7,732 வழக்குகளுடன் மத்திய பிரதேசம் 3ஆம் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 13 மாநிலங்களில் 97% வழக்குகள் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.