news

News September 27, 2024

சோனியா காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

image

டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் EX தலைவர் சோனியா காந்தியை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின் போது கனிமொழி, டி.ஆர்.பாலு உடனிருந்தனர். முன்னதாக, பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் நலத்திட்ட பணிகளுக்கான நிதியை தடையின்றி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார். டெல்லியில் இருந்து முதல்வர் இன்று மாலை சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News September 27, 2024

மெய்யழகன்: ஊர்த் திரும்புதலும் உறவாடலும்

image

பழைய நினைவுகளைத் தொட்டு, அதில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்திடும் கதையாக மனதில் நிற்கிறான் மெய்யழகன். ஊர்த் திரும்புவோரின் தடுமாற்றம், அத்தான் என்ற வார்த்தையின் நெகிழும் அன்பு என படத்தில் அரவிந்த் சாமியும், கார்த்தியும் வாழ்ந்திருக்கிறார்கள். நிலம், உறவு, நினைவென நகரும் பிரேம் குமார் இயக்கிய இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையும், நேத்தா எழுதிய ‘யாரோ’ கமலின் குரலும் கைகொடுத்திருக்கிறது. (W2N:3/5)

News September 27, 2024

45 நிமிடங்கள் மோடியுடன் பேச்சுவார்த்தை: ஸ்டாலின்

image

மோடியுடன் 45 நிமிடங்கள் வரை பேச்சுவார்த்தை நடத்தியதாக <<14208543>>ஸ்டாலின்<<>> தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த அவர், வழக்கமாக 15 நிமிடங்கள் மட்டுமே பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படும் என்றும், ஆனால் தனக்கு 45 நிமிடங்கள் அளிக்கப்பட்டது என்றும் கூறினார். தமிழகத்தின் காேரிக்கைகளை முன்வைக்கும் நேரத்தில் திமுகவின் கொள்கைகள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

News September 27, 2024

பிரதமர் மோடியுடனான சந்திப்பு இனிதே அமைந்தது: ஸ்டாலின்

image

PM மோடியுடனான சந்திப்பு இனிதே அமைந்ததாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மோடியை சந்தித்து பேசிய விவரங்கள் குறித்து, டெல்லியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், மீனவர் பிரச்னை குறித்து இலங்கை புதிய அதிபரிடம் எடுத்துரைக்கும்படி தாம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். தனது 3 கோரிக்கைகளை கேட்ட பிரதமர். அதை பரிசீலித்து முடிவெடுப்பதாக உறுதியளித்ததாகக் குறிப்பிட்டார்.

News September 27, 2024

BREAKING: 7 மாவட்டங்களில் இன்று கனமழை

image

7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று RMC தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணித்துள்ளது. நாளை வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 19 மாவட்டங்களிலும், 29ஆம் தேதி தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

News September 27, 2024

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்

image

பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்து கொள்ளவிருப்பதாக வதந்திகள் பரவி வந்தன. இதற்கு ஆதாரமாக திருமணத்தின்போது, அபிஷேக் அணிவித்த மோதிரத்தை ஐஸ்வர்யா கழற்றி விட்டார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், துபாயில் நடந்த நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா கையில் திருமண மோதிரம் அணிந்து இருந்தார். இதன் மூலம் விவாகரத்து வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News September 27, 2024

இவர்கள்தான் அதிக உடல் தகுதி உடையவர்கள்: ஹர்திக்

image

கிரிக்கெட் வீரர்களை விட ஹாக்கி வீரர்கள் அதிக உடற்தகுதியுடன் இருப்பதாக இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங் தெரிவித்துள்ளார். யோயோ டெஸ்டில், கிரிக்கெட் வீரர்கள் 19-20 மதிப்பெண் பெற்றால் தகுதியானவர்கள் எனக் கூறப்படுகிறது. முன்னாள் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், 8 ஸ்பிரிண்ட்கள் அடங்கிய இந்த தேர்வில் 23.8 புள்ளிகள் எடுத்துள்ளார். பெண்களில் பலர் 17-18 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்றார்.

News September 27, 2024

உ.பி.யில் கொடூரம்: பள்ளி விடுதியில் மாணவன் நரபலி

image

உ.பி.யில் பள்ளி விடுதியில் 2ம் வகுப்பு மாணவன் நரபலி கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸ் அருகே ரஸ்காவனில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது. பள்ளிக்கு வெற்றி தேடித்தர சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி இயக்குனர், அவரின் தந்தை, 3 ஆசிரியர்களை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 27, 2024

மோடிக்கு தடம் பெட்டகத்தை பரிசளித்த முதல்வர்

image

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடையையும் அவர் பரிசளித்தார். தடம் பெட்டகத்தில் பனை ஓலை ஸ்டாண்ட், டெரகோட்டா சிற்பங்கள், பித்தளை விளக்கு, நீலகிரி தோடா எம்பிராய்டரி சால்வை, பவானி ஜமுக்காளம் உள்ளிட்ட பொருட்கள் உள்ளன.

News September 27, 2024

கண்டெய்னர் லாரியில் வந்தது ராஜஸ்தான் கொள்ளையர்கள்?

image

<<14207693>>குமாரபாளையம்<<>> அருகே போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட கும்பல், ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளையர்கள் எனத் தெரிய வந்துள்ளது. வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லாரியை சினிமா பாணியில் போலீசார் துரத்தி சுட்டுப் பிடித்தனர். அப்போது லாரிக்குள் கார், பணம் இருந்துள்ளது. விசாரணையில், கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்து விட்டு பணத்தை எடுத்து வந்ததாக அவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.

error: Content is protected !!