news

News September 29, 2024

துணை முதல்வர்கள் ஓர் பார்வை

image

இந்திய அரசியல் வரலாற்றில் துணை முதல்வர் பதவி என்பது பொதுவான ஒன்றாகவே உள்ளது. நீலம் சஞ்சீவ ரெட்டி, ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, எஸ்.எம்.கிருஷ்ணா, சித்தராமையா, எடியூரப்பா, ஸ்டாலின், ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலரும் துணை முதல்வர்களாக இருந்துள்ளனர். தற்போது இந்தியாவில் 14 மாநிலங்களில் துணை முதல்வர்கள் உள்ளனர். உ.பி, மகாராஷ்டிரா, பிஹார் உள்ளிட்ட சில மாநிலங்களில் 2 துணை முதல்வர்கள் உள்ளனர்.

News September 29, 2024

7வது இடத்திற்கு தள்ளப்பட்ட நியூசிலாந்து

image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்ற NZ, 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனால் 4வது இடத்தில் இருந்த NZ தற்போது 7வது இடத்திற்கு சென்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 71.67 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. AUS, SL, ENG, BAN, SA, NZ, PAK, WI அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

News September 29, 2024

துணை முதல்வர் உதயநிதிக்கு குவியும் வாழ்த்து

image

தமிழகத்தின் துணை முதல்வராகியுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பாமக தலைவர் அன்புமணி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், அவரது பணி சிறக்கவும், மேன்மேலும் அவர் முன்னேறவும், சட்டத்தின் ஆட்சியை சிறப்பாக வழங்க வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 29, 2024

‘தளபதி 69’-ல் இணையும் மஞ்சு வாரியர்?

image

‘தளபதி 69’-ல் மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இயக்குநர் H.வினோத்துடன் மீண்டும் இணைய உள்ளதாக மஞ்சு வாரியர் சமீபத்திய பேட்டியில் மறைமுகமாகத் தெரிவித்ததுதான் இந்த பரபரப்புக்கு காரணம். ‘துணிவு’ படப்பிடிப்பின் போது, தனது அடுத்த படத்தில் முழு நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தும் வகையிலான கதாபாத்திரத்தை வழங்குவதாக வினோத் கூறியிருந்ததை அவர் பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

News September 29, 2024

புதிய அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு

image

இன்று புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, செந்தில் பாலாஜி – மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை, கோவி.செழியன் – உயர்கல்வித்துறை, ஆர்.ராஜேந்திரன் – சுற்றுலாத்துறை, ஆவடி நாசர் – சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News September 29, 2024

கோப்பை யாருக்கு கிடைக்கும்?

image

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ODI போட்டியில், ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ENGக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள AUS, 3 டெஸ்ட், 5 ODIஇல் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் 1-1 என சமனான நிலையில், இதுவரை நடைபெற்ற 4 ODIகளில், 2இல் AUSயும், 2இல் ENG அணியும் வென்றுள்ளன. இதனால், இன்றைய இறுதிப் போட்டி 2 அணிகளுக்கும் மிகவும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாருக்கு கோப்பை? Cmt Here.

News September 29, 2024

வசூலை வாரி குவிக்கும் ‘தேவரா – 1’

image

‘தேவரா – 1’ திரைப்படம் உலகம் முழுவதும் 2 நாளில் ₹243 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்தின் மூலம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

News September 29, 2024

2ஆவது டெஸ்ட்: 3வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

image

இந்தியா, வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. கான்பூரில் நடைபெறும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம், 2ஆவது நாள் ஆட்டம் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது. 3ஆவது நாள் ஆட்டமான இன்று மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டதால், முதலில் போட்டி தொடங்குவது தாமதமாகும் எனக் கூறப்பட்டது. பிறகு கைவிடப்பட்டது.

News September 29, 2024

உதயநிதி எக்ஸ் பக்கத்தை கவனிச்சீங்களா..

image

உதயநிதி தமிழக துணை முதலமைச்சராக இன்று மாலை அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். அரசியலுக்கு வந்த 5 ஆண்டுகளிலேயே அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது கடும் விமர்சனத்தை ஈர்த்து வருகிறது. விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பதவியேற்புக்கு முன்னதாகவே, தனது எக்ஸ் பக்கத்தில் ‘தமிழ்நாடு துணை முதலமைச்சர்’ என உதயநிதி மாற்றியுள்ளார்.

News September 29, 2024

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்?

image

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் தைரியமும், தர்ம சிந்தனையும் கொண்டவராக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வம்பு சண்டைக்குப் போகமாட்டீர்கள். அதேநேரத்தில், வலிய வரும் சண்டையை விடமாட்டீர்கள். நினைத்ததை முடிக்கும் செயல்திறன், உள்ளதை உள்ளபடி சொல்லும் மனம் கொண்டவர்கள் என்று நந்தி வாக்கியம் உங்களைப் பற்றிக் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.

error: Content is protected !!