India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான தக் லைஃப், பொங்கலுக்கு ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழு அறிவித்தாலும், த்ரிஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் மட்டும் எடுக்கப்பட வேண்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் போஸ்ட் புரொடக்சன் பணிகளை விரைந்து முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது.
மத்திய அரசின் BIS நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட 390 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். உதவி இயக்குநர், தனி செயலர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி கடந்த 9ம் தேதி தொடங்கியது. நாளை நள்ளிரவு வரை இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவல் உங்களுக்கு பயன் அளித்திருக்கும். இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
பெங்களூருவில் நடந்த IPL நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முடிவில், IPL 2025 போட்டிக்கு ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்கவைக்க அனுமதிப்பது, வீரர்களை வாங்குவதற்கு மொத்தமாக ₹120 கோடி வரை (முன்னதாக ₹100 கோடி) செலவிட அணியை அனுமதிப்பது, இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை தொடர்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில், இதனை வாரிசு அரசியல் என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “வாரிசு அரசியலில் இல்லாதவர்கள்தான் உதயநிதி நியமனம் குறித்து கேள்வி கேட்க வேண்டும். இதை விமர்சிப்பவர்கள், முதலில் தாங்கள் வாரிசு அரசியலில் இருக்கிறோமா என பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘இந்தியன் – 2’ படம் தோல்வி அடைந்த நிலையில், அடுத்து வெளிவரும் ‘தக்லைஃப்’ படத்தின் வெற்றியை கமல்ஹாசன் பெரிய அளவில் எதிர்பார்த்துள்ளார். இந்த படத்தை எப்படியாவது ஹிட்டாக்கிவிட வேண்டுமென நினைப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக மணிரத்னத்துடன் இணைந்து, புதிய பாணியிலான புரமோஷன்களை செய்ய அவர் வியூகங்களை வகுத்து வருவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
IPL 2025 தக்கவைப்பு விதிகளில் ‘Uncapped Player’ விதிமுறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்த
முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் ஆன வீரர்களை, அறிமுக வீரர்களாக கருதும் வகையில் விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய திருத்தம் மூலம் CSK அணியில் தோனியை (NZ எதிராக 2019) சேர்க்கப்படாத வீரராக வைத்திருக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
உதயநிதி இன்று துணை முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், சர்வதேச இதய தினத்தையொட்டி இன்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், “வாரிசு அரசியலையும், ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால், இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிகளை செய்து நானும் இதயத்தை பலப்படுத்தி வருகிறேன்” எனக் கூறினார்.
ரயில்வே உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு, கல்வி டிவியில் நாளை முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. இதில், டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு அக்.4 வரை காலை 7-9 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. மறுஒளிபரப்பு மாலை 7-இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. SHARE IT.
மலேசியாவில் நடந்த புரோமோஷன் விழாவில் ‘அமரன்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய் பல்லவி பகிர்ந்துள்ளார். விழாவில் பேசிய அவர், “இதுவரை ஒருவரின் பயோ-பிக்கில் நான் நடித்ததில்லை. ‘அமரன்’ படத்தில் எனது கதாபாத்திரம் குறித்து மேஜர் முகுந்தின் மனைவி ரெபெக்கா வர்கீஸை சந்தித்து முழுவதுமாக அறிந்துகொண்டேன்” என்றார். சமீபத்தில் வெளியான அவரது ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
முன்பு FRAUD என்று திமுகவால் விமர்சிக்கப்பட்ட செந்தில் பாலாஜி இப்போது எப்படி தியாகியானார் என்று அதிமுக கிண்டலடித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், அதிமுகவில் செந்தில் பாலாஜி இருந்தபோது, அவரை ஆள் கடத்தல் செய்பவர், சீட்டிங் என்று திமுக குற்றம்சாட்டியது. ஆனால் அவரை தற்போது தியாகி என்கிறது என்று கிண்டலடித்தார்.
Sorry, no posts matched your criteria.