India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் புதிய மாநகராட்சியாக ஊட்டி மாநகராட்சி உதயமாக உள்ளது. இதில், ஊட்டி நகராட்சி, கேத்தி பேரூராட்சி, தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார், உல்லத்தி ஆகிய 4 ஊராட்சிகள் இணைய உள்ளது. இதற்கான முன்மொழிவு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எந்நேரத்திலும் அரசு அதை ஏற்று அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதையொட்டி, இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
‘விடியல்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை தமிழக மக்கள் தற்போது புரிந்துக் கொண்டுள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 40 மாதங்களாக சிலருக்காக மட்டும் சூரியன் மிளிர்வதாகவும், மற்றவர்களுக்கு கிரகணம் பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், குடும்பத்திற்கான விடியலால் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
உதயநிதி துணை CM ஆவதால் எதுவும் மாறிவிடாது என்று அதிமுக விமர்சித்துள்ளது. தனியார் டிவிக்கு பேட்டியளித்த அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், உதயநிதி துணை CM ஆவதால் விலைவாசி குறையுமா? மகளிர் உரிமைத் தொகை ரூ.10,000ஆக உயருமா? டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் அவர் மூடிவிடுவாரா? என கேள்விகளை எழுப்பினார். உதயநிதி துணை CM ஆவதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என்றும் தெரிவித்தார்.
துருக்கியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் குப்ரா அய்குட் (26) தற்கொலை செய்துகொண்டார். கடந்தாண்டு தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்து, உலக பிரபலம் ஆனார். அவர் இறப்பதற்கு முன் பதிவிட்ட வீடியோவில், உடல் எடையை அதிகரிப்பது சவாலாக உள்ளதாகவும், மிக விரைவில் எடையை அதிகரித்தே ஆக வேண்டும் எனவும் கூறியிருந்தார். ஆனால், தினமும் ஒரு கிலோ எடை குறைந்துகொண்டே வருவதாக வேதனை வெளிப்படுத்தியிருந்தார்.
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள ‘நந்தன்’ திரைப்படத்தை திருமாவளவன் பாராட்டியுள்ளார். ஊராட்சி அமைப்புகளில் நிலவும் சாதிய கோரத் தாண்டவத்தை இயக்குநர் துணிச்சலாக தோலுரிப்பதாகவும், ஆள்வதற்கு மட்டுமல்ல; வாழ்வதற்கும் அதிகாரம் தேவை என்ற கருத்தை படம் உரத்துப் பேசுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊர்களின் வேர்களில் இன்னும் சனாதனமே கோலோச்சுவதை படம் அம்பலப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் விளாசிய கேப்டன் என்ற கோலியின் சாதனையை (310 ரன்கள்) இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் (312 ரன்கள்) முறியடித்துள்ளார். ஜோஸ் பட்லர் விலகலால் கேப்டன் பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே ஹாரி இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் 285 ரன்களுடன் மகேந்திர சிங் தோனி மூன்றாம் இடத்தில் உள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் 460 கிராம ஊராட்சிகளை இணைக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம ஊராட்சிகளின் பதவிக் காலம் முடிந்தவுடன், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அருகில் உள்ள கிராம உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளுடன் 13 பேரூராட்சிகள் மற்றும் 196 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.
ரஜினியின் பண்புதான் அவரை சூப்பர் ஸ்டாராக வைத்துள்ளதாக ‘வேட்டையன்’ இயக்குநர் டி.ஜே.ஞானவேல் தெரிவித்துள்ளார். இதுவரை 2 படங்களை மட்டுமே இயக்கிய தனக்கு, குரு பாலச்சந்தருக்கு கொடுத்த மரியாதையை ரஜினி கொடுத்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும், ரஜினிக்கு ஸ்கிரிப்ட் படிப்பதை விட, கதை கேட்பதிலேயே ஆர்வம் அதிகம் எனவும், எந்தவித சமரசமும் செய்யாமல் படத்தை முடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திமுக அமைச்சரவையில் உயர் கல்வித்துறை என்றால் பொன்முடிதான் என்ற நிலை இருந்தது. ஆனால், அவரது துறை மாற்றப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது விருப்பத்தின் பேரிலேயே துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன. சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரத்தை அடுத்து, மத்திய அரசு, ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும் துறை வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
BSNL நிறுவனம் ரீசார்ஜ் பிளானில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, ₹485 பிளானின் வேலிடிட்டி 82 நாள்களில் இருந்து 80 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், முன்பு ஒருநாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 500 MB அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி, ₹485 பிளானில் அன்லிமிடெட் கால் வசதி, ஒருநாளுக்கு 2 ஜிபி டேட்டா 80 நாள்களுக்கு வழங்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.