news

News April 15, 2025

சிங்கப்பூரில் நாடாளுமன்றம் கலைப்பு

image

சிங்கப்பூரில் அடுத்த பொதுத்தேர்தலுக்காக நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டது. மே 3-ல் பொதுத்தேர்தல் நடைபெறும் எனவும், ஏப்ரல் 23-ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரும் தேர்தலிலும் ஆளும் மக்கள் செயல் கட்சியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. எனினும் கடந்த தேர்தலில் சந்தித்த பின்னடைவை சரி செய்து வலுவான வெற்றியை பதிவு செய்ய ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.

News April 15, 2025

₹100 கோடி வசூல்..ரசிகர்களால் கொண்டாடப்படும் GBU

image

அஜித் – ஆதிக் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக், தரமான சம்பவத்தை செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியான ஐந்தே நாட்களில் ₹100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக ரோமியோ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

News April 15, 2025

பிரபல விஞ்ஞானி காலமானார்

image

நாட்டின் பிரபல விஞ்ஞானி ரஞ்சித் நாயர் (70) டெல்லியில் நேற்று காலமானார். கேம்பிரிட்ஜ் பல்கலை.,யில் படித்த இவர் இயற்பியல் ஆராய்ச்சியில் மட்டுமல்லாமல் தத்துவத்திலும் ஆர்வமுள்ளவராக இருந்தார். இவர் எழுதிய புத்தகங்களில் Mind, Matter and Mystery, The Republic of Science ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவை. இந்திய அறிவியல் வளர்ச்சியையும், அதன் வரலாற்றையும் ஆவணப் படுத்துவதிலும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

News April 15, 2025

IPL: முதலில் பேட்டிங் செய்யும் PBKS

image

PBKS, KKR இடையேயான இன்றைய IPL போட்டியில் PBKS கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். தொடரின் 31ஆவது போட்டியான இது, சண்டிகரில் நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் இருக்கும் இந்த இரு அணிகளும், இப்போட்டியில் வென்று முதல் நான்கு இடங்களுக்குள் செல்ல முயற்சி செய்யும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

News April 15, 2025

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நெருக்கடி

image

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 25-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே வழக்கில் தொடர்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. டெல்லி, மும்பையில் உள்ள ₹661 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களில் செயல்படும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சார்பில் நோட்ஸும் ஒட்டப்பட்டுள்ளது.

News April 15, 2025

இந்த Blood Group ஆளுங்களதான் கொசுக்கள் ஜாஸ்தியா கடிக்கும்!

image

எல்லோரையும் கொசுக்கள் ஒரே மாதிரிதான் கடிக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. கொசுக்கும் கொஞ்சம் ‘டேஸ்ட்’ தேவைப்படுகிறது. கொசுக்கள் ‘O’ ரத்த பிரிவினரையே அதிகமாக விரும்புகின்றன என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ‘A’ ரத்த பிரிவினரை மிக குறைந்த அளவிலேயே கடிக்கிறதாம். இவற்றுடன், வியர்வை அதிகமாக வருபவர்களை கொசுக்கள் குறிவைத்து தாக்குமாம். நீங்க என்ன பிளட் குரூப்?

News April 15, 2025

பணவீக்கம் என்றால் என்ன?

image

நாம் வாங்கும் பொருள்களின் விலை ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு உயருகிறது என்பது பணவீக்கமாக குறிப்பிடப்படுகிறது. அதாவது, நீங்கள் கடந்த ஆண்டு ₹100க்கு வாங்கிய ஒரு பொருள், இந்த ஆண்டு ₹105க்கு விற்றால் அதன் பணவீக்கம் 5% ஆகும். இந்தியாவில் 4% பணவீக்கம் என்பது சராசரியாக பார்க்கப்படுகிறது. அதற்கு அதிகம் போனால், மக்கள் வாங்கும் திறனை இழப்பார்கள். 4%ஐ விட குறைந்தால் நாட்டின் வளர்ச்சி தடைபடும்.

News April 15, 2025

IPLல்ல இந்த விஷயத்தை நோட் பண்ணீங்களா?

image

க்ரவுண்ட்ல பேட் அளவை அம்பயர்கள் செக் பண்ணதை என்னைக்காவது பார்த்திருக்கீங்களா? பெரும்பாலானோர் இந்த IPLலதான் பார்த்திருப்பீங்க. ஆனால், இது புதுசில்லை. பொதுவா, டிரெஸ்ஸிங் ரூம்க்குள்ள அம்பயர்கள் பேட் அளவை செக் பண்ணுவது இயல்புதான். ஆனால், இது பொது வெளியில் நடக்க வேண்டும் என்ற புதிய முடிவின் காரணமாக அம்பயர்கள் ரேண்டமாக பேட்ஸ்மேன்களின் பேட் அளவை க்ரவுண்ட்லேயே செக் பண்றாங்க.

News April 15, 2025

பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு

image

நாட்டின் சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 3.34%ஆக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு ஆகும். கொரோனா காலத்தில் உயரத் தொடங்கிய பணவீக்கம், 6 ஆண்டுகள் கழித்து இப்போது படிப்படியாக கட்டுக்குள் வருகிறது. கடைசியாக, 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் 3.28%ஆக இருந்தது. பணவீக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, இது இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.

News April 15, 2025

போக்சோ வழக்கு… பரபரப்பு தீர்ப்பு

image

15 வயது பெண், 22 வயது இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், மும்பை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. நவிமும்பையை சேர்ந்த சிறுமி, 2020-ல் இளைஞருடன் உபிக்கு சென்றவர், 10 மாதம் கழித்து கர்ப்பிணியாக வீடு திரும்பினார். இதனால், இளைஞர் மீது போக்சோ வழக்கு பாய, விசாரித்த கோர்ட், இச்சிறுமிக்கு தான் செய்வது என்னவென்று தெரியும், விரும்பியே சென்றுள்ளார் எனக் கூறி, இளைஞருக்கு ஜாமின் வழங்கியுள்ளது.

error: Content is protected !!