India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
த்ரிஷாவின் மதில் சுவர் வழக்கை சென்னை HC முடித்து வைத்தது. மதில் சுவர் பிரச்னையில் பக்கத்து வீட்டாருடன் சமரசம் செய்து கொண்டதாக த்ரிஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில் பொதுவான மதில் சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்வதாக பக்கத்து வீட்டுக்காரருக்கு எதிராக அவர் மனு தொடுத்திருந்தார்.
அழகிரி மகன் துரை தயாநிதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தொழில் அதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான இவர், கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையிலுள்ள ரத்த குழாயில் அடைப்பு இருப்பதாகக் கூறி, அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, வேலூர் CMCஇல் மேல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் காலியாக உள்ள 81 ஆப்ரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆப்ரேட்டர் (லேப்) பணியிடங்களுக்கு B.Sc.(chemistry) பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேவையான தகுதியுடன் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் <
வருகிற 27ஆம் தேதி 4 படங்கள் ரிலீசாக உள்ளன. கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’ மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ளது. பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன் நடித்துள்ள ‘பேட்ட ராப்’, ஆக்சன் த்ரில்லர் படமான விஜய் ஆண்டனியின் ‘ஹிட்லர்’ மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா’ தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இவற்றில் நீங்கள் காண விரும்பும் படத்தை கமெண்ட் செய்யவும்.
சென்னை கொளத்தூரில் ரூ.4.23 கோடியில் கட்டப்பட்ட பள்ளி கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் புதிய புத்தகப்பை மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கினார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என்.நேரு மேயர் பிரியா, திமுக எம்பி வில்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குற்றம்சாட்டப்பட்டவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர் பக்கம்தான் நிற்க வேண்டுமென வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து பேசிய அவர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம்தான் கேள்விகள் எழுப்பப்படுவதாகக் கூறினார். மேலும், “நீங்கள் ஏன் அப்போதே கூறவில்லை? நீங்கள் இடம் கொடுக்காமல் இப்படி நடந்திருக்குமா?” எனக் கேட்பதே மிக மோசமான விஷயம் என்றார்.
AI மாடலை உருவாக்க பயனர்களின் தரவுகளை சமூக வலைதளங்கள் பயன்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில தளங்கள் AI பயிற்சிக்காக தரவுகளை பகிர்வதிலிருந்து விலகுவதற்கான விருப்பத்தை பயனர்களுக்கு வழங்குகின்றன. அதேநேரம், Public போஸ்டை 3ஆம் தரப்பினர் பயன்படுத்த முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில், தங்கள் தரவுகளை பயன்படுத்துவதை பலரும் விரும்பவில்லை எனத் தெரிகிறது.
திரெளபதி, பகாசூரன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் மோகன்ஜியை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. என்ன காரணத்திற்கு அவர் கைது செய்யப்பட்டார், எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் போன்ற எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், திமுக ஆட்சியில் சட்டத்திற்கு புறம்பான கைதுகள் தொடர்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
‘மூடா’ நில முறைகேடு விவகாரத்தில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி சித்தராமையா தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. சித்தராமையா மனைவி பார்வதிக்கு வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டதில், முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் அனுமதி அளித்தார். ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரிய சித்தராமையா வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகிறது.
ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம் விலை இன்று ₹20 உயர்ந்து ₹7,000ஆக விற்கப்படுகிறது. இதேபோல் 1 சவரன் தங்கம் ₹160 அதிகரித்து ₹56,000ஆக விற்பனை செய்யப்படுகிறது. இது தங்கம் விலையில் புதிய உச்சம் ஆகும். அதேநேரத்தில், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ₹98ஆகவும், 1 கிலோ வெள்ளி ₹98,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.