news

News September 23, 2024

செப் 23: வரலாற்றில் இன்று

image

1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி பொம்மை அரசு இத்தாலிய சோசலிசக் குடியரசு உருவானது.
1966 – நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.
1973 – நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெருடா இறந்த தினம்
1983 – கல்ஃப் ஏர் விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
2004 – எயிட்டியில் சூறாவளி, வெள்ளம் காரணமாக 3,000 பேர் உயிரிழந்தனர்.

News September 23, 2024

தமிழராக பூரித்து போகிறேன் : நிதியமைச்சர் சீத்தாராமன்

image

நாடாளுமன்றத்தில் செங்கோலை பார்க்கும் போதெல்லாம் ஒரு தமிழராக பூரித்து போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆன்மீகம் மற்றும் தெய்வீகத்தை சொல்லி தருவதன் மூலமே மாணவர்களின் மன அழுத்ததை குறைக்க வேண்டும் என்றார். மேலும் தமிழகத்தில் உள்ள ஆதினங்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்றத்தில் பிரதமர் செங்கோலை நிறுவினார் என தெரிவித்தார்.

News September 23, 2024

இன்று வெளியாகிறது ‘மெய்யழகன்’ டிரெயிலர்

image

96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படத்தின் டிரெயிலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமி ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.

News September 23, 2024

இன்று காலை பதவியேற்கிறார் அனுரகுமார திசநாயக

image

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திசநாயகே வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் இலங்கையின் 9வது அதிபராக இன்று காலை 9 மணிக்கு பதவியேற்கிறார். அதிபர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, ” நாம் ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம் என கூறிய அவர், சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்த புதிய தொடக்கத்தின் அடித்தளமாகும்” என்றார்.

News September 23, 2024

தொடரை வென்று சாதனை படைத்த ஆப்கானிஸ்தான்

image

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஓடிஐ தொடரை 2-1 என ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக கைப்பற்றியுள்ளது. 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வென்றது. தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய ஆப்கன் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

News September 23, 2024

புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

image

இலங்கையில் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த x பக்கத்தில், இந்தியாவின் நெய்பர்ஹூட் ஃபர்ஸ்ட் பாலிசி மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை சிறப்பு இடத்தைப் பெற்றுள்ளது என்றார். மேலும் பிராந்தியத்தின் நலனுக்காக உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

News September 23, 2024

சே.குவேராவின் பொன்மொழிகள்

image

*கல்வியறிவு பெற்றவராக இருப்பதே ஒரு புரட்சியாளரின் முதற் கடமை. *நண்பர்கள் இல்லாதது சோகமான விடயம், ஆனால் எதிரிகள் இல்லாதது இன்னும் சோகமானது. *ஒரு மனிதனை தூக்கிலிடுவதற்கு, அவன் குற்றம் செய்ததற்கான ஆதாரம் தேவையில்லை. அவனை தூக்கிலிட வேண்டியது அவசியம் என்பதற்கான ஆதாரம் மட்டுமே தேவை.

News September 23, 2024

இந்தியா வாய்ப்புகளை உருவாக்குகிறது – பிரதமர்

image

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று நியூயார்கில் உள்ள இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை. வாய்ப்புகளை உருவாக்குகிறது என பெருமிதம் தெரிவித்தார். மேலும் இந்தியா யாரையும் பின்பற்றிச் செல்வது இல்லை என்ற அவர், புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கிச் செல்கிறது என்றார்.

News September 23, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: மக்கட்பேறு. ▶ குறள் எண்: 61 ▶ குறள்: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. ▶ பொருள்: அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

News September 23, 2024

இந்திய செஸ் அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து

image

ஹங்கேரியில் நடைபெற்ற 45 வது செஸ் ஒலிம்பியாட்டில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தனது முதல் தங்கப் பதக்கத்தை ஓபன் பிரிவில் வென்றதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களின் பொன்னான வெற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. ஜெய் ஹிந்த் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!