news

News September 28, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤அஜர்பைஜான் பாகிஸ்தானிடம் இருந்து JF-17 Block III போர் விமானங்களை ($1.6 Billion) வாங்கியுள்ளது. ➤இந்தோனேசியாவின் சோலோக்கில் உள்ள தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் உயிரிழந்தனர். ➤அமெரிக்காவில் அதிகரித்துவரும் துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ➤வடக்கு வியட்நாமில் யாகி புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆசிய வளர்ச்சி வங்கி ₹16 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

News September 28, 2024

பழைய பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு

image

அரசுப் பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை, டிசம்பர் மாதத்திற்குள் பதிவு செய்து முடிக்குமாறு ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சேமிப்பு கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, உடனடியாக வங்கியிலோ, தபால் நிலையத்திலோ சேமிப்பு கணக்குகளை துவக்கவும் அறிவுறுத்தியுள்ளது. ஆபத்தான நிலையிலும், பயன்பாடில்லாத நிலையிலும் உள்ள பழைய பள்ளி கட்டடங்களை இடிக்கும்படியும் ஆணையிட்டுள்ளது.

News September 28, 2024

புற்றுநோயை குணப்படுத்தும் பழங்கால மரம்?

image

யூதேயா பாலைவனத்தில் உள்ள பழங்கால மரத்திற்கு புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ளனர். குகையொன்றில் கிடைத்த 1,000 ஆண்டுகள் பழமையான விதை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்டு, பயிரிட்டு மரமாக வளர்க்கப்பட்டது. விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஷீபா எனப் பெயரிடப்பட்ட இம்மரத்தின் பிசினில் கிளைகோலிப்பிட் வேதிப்பொருள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

News September 28, 2024

வந்தே பாரத் இறக்குமதியில் வெளிநாடுகள் ஆர்வம்

image

சிலி, கனடா, மலேசியா போன்ற நாடுகள் வந்தே பாரத் ரயில்களை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. இந்த வகை ரயில்களை மற்ற நாடுகளில் இருந்து வாங்க ₹160-180 கோடி செலவாகும் நிலையில், இந்தியா ₹120-130 கோடிக்கு உற்பத்தி செய்வதுதான் வெளிநாடுகளின் இறக்குமதி ஆர்வத்துக்கு முக்கிய காரணமாகும். ஜப்பான் புல்லட் ரயில் 0-100 KPH-ஐ அடைய 54 வினாடிகள் ஆகும். ஆனால், வந்தே பாரத் 52 வினாடிகளில் அடையும்.

News September 28, 2024

19 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) கணித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், திருச்சி, தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

News September 28, 2024

6ஆவது வாரமாக வளர்ச்சியை பதிவு செய்த FOREX

image

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு செப்., 20ஆம் தேதி 692.3 பில்லியன் டாலர்களை எட்டியது. RBI தரவுகளின்படி, FOREX தொடர்ந்து 6ஆவது வாரமாக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த 5 வாரங்களில் மொத்த கையிருப்பு $19.3 பில்லியனாக உயர்ந்த நிலையில், இந்த வாரத்தில் கையிருப்பு $2.84 பில்லியன் அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்தில் $603.6 பில்லியனில் இருந்து $605.7 பில்லியனாக FOREX சொத்துக்கள் அதிகரித்துள்ளன.

News September 28, 2024

ஐஸ்வரியங்களை அருளும் படிக்காசுநாதர்

image

காவிரி பாயும் பெருமை வாய்ந்த தஞ்சையின் அழகாபுத்தூரில் அமைந்துள்ளது படிக்காசுநாதர் கோயில். புகழ்த்துணை நாயனாருக்கு படிக்காசு தந்து, மக்களின் வறுமையைப் போக்கி திருவிளையாடல் ஆடி, சிவபதவி அருளிய இந்த திருத்தலத்திற்கு கோச்செங்கட்சோழன் திருப்பணி செய்துள்ளார். இங்குள்ள இறைவனை 2 நாணயங்களை வைத்து வணங்கி, ஒன்றை கோயிலில் விட்டு, மற்றொன்றை வீட்டிற்கு எடுத்து சென்றால் ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

News September 28, 2024

விளம்பரம் கொடுத்து நடிகரை தேடும் போலீஸ்

image

நடிகையை ஹோட்டல் அறையில் பூட்டி வைத்து பலாத்காரம் செய்ததாக, மலையாள நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், சித்திக் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை, கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, அவரை கைது செய்ய போலீசார் தேடிய நிலையில் தலைமறைவானார். இந்நிலையில், அவரை கண்டுபிடிக்க போலீஸ் சார்பில் மலையாளம் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளது.

News September 28, 2024

பாப்பம்மாள் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

image

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். x பக்கத்தில், பாப்பம்மாளின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். அவருடைய அடக்கம் மற்றும் கனிவான இயல்புக்காக மக்கள் அவரை நேசித்ததாக கூறிய அவர், எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News September 28, 2024

சித்தராமையாவின் புகழை கெடுக்க முயற்சி: கார்கே

image

நில மோசடி வழக்கில் முதல்வர் சித்தராமையா பக்கம் உறுதுணையாக நிற்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். வழக்குப்பதிவு செய்யப்பட்டால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜவினர் சொல்கிறார்கள். அப்படியென்றால் மோடி, அமித்ஷா மீதும் பல்வேறு வழக்குகள் உள்ள அவர்கள் ராஜினாமா செய்வார்களா என கேள்வி எழுப்பினார். சித்தராமையாவின் புகழை கொடுக்க பாஜக முயற்சி செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!