India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அலாஸ்காவில் உள்ள விட்டீர் நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் Begich Towers என்ற ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த 14 மாடி குடியிருப்பில் 153 வீடுகள் உள்ளது. காவல் நிலையம், மருத்துவமனை, பள்ளி, தேவாலயம் என அனைத்தும் இந்த குடியிருப்பில் உள்ளது. மொத்தம் 272 பேர் அந்த நகரத்தில் வாழ்கிறார்கள். 1964ல் சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து, அனைவரும் ஒரே குடியிருப்புக்குள் குடிபெயர்ந்தனர்.
கலைஞரின் நூற்றாண்டு நினைவைப் போற்றிடும் வகையில் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுடன் ₹10 லட்சம் ரொக்கம், நினைவுப் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி CM ஸ்டாலின் இவ்விருதினை வழங்குகிறார்.
ADMK EX அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011-16இல் அமைச்சராக இருந்தபோது ₹33 கோடி வருமானத்திற்கு அதிகமாக (1058% அதிகம்) சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே, அடுக்குமாடி குடியிருப்பு அனுமதிக்கு ₹28 கோடி லஞ்சம் பெற்றதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
லட்டு விவகாரத்தில் மன்னிப்பு கோருவதாக கார்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பவன் கல்யாண் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்பாராத <<14182054>>தவறான புரிதலுக்கு<<>> மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், பெருமாளின் தாழ்மையான பக்தன் என்ற முறையில் மரபுடன் நடப்பதாகவும் பதிவிட்டுள்ளார். முன்னதாக, கார்த்தியின் பேச்சை பவன் கல்யாண் கண்டித்திருந்தார்.
காந்தி குறித்து அவதூறு பதிவிட்டவருக்கு நூதன நிபந்தனையுடன் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் வழங்கியது. கல்யாண் சுந்தரம் என்ற இளைஞர் ஆபாச வார்த்தைகளுடன் காந்தியின் படத்தை Facebookஇல் பதிவிட்டதால், போலீசார் அவரை கைது செய்தனர். வழக்கில் அவர் ஜாமின் கோரிய நிலையில், மதுரை காந்தி மியூசிய நூலகத்தில் 15 நாள்கள் புத்தகத்தை அடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
சர்ச்சைக்கு மத்தியிலும் திருப்பதி லட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்த விவகாரம் பேசு பொருளானது. இதனிடையே கடந்த 4 நாள்களில் மட்டும் 14 லட்சம் லட்டுகள் விற்பனை செய்துள்ளதாகவும், இது சராசரியை விட அதிகம் என்றும் கூறியுள்ளது. மேலும், தங்கள் நிர்வாகம் மீது பக்தர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
அஸ்வின் மட்டும் ENG அணியில் இருந்திருந்தால், அவரை ஓய்வு பெற செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழுத்தம் கொடுத்திருக்கும் என அந்த அணியின் முன்னாள் பவுலர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி, 38 வயதான அஸ்வினை ஓய்வு பெறச் செய்திருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். BAN எதிரான முதல் டெஸ்ட்டில் அஸ்வின் 6 விக்கெட்களை கைப்பற்றியதோடு, சதமும் விளாசியிருந்தார்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. நாளை 30-40KM வேகத்தில் தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின்போது ஏமாறப்போவது யார் என்பது தெரியும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் பதவி குறித்த கேள்விக்கு, மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை, அமைச்சரவையின் மாற்றம் துரைமுருகன் போன்ற மூத்தவர்களுக்கு ஏமாற்றமாகவும், உதயநிதிக்கு ஏற்றமாகவும் இருக்கும் என விமர்சித்தார்.
‘அமரன்’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதல் பாடல் “ஹே மின்னலே…” எனத் தலைப்பிடப்பட்ட காதல் பாடல் என்று குறிப்பிட்டுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக். 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
Sorry, no posts matched your criteria.