news

News October 16, 2024

மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்: வாசன்

image

வடகிழக்கு பருவமழையில் இருந்து மக்களை காக்க தமாகாவினருக்கு G.K.வாசன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், இயல்புநிலை திரும்பும் வரை தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாத்து அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மக்களுக்கு தேவையான உதவிகளை களத்தில் இறங்கி செய்யவும் தமாகாவினருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 16, 2024

சானியா மிர்சாவுக்கு இரண்டாம் திருமணம் முடிந்ததா?

image

சோயப் மாலிக்கிடம் இருந்து விவாகரத்து பெற்ற சானியா மிர்ஸா இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மாலிக் சமீபத்தில் பாக்., நடிகை சனா ஜாவேத்தை 2வது தீர்மானம் செய்துகொண்டார். சனா ஜாவேத்தின் முதல் கணவருக்கும் சானியாவுக்கும் திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், இந்த செய்தி உண்மையல்ல என சானியாவின் நெருங்கிய நண்பர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

News October 16, 2024

4 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை?

image

வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை- நெல்லூர் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், RED ALERT நீடிப்பதாகவும் IMD அறிவித்துள்ளது. மழை அதிகமானால், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக நாளை காலை முடிவு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 16, 2024

‘வா வாத்தியார்’ வெளியீடு எப்போது?

image

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பொங்கல் வெளியீடாக 2025 ஜனவரியில் திரைக்குக் கொண்டு வர உள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். நலன் குமாரசாமி இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டியும், வில்லனாக நடிகர் சத்யராஜும் நடித்துள்ளனர்.

News October 16, 2024

கனமழை: முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!

image

சென்னையில் மழை நீர் தேங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “திமுக அரசு செய்த மழைநீர் வடிகால் பணிகளே இன்றைக்கு கைகொடுத்திருக்கிறது. ஒரே அடியாக பணிகளை முடிக்க முடியாது. இன்னும் 30 சதவீத பணிகளே மீதமிருக்கிறது. அதையும் விரைவில் முடித்துவிடுவோம். அதன் பிறகு, சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்னையே வராது” எனக் கூறினார்.

News October 16, 2024

Beauty Tips: புருவங்கள் அடர்த்தியாக வளர…

image

முகத்துக்கு அழகு சேர்க்கும் புருவங்களை பராமரிப்பது மிக அவசியமானது. புருவங்கள் அழகாக தெரிய, அதன் அடர்த்தி அதிகரிக்க இந்த இயற்கை வழிமுறையை பின்பற்றலாம். வாரத்திற்கு ஒருமுறை முட்டையின் மஞ்சள் கருவை, புருவங்களில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். முடி வளர்ச்சிக்கு முட்டையில் உள்ள புரதச்சத்து பெரிதும் உதவும். இவ்வாறு செய்துவர, புருவங்கள் அடர்த்தியாக வளரும்.

News October 16, 2024

ALERT: தற்போதைய மழை அப்டேட்

image

* அடுத்த 24 மணிநேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையில் அதி கனமழை பெய்யும்.
* அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும்.
* மழைக்கு காரணமான காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஆந்திராவில் நெல்லூர் – புதுச்சேரி இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் * காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது அதிகனமழை பெய்யும்.

News October 16, 2024

எகிறிய பார்த்திபன்.. ஆக்சனில் இறங்கிய ரயில்வே!

image

நடிகர் பார்த்திபன் இரு தினங்களுக்கு முன்பு ‘வந்தே பாரத்’ ரயிலில் பயணம் செய்தார். அப்போது, அவருக்கு வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பார்த்திபன் பதிவிட்டார். இதையடுத்து, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாக மாறியது. இதன் தொடர்ச்சியாக, ஆக்சனில் இறங்கிய ரயில்வே நிர்வாகம், உணவு தயாரித்த சேலத்தை சேர்ந்த கான்டிராக்டருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.

News October 16, 2024

ரயில்வேயில் 8,113 பணியிடங்கள்

image

நாடு முழுவதும் ரயில்வேயில் காலியாக உள்ள 8113 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்.20 ஆம் தேதி கடைசி நாளாகும். பயணச்சீட்டு மேற்பார்வையாளர், ஸ்டேஷன் மாஸ்டர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. இதற்கு 18 -36 வயதுடையவர்கள் <>https://www.rrbchennai.gov.in/<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

News October 16, 2024

நட்சத்திரங்களும் அதற்குரிய பரிகார கோயில்களும்

image

➤திருவாதிரை – சேங்காலிபுரம் சோழீஸ்வரர் கோயில் ➤புனர்பூசம் – சீர்காழி சட்டநாதசுவாமி கோயில் ➤பூசம் – விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயில் ➤ஆயில்யம் – திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோயில் ➤மகம் – திண்டுக்கல் மகாலிங்கேஸ்வரர் கோயில் ➤பூரம் – நாகை காயாரோகணேஸ்வரர் கோயில் ➤உத்திரம் – திருச்சி மாங்கல்யேஸ்வரர் கோயில் ➤அஸ்தம் – குத்தாலம் கிருபாகூபாரேஸ்வரர் கோயில் ➤சித்திரை – திருவையாறு ஐயாறப்பர் கோயில்.

error: Content is protected !!