news

News October 17, 2024

இந்தியா-நியூசி. டெஸ்ட்: இன்று 2ஆவது நாள் ஆட்டம்

image

இந்தியா. நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, பெங்களூருவில் நேற்று தொடங்கியது. ஆனால் மழை காரணமாக முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 2ஆவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. மழை குறுக்கிடவில்லை எனில், போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அதன் நேரலையை Sports 18-1 SD, Sports 18-1 HD, Sports 18-2 (ஹிந்தி) டிவிக்கள், JioCinema app, வெப்சைட்டில் காணலாம். SHARE IT.

News October 17, 2024

ரேஷனில் பருப்பும், பாமாயிலும் வழங்கப்படும்: அமைச்சர்

image

தீபாவளிக்கு ரேஷன் கடையில் துவரம் பருப்பும், பாமாயிலும் தடையின்றி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இம்மாதத்திற்கு 11 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு, 1 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் உள்ளதாக கூறியுள்ளார். இதனால், தீபாவளிக்கு பொருள்கள் வழங்கப்படுமா என பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என்றார். முன்னதாக பருப்பு பற்றாக்குறை இருப்பதாக MLA வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியிருந்தார்.

News October 17, 2024

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோயில்களும்

image

➤சதயம் – நன்னிலம் அக்னிபுரீஸ்வரர் கோயில் ➤பூரட்டாதி – திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில் ➤உத்திரட்டாதி – திருநாங்கூர் மதங்கீஸ்வரர் கோயில் ➤ரேவதி – காருகுடி கயிலாசநாதர் கோவில். இந்த ஜென்ம நட்சத்திரத்திற்குரிய நாளில் விரதமிருந்து, இந்தக் கோயில்களுக்குச் சென்று, 11 வகை அபிஷேகம் செய்து, நெய் தீபமேற்றி வணங்கினால் கைமேல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

News October 17, 2024

இரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 10 மாவட்டங்களின் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

News October 17, 2024

இன்றைய நல்ல நேரம்

image

▶அக். 17 (புரட்டாசி 31) ▶வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶ திதி: பவுர்ணமி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: தெற்கு▶ பரிகாரம்: தைலம் ▶ நட்சத்திரம்: ரேவதி ▶சந்திராஷ்டமம்: மகம், பூரம். SHARE பண்ணுங்க.

News October 17, 2024

பாஜக ஆட்சிக்கு வந்தால்.. ஆம் ஆத்மி எச்சரிக்கை

image

டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரத்தை நிறுத்திவிடும் என்று ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், டெல்லியில் எப்படியேனும் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தால், டெல்லியில் நடைபெறும் அனைத்து பணிகளையும் நிறுத்திவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசு: அமித் ஷா

image

அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% அதிகரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அமித் ஷா, பண்டிகைகாலத்தை கருத்தில் காெண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியை அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

News October 17, 2024

80 ஆயிரம் வருடங்களுக்கு பின் தான் மீண்டும் பார்க்க முடியும்

image

பூமிக்கு மிக அருகில் அரிதாக வரும் சுசின்ஷான் வால் நட்சத்திரத்தை இந்தியாவிலிருந்தும் பலர் பார்த்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இருந்து பலரும் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கடந்த மாதம் 28ஆம் தேதி சூரியனுக்கு அருகே வந்த இந்த வால் நட்சத்திரம், தற்போது சூரிய குடும்பத்திலிருந்து விலகிச் செல்கிறது. மீண்டும் இந்த நட்சத்திரத்தை 80,000 ஆண்டுகளுக்குப் பின்னரே பார்க்க முடியும்.

News October 17, 2024

IMD கணிப்பு பாெய்த்ததா?

image

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் அதி கனமழை எச்சரிக்கையை நேற்றும், இன்றும் வெளியிட்டிருந்தது. இதனால் மக்கள் பீதியில் இருந்தனர். ஆனால் நேற்றிரவு மட்டும் கனமழை கொட்டித் தீர்த்தது. இன்று காலை முதல் எங்கும் அதி கனமழையாே, மிக கனமழையோ இல்லை. இதனால் வானிலை மையம் தவறாக கணித்ததா? இல்லை கணிப்பு பொய்த்து விட்டதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்க.

News October 17, 2024

திமுகவின் சாயம் வெளுத்து இருக்கும்: அதிமுக கிண்டல்

image

அதி கனமழை மட்டும் பெய்திருந்தால் திமுகவின் சாயம் வெளுத்திருக்கும் என்று அதிமுக கிண்டல் அடித்துள்ளது. சென்னையில் பேட்டியளித்த EX சபாநாயகர் ஜெயக்குமார், காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாததால் மழை குறைந்துவிட்டது என்று சாடினார். சென்னையில் மழைநீர் செல்ல இடமில்லாமல் கழிவுநீருடன் கலந்து செல்கிறது என்றும், ஸ்டாலினின் கொளத்தூர் தாெகுதியிலேயே இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் விமர்சித்தார்.

error: Content is protected !!