India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கே.ஜி. பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் ’பிளாக்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே பிரதானமாக கொண்டு, ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவமாக இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். டிரெய்லருக்கு யார் வெயிட்டிங்?
இன்று (செப். 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (செப். 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில் செப்.28ஆம் தேதி திமுக பவள விழா கொண்டாடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவுடன் இணைந்து கொள்கைக் கூட்டணி அமைந்துள்ள இயக்கத்தினரையும், இணைத்து பவள விழா நடைபெறவுள்ளது. அண்ணா பிறந்த மண்ணில் அணிவகுப்போம். கொள்கைத் தோழமைகளுடன் எழுச்சியுடன் கொண்டாடுவோம் என்று திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
*மேஷம் – உடல்நலம் மேம்படும் *ரிஷபம் – வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் *மிதுனம் – பொறுமையாக செயல்பட வேண்டும் *கடகம் – போட்டி உண்டாகும் *சிம்மம் – புதிய நட்பு கிடைக்கும் *கன்னி – ஆதரவு கிடைக்கும் *துலாம் – சலனம் ஏற்படும் *விருச்சிகம் – கவனமாக செயல்பட வேண்டும் *தனுசு – அடுத்தவர்களின் உதவி கிடைக்கும் *மகரம் – வெற்றி உண்டாகும் *கும்பம் – புகழ் தேடி வரும் *மீனம் -நற்செயல் உண்டாகும்.
ஆஸ்கர் விருதுக்கு இந்தி திரைப்படமான லபாட்டா லேடிஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார், “கொட்டுக்காளி, தங்கலான், வாழை, மகாராஜா போன்ற கருத்தும், தாக்கமும் கொண்ட தமிழ் படங்கள் ஆஸ்கருக்கான பரிந்துரை பட்டியலில் இருந்தன. ஆனால், இந்தி படம் என்ற ஒரே காரணத்துக்காக லபாட்டா லேடிஸ் படம் தேர்வாகி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்தியாவின் வெற்றி ரோஹித், கோலி, ஜெய்ஷ்வால், கில் கையில்தான் இருப்பதாக Ex வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார். இந்த முறை பும்ரா, ஷமி, சிராஜ் என சிறப்பான பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி செல்வதாக கூறிய அவர், அவர்கள் கண்டிப்பாக அழுத்தத்தை கொடுப்பார்கள் என்றார். மேலும், பவுலர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
திருப்பதி லட்டுவில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தை கிண்டல் அடிக்கும் வகையில், பிரபல யூடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’ இன்று மாலை வீடியோ வெளியிட்டது. அதில், பவன் கல்யாணையும் கலாய்த்து கோபி – சுதாகர் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்த வீடியோவுக்கு ஒருதரப்பினர் தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வந்தனர். இதையடுத்து, இந்த வீடியோவை ‘பரிதாபங்கள்’ டீம் நீக்கியுள்ளது.
பஞ்சாயத்து யூனியன், நகராட்சி ஆகிய பகுதிகளிலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களில், துறை அனுமதி பெறாமல், உயர்க்கல்வி பயின்ற ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பி.எட்., கல்வித் தகுதியின்றி பி.லிட் கல்வித் தகுதியுடன் பதவி உயர்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விவரங்களையும் உடனே அனுப்ப அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நாளை டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டம், 8 மணி நேர வேலையை அமல்படுத்த ஷிப்ட் முறை வருகை பதிவேடு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கின்றனர். இதன்காரணமாக, டாஸ்மாக் கடைகள் நாளை இயங்குமா?, இயங்காதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.