news

News October 18, 2024

RAW அதிகாரி மீது FBI பரபரப்பு புகார்

image

RAW அதிகாரி விகாஸ் யாதவ் மீது அமெரிக்கா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குருபத்வந்த் பன்னுவை கொல்ல அவர் சதி செய்ததாக FBI குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்காக நிகில் குப்தா என்பவர் நியமிக்கப்பட்டதாகவும், அவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழு நியமிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

News October 18, 2024

இணையத்தில் வைரலாகும் retention list

image

ஐபிஎல் வீரர்களை தக்கவைப்பது குறித்த பட்டியல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. MI: ரோஹித், பும்ரா, சூர்ய குமார், ஹர்திக் DC: பண்ட், அக்ஷர், ஜேக்/குல்தீப், PK: அர்ஷ்தீப் சிங் LSG: பூரன், மயங்க் யாதவ், பதோனி/மொஹ்சின் CSK: ஜடேஜா, ருதுராஜ், துபே, தோனி GT: கில், ரஷித், SRH: கம்மின்ஸ், அபிஷேக், கிளாசென் RR: சாம்சன், பராக், ஜூரல் KKR: ஷ்ரேயாஸ், ரஸ்ஸல், நரைன் RCB: கோலி, டுபிளெசிஸ், சிராஜ்.

News October 18, 2024

முடி கொட்டுகிறதா? அப்போ இதை குடியுங்கள்!

image

முடி வளர்ச்சியை மீட்டெடுக்க ஆயுர்வேதத்தில் பல ரகசிய குறிப்புகள் உள்ளன. அதில் ஒன்றுதான் நீலி கரிசாலை கஷாயம். ரத்தத்தை சீர்படுத்தி மயிர்க்கால்களின் வளர்ச்சியை தூண்டும் ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த நீலியுடன் மஞ்சள் கரிசாலை பூவை கொதி நீரில் போட்டு, நன்கு சுண்டிய பின் வடிகட்டினால் கசாயம் தயார். இதை 45 நாட்கள் காலையில் பருகி வந்தால் முடி உதிர்தல் பிரச்னை தீரும்.

News October 18, 2024

கொந்தளித்தார் ஓபிஎஸ்!

image

தியாகம் பற்றி ‘துரோகம்’ பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக EPSஐ மறைமுகமாக OPS விமர்சித்துள்ளார். 45%ஆக இருந்த அதிமுக வாக்கு வங்கி இன்று 20%ஆக குறைந்துள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுக ஆட்சி அமைக்க முடியாது என்றும் சூளுரைத்துள்ளார். அதிமுக வீறுகொண்டு எழ பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும், பிரிந்தவர்கள் இணைய பண்புள்ள தலைமை தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

News October 18, 2024

சற்றுமுன்: தவெக அரசியல் பயிலரங்கம் தொடக்கம்!

image

சேலம் ஆத்தூரில் தவெக நிர்வாகிகளுக்கான அரசியல் பயிலரங்கம் தொடங்கியது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடக்கும் பயிலரங்கில், தமிழகம், புதுச்சேரி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதில், கொள்கை மற்றும் கருத்தியல் அணுகும் முறை, சமூக பொறுப்புணர்வு குறித்து அரசியல் திறனாய்வாளர்கள் கருத்துரை வழங்கி வருகின்றனர். அத்துடன், மாநாட்டுப் பணிக்கானக் குழு நெறிமுறைகள் குறித்த கலந்தாய்வும் நடக்கவுள்ளது.

News October 18, 2024

விளையாட்டு துளிகள்

image

➤ISSF World Cup: ஆடவர் டிராப் பிரிவில் இந்திய வீரர் விவான் கபூர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ➤டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை P.V.சிந்து முன்னேறினார். ➤தெற்காசிய கால்பந்து லீக்: முதல் போட்டியில் பாகிஸ்தானை 5-2 என்ற கோல் கணக்கில் இந்திய பெண்கள் அணி வீழ்த்தியது. ➤12 அணிகள் பங்கேற்கும் 11ஆவது புரோ கபடி லீக் போட்டி ஹைதராபாத்தில் (லீக் சுற்று ஆட்டங்கள்) இன்று தொடங்குகிறது.

News October 18, 2024

மழைக்காலத்தில் கீரைகள் சாப்பிடலாமா?

image

இயற்கையாகவே, மழைக்காலத்தில் கீரைகள் அதிகமாக விளையும். முருங்கை, தூதுவளை, பசலை, கறிவேப்பிலை, மூக்கிரட்டை போன்ற கீரைகளில் நிறைந்திருக்கும் குளோரோபில் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகச் செயல்பட்டு உடலின் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும். இதனால் மழைக்காலங்களில் வரக்கூடிய வைரஸ், டெங்கு, எலிக்காய்ச்சல் என அனைத்து விதமான காய்ச்சல்களிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும். ஆனால், கீரையை ஒருபோதும் இரவில் சாப்பிடக்கூடாது.

News October 18, 2024

1 RK வீடுகள் கட்ட வீட்டு வசதி வாரியம் திட்டம்

image

நகரங்களில் ஒற்றை அறை (1 RK) வீடுகளை கட்டுவதற்கான வழிமுறைகளை, வீட்டு வசதி வாரியம் ஆராய்ந்து வருகிறது. தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கணவன், மனைவி மட்டும் தங்குவதற்கு ஏற்ற வகையில், ‘ஸ்டூடியோ அபார்ட்மென்ட்டுகளை’ கட்டி விற்பனை செய்கின்றன. 300 Sq ft இருக்கும் இவ்வீடுகளில் அறைகளுக்கு தடுப்பு இருக்காது. இம்முறையை கடைப்பிடித்து வாரிய திட்டப்பகுதிகளில் இதுபோன்ற வீடுகளை கட்ட பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

News October 18, 2024

ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட சூர்யா

image

’கங்குவா’ படத்தின் ப்ரமோஷன் பணிகள் மும்பையில் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, திஷா பதானி, சிறுத்தை சிவா, ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்கள் சூர்யாவை சூழ்ந்து கொள்ள, அவர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் 20-ம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 18, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) மேகங்களின் திசை, உயரம் ஆகியவற்றை அறிய பயன்படும் கருவி எது? 2) ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகளைக் குறிக்கும்? 3) கபடியில் ஓர் அணியில் எத்தனை வீரர்கள் இடம் பெற்றிருப்பர்? 4) குழந்தைகளை போலவே ஓசை எழுப்பும் திறன் கொண்ட பறவை எது? 5) NOC என்பதன் விரிவாக்கம் என்ன? 6) நற்றிணை நூலைத் தொகுப்பித்தது யார்? 7) தலாய்லாமா என்பதன் பொருள் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

error: Content is protected !!