news

News September 25, 2024

இஸ்ரேல் தாக்குதலில் 569 பேர் பலி

image

லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 569ஆக உயர்ந்துள்ளது. லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து கடந்த 5 நாள்களாக இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 50 குழந்தைகள், முதியோர்கள் என 569 பேர் பலியான நிலையில், 1,850 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று பெய்ரூட்டில் நடைபெற்ற தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி இப்ராஹிம் குபைசி கொல்லப்பட்டார்

News September 25, 2024

விளையாட்டு துளிகள்

image

➤இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கவுன்சில் கூட்டம் மும்பையில் இன்று (செப்.25) நடக்கிறது. ➤மக்காவ் ஓபன் பேட்மிண்டனின் 2ஆவது சுற்றுக்கு இந்தியாவின் திரிஷா – காயத்ரி இணை முன்னேறியது. ➤பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர்களுக்கு ₹50 லட்சம் ரொக்கப்பரிசு
அளிக்கப்படுமென BAI அறிவிப்பு. ➤இரு போட்டி கொண்ட தொடரில் இந்தியா, ஜெர்மனி ஆடவர் ஹாக்கி அணிகள் அக். 23, 24இல் மோதவுள்ளன.

News September 25, 2024

யூடியூபர் வராகி மீது குண்டர் சட்டம்

image

சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபர் வராகி மீது பண மோசடி வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சமீபத்தில் சார்பதிவாளரை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீது 40க்கும் மேற்பட்டோர் பண மோசடி புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் தன்னிடம் ₹5 லட்சம் முறைகேடு செய்ததாக பாரதி என்பவர் அளித்த புகாரில் தற்போது அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

News September 25, 2024

உடனே விண்ணப்பிங்க.. ரயில்வேயில் 5,066 வேலை

image

மேற்கு ரயில்வேயில் 5,066 காலியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அப்ரன்டிஸ் அடிப்படையிலான இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 10, 12ம் வகுப்புகளில் 50%க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலைக்கான விண்ணப்பப்பதிவு rrc-wr.com இணையதளத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க அக். 22ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்தத் தகவலை நண்பர்களுக்கு பகிருங்கள்.

News September 25, 2024

உதயநிதியை துணை CM ஆக மக்கள் ஏற்க மாட்டார்கள்: டி.ஜெ.

image

உதயநிதியை துணை முதல்வராக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அதிமுக EX அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், உதயநிதிக்கு முடிசூட்டி பார்ப்பதே ஸ்டாலின் குறிக்கோள், மக்கள் பிரச்னை பற்றி அக்கறை கிடையாது என்று விமர்சனம் செய்தார். உதயநிதியை உடனடியாக துணை முதல்வராக்கினால் எதிர்ப்பு எழும் என எண்ணி, படிப்படியாக தகவலைக் கசியவிட்டு மக்களிடம் திணித்து விட்டதாகவும் அவர் சாடினார்.

News September 25, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் ராணுவ விசாரணை தொடர்பான மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ➤துருக்கிக்கு F-16 ரக போர் விமானங்களை வழங்க விதித்த தடையை அமெரிக்கா நீக்கக் கூடுமெனத் தகவல் வெளியாகியுள்ளது. ➤இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ➤வெனிசுலா அதிபர் மதுரோக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பித்து அர்ஜென்டினா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

News September 25, 2024

JUST NOW: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

image

ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 26 தொகுதிகளுக்கு இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் வாக்குப்பதிவில் மொத்தம் 25.7 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் தேதி 24 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அக்.1ல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது

News September 25, 2024

JOB ALERTS: இந்தோ திபெத் படையில் வேலை

image

இந்தோ திபெத் படையில் கான்ஸ்டபிள் நிலை பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 545 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. வேலைக்கான விண்ணப்பபதிவு ஆன்லைனில் அக்டோபர் 8ம் தேதி தொடங்க உள்ளது. கடைசி தேதி நவம்பர் 6ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை recruitment.itbpolice.nic.in இணையதளத்தில் காணலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்கள்.

News September 25, 2024

இன்று இதை செய்தால் கடன் தீரும்

image

இன்று தேய்பிறை அஷ்டமி ஆகும். இன்றைய நாளில் பைரவ வழிபாடு மேற்கொள்வது மிகச்சிறப்பானது என்று ஆன்மிகத்தில் சொல்லப்பட்டுள்ளது. ராகு கால வேளையான மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணிக்குள் கோயிலுக்கு சென்று பைரவருக்கு செந்நிற மலர்கள் சாத்தி, தீபமேற்றி மனமுருகி வேண்டிக் கொண்டால் காரியத் தடைகள் நீங்கும். வழிபடுவோரின் கடன் தேய்ந்து முழுவதும் காணாமல் போகும் என்றும் கூறப்படுகிறது.

News September 25, 2024

மோடிக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்

image

சாதிவாரி கணக்கெடுப்பு கோரி PM மோடிக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், BC சமூக பிரதிநிதியாக PM பதவியை அலங்கரிக்கும் தாங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் தேவை, முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். எனவே, சமூகநீதியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த ஆணையிட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!