news

News October 18, 2024

தொடர்ந்து புதிய உச்சத்தில் தங்கம் விலை!

image

தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து, தொடர்ந்து புதிய உச்சத்தில் இருந்து வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹640 உயர்ந்து ஒரு சவரன் ₹57,920க்கும், கிராமுக்கு ₹80 உயர்ந்து ஒரு கிராம் ₹7,240க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ஒரு கிராம் ₹105க்கும், கிலோ ₹1,05,000க்கும் விற்கப்படுகிறது.

News October 18, 2024

சாதிக்குமா இந்திய இளம் படை!

image

ACC Men’s Emerging டி20 ஆசிய கோப்பை தொடர் ஓமனில் இன்று தொடங்குகிறது. இந்தியா ஏ உள்பட 8 அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. திலக் வர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். அவருடன் சாய் கிஷோர், அபிஷேக் சர்மா, ராகுல் சாகர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர். போட்டியை STAR SPORTS 1, FanCode appல் காணலாம்.

News October 18, 2024

நவகிரகங்களுக்கு உரிய நவதானியங்கள்

image

ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல எந்த நாளில், எந்த தானியத்தை, எந்த கிரகத்திற்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க. சூரியன் – கோதுமை (ஞாயிறு), சந்திரன் – நெல் (திங்கள்), செவ்வாய் – துவரை (செவ்வாய்), புதன்- பாசிப்பயறு (புதன்), குரு – கொண்டைக்கடலை (வியாழன்), சுக்கிரன் – மொச்சை (வெள்ளி), சனி – கருப்பு எள், கேது – கொள்ளு & ராகு – உளுந்து (சனி).

News October 18, 2024

பழுதான பள்ளி கட்டடங்களை பயன்படுத்தக் கூடாது

image

பள்ளிகளில் பழுதான கட்டடங்கள் அருகே மாணவர்கள் செல்ல அனுமதிக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார். பருவமழை தீவிரமடைவதால் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்திய அவர், *பாடவேளையில் மாணவர்கள் வகுப்பில் இருப்பதை உறுதி செய்யவும் *பழுதான கட்டங்களில் தடுப்புகள் வைக்கவும் *நீர் நிரம்பிய இடம் அருகே மாணவர்கள் செல்வதைத் தவிர்க்க, அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

News October 18, 2024

இன்று வெளியாகிறது `ப்ளடி பெக்கர்’ ட்ரெயிலர்

image

சிவபாலன் முத்துகுமார், கவின் கூட்டணியில் உருவாகியுள்ள `ப்ளடி பெக்கர்’ படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, அக்ஷயா ஹரிஹரன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் நெல்சன் தயாரிக்க, ஜென் மார்டின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ட்ரெய்லருக்கு யாரெல்லாம் வெயிட்டிங்? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 18, 2024

இனி இதற்கு 5 ஆண்டுகள் சிறை? வருகிறது மாற்றம்?

image

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் இ-மெயில் மூலம் 15 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாள்களாக இதுபோன்ற மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதால், இச்சம்பவம் குறித்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று விமானங்களுக்கு மிரட்டல் விடுப்பவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

News October 18, 2024

நவம்பரில் தமிழகத்தில் அதிக மழைக்கு வாய்ப்பு

image

வடக்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் கணித்துள்ளார். இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வடக்கு நோக்கிச் செல்லும் என்றும், அது வலுவிழந்து நகரும் பட்சத்தில் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார். அத்துடன், நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் முன்னறிவித்துள்ளார்.

News October 18, 2024

இன்று தவெக அரசியல் பயிலரங்கம்

image

சேலத்தில் இன்று தவெக அரசியல் பயிலரங்கம் நடக்க உள்ளது. இதில், இதுவரை தமிழகத்தில் நடந்த மாநாடுகள், கொள்கை மற்றும் கருத்தியல் அணுகும் முறை, சமூக பொறுப்புணர்வு குறித்து அரசியல் திறனாய்வாளர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். தொடர்ந்து, மாநாட்டுப் பணிக்கானக் குழு நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வும் நடைபெற உள்ளது. இதில், அனைத்து குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

News October 18, 2024

மோசமான சாதனைகளிலும் முதல் இடம்!

image

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை டக் அவுட்டான இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 38 முறை (596 inns) டக் அவுட் ஆகியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சச்சின் 34 முறை (782 inns), ரோஹித் ஷர்மா 33 முறை (513inns), சேவாக் 31 முறை (430 inns), கங்குலி 29 முறை (484 inns), யுவராஜ்சிங் 26 முறை (388 inns) டக் அவுட் ஆகியுள்ளனர்.

News October 18, 2024

சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை? விளக்கம்!

image

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் இன்று மிதமான மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது. அந்தவகையில், சென்னையில் அதிகாலை முதல் இடி, பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுமா? என கேள்வி எழுந்தது. இந்நிலையில், சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும் என ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விளக்கமளித்துள்ளார்.

error: Content is protected !!