news

News April 15, 2025

உதயநிதிக்கும் ஆதரித்து பேசுவேன்: துரைமுருகன்

image

மாநில சுயாட்சி தொடர்பாக நாளை உதயநிதி தீர்மானம் கொண்டு வந்தாலும் அதனை ஆதரித்து பேசுவேன் என்று துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசினார். இன்று அறிமுகம் செய்யப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானம் மீது பேசிய அவர், 1974ஆம் ஆண்டு கலைஞர் தீர்மானம் கொண்டு வந்தபோதும் பேசினேன், இன்றும் பேசுகிறேன், நாளை உதயநிதி தீர்மானம் கொண்டு வந்தால் அப்போதும் ஆதரித்து பேசுவேன் என்று பெருமைப்பட கூறினார்.

News April 15, 2025

வினோத் காம்ப்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய கவாஸ்கர்

image

உடல்நலம் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மருத்துவ செலவுக்கு சுனில் கவாஸ்கரின் தொண்டு நிறுவனம் உதவ முன்வந்துள்ளது. அவரின் சிகிச்சைக்காக மாதம் ₹30,000 வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்நாள் முழுவதும் இந்ததொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது நண்பரான காம்ப்ளி 104 ODIs, 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

News April 15, 2025

பிரபல இயக்குநர் S.S.ஸ்டான்லி காலமானார்

image

பிரபல இயக்குநரும், நடிகருமான S.S.ஸ்டான்லி(58) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தனுஷ் நடிப்பில் ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ஸ்ரீகாந்த் நடிப்பில் ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பெரியார் திரைப்படத்தில் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். ஸ்டான்லி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 15, 2025

சிக்கிய கல்யாண ராணிகள்.. சீட்டிங் கும்பலின் பின்னணி!

image

உ.பி.யில் 13 திருமண மோசடியில் ஈடுபட்ட 3 கல்யாண ராணிகள் இப்போது கம்பி எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்களே அவர்களது குறி. ஆசை வார்த்தையால் ஆண்களை மயக்கும் மோசடிப் பெண்கள், திருமணம் முடிந்ததும் அவர்களிடம் இருந்து தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை சுருட்டிவிட்டு கம்பி நீட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அவர்களது லிஸ்டில் இன்னும் எத்தனை ‘முதிர்கண்ணன்கள்’ சிக்கி இருக்கிறார்களோ?

News April 15, 2025

வக்ஃப் சட்டத்திற்கு எதிரான விஜய்யின் மனு ஏற்பு

image

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. வக்ஃப் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு உள்பட வழக்கு தொடர்பான 10 மனுக்கள் நாளை விசாரணைக்காக பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.

News April 15, 2025

பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்வு

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 500 புள்ளிகள் உயர்ந்து 23,328 புள்ளிகளை தொட்டது. சென்செக்ஸ் 1,577 புள்ளிகள் உயர்ந்து 76,734 புள்ளிகளை கடந்தது. சர்வதேச சந்தைகள் அனைத்தும் உயர்ந்திருப்பது இந்திய சந்தைகளுக்கும் சாதகமாக மாறியிருக்கிறது.

News April 15, 2025

இளையராஜா செய்வது சரியா? தவறா?

image

அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் GBU படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவரது படைப்புக்கு அவர் உரிமை கோருகிறார், இதில் என்ன தவறிருக்கிறது என்று ஒரு தரப்பினரும், அவரது பாடல்கள் பொதுவானவைதானே, அதுக்கெல்லாமா பணம் கேட்பது என்று ஒரு தரப்பினரும் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்களது கருத்து என்னவென்று கமெண்ட்டில் சொல்லுங்க.

News April 15, 2025

தரமான சம்பவம்.. ஸ்ரேயஸை தேடி வந்த ஐசிசி விருது..!

image

மார்ச் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் (243 ரன்கள் ) சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் இந்த மாதத்திற்கான விருதை வென்று அசத்தியுள்ளார். பிப். மாதத்திற்கான விருதும் இந்தியரான சுப்மன் கில்லுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News April 15, 2025

பாமக பிரச்னை முடிவுக்கு வந்தது

image

பாமகவிற்குள் ஏற்பட்ட சலசலப்பு முடிவுக்கு வந்துவிட்டதாக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார். தந்தை & மகன் இடையே ஏற்பட்ட அதிகாரப்போட்டி காரணமாக, கட்சிக்கு தானே தலைவர் என்று ராமதாஸ் அறிவித்துக் கொண்டார். ‘நான் தான் தலைவர்’ என்று அன்புமணியும் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், வரும் பொதுக்கூட்டத்தில் இருவரும் இணைந்து கலந்து கொள்வார்கள் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

News April 15, 2025

சிவகாசியில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி: CM ஸ்டாலின் இரங்கல்

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோயில் விழாவில் ரேடியோ அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். காரிசேரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (27), அவரது மனைவி லலிதா (25), பாட்டி பாக்கியம் (75) நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். மூவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள CM, அவர்களது குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!