India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பதி லட்டு பற்றிய கேள்விக்கு, “லட்டு இப்போதைக்கு சென்சிட்டிவான டாப்பிக்” என கார்த்தி சிரித்தபடி பதிலளித்திருந்தார். இதற்கு பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்த நிலையில், கார்த்தி மன்னிப்பு கோரினார். இந்நிலையில், கார்த்தியின் இந்தப் பண்பை பாராட்டுவதாக கூறியுள்ள பவன், திருப்பதியும், லட்டுவும் பக்தர்களின் உணர்வுகளுடன் கலந்துள்ளதால் அவற்றை சற்று கவனமாக கையாள வேண்டும்” என்றும் அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தி.மலை, திருவள்ளூர், சேலம், கடலூரில் தற்போது மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.
லட்டு விவகாரம் குறித்து நடிகர் கார்த்தி பேசியதற்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு கார்த்தி உடனடியாக மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து, நடிகர் சூர்யாவும் மன்னிப்பு கேட்டதாக X தள பதிவு ஒன்று வைரலானது. ஊடகங்களும் இதை விவாதித்த நிலையில், Fact Check செய்ததில், அது போலி X கணக்கு என்பது தெரியவந்தது.
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ₹90 லட்சம் ஊக்கத்தொகையை CM ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ₹25 லட்சம், அணியின் தலைவரான ஸ்ரீநாத் நாராயணனுக்கு ₹15 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், குளோபல் செஸ் லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்தியாவில் 85% மக்கள் அசைவம் சாப்பிடுவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அதிகபட்சமாக நாகாலாந்தில் 99.8% பேர் அசைவம் சாப்பிடுபவர்களாக உள்ளனர். இதையடுத்து மேற்கு வங்கத்தில் 99.3%, கேரளாவில் 99.1% மக்கள் அசைவம் சாப்பிடுவதும் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் 97.65% அசைவம் சாப்பிடும் மக்களுடன் தமிழ்நாடு 6 ஆவது இடத்தில் உள்ளது. நீங்கள் சைவமா? அசைவமா? கமெண்ட் பண்ணுங்க.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்படுவார் என பேச்சுகள் அடிபடும் நிலையில், இதுகுறித்து செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். “உதயநிதிக்கு அனைத்து திறமைகளும் இருக்கின்றன. மக்களால் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அமைச்சராக சிறப்பாக செயல்படுபவர். மக்களுக்காக உழைப்பவர். அவர் ஏன் துணை முதல்வராக வரக் கூடாது? உதயநிதிக்கு அந்தப் பதவி கிடைத்தால் காங்கிரஸ் வரவேற்கும்” என்றார்.
தலைநகர் மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் இசைக் கச்சேரி நடத்த முடிவு செய்துள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் கடந்த 14ஆம் தேதி இளையராஜாவின் இசைக் கச்சேரி நடந்தது. அப்போது மழை குறுக்கிட்டாலும், கலைந்து செல்லாத ரசிகர்கள் மழையில் நனைந்தபடியே இசையை ரசித்தனர். இதற்கு இன்று நன்றி தெரிவித்துள்ள இளையராஜா, கும்பகோண மக்களின் ஆதரவை மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டதாக பேட்டியளித்த இயக்குநர் மோகன்ஜியை திருச்சி போலீஸார் இன்று கைது செய்தனர். இதையடுத்து, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நீதிபதி ஜாமின் வழங்கினார். கைது செய்ய முகாந்திரம் உள்ளதாக கூறிய நீதிபதி, எனினும் அவர் கைது செய்யப்பட்ட விதம் சரியல்ல” என்றும் கூறினார்.
இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் சென்னையில் நடந்த நிலையில், 2வது போட்டி கான்பூரில் வரும் 27ஆம் தேதி முதல் அக்.1 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் உள்ளிட்ட இந்திய வீரர்கள் கான்பூர் சென்றடைந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2வது போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்?
செப்.28 முதல் அக்.2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டு, 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதன் பிறகு, அக்.4ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை மட்டுமே பள்ளிகள் இயங்கும். பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. எனவே அக்.6-ம் தேதி வரை விடுமுறையை நீட்டிக்குமாறு கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
Sorry, no posts matched your criteria.