news

News April 27, 2025

IPL: DC அணி முதலில் பேட்டிங்

image

டெல்லியில் இன்று இரவு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் RCB, DC அணிகள் மோதவுள்ளன. இதற்கான டாஸில் வெற்றி பெற்ற RCB அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறார். புள்ளிப்பட்டியலில், முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் DC & RCB அணிகள், முதலிடம் பிடிக்கும் முனைப்போடு களம் இறங்கவுள்ளது. எந்த அணி வெல்லும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

News April 27, 2025

தாய்ப்பால் ஊட்டுவது கடினம்: சானியா மிர்சா

image

இந்தியாவின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தன்னுடைய மகப்பேறு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தான் இன்னும் 3 பிள்ளைகளை கூட பெற்றுக் கொள்ளத் தயார் என்றும் அவர்களுக்கு தாய்ப்பால் புகட்டுவதுதான் சிரமமான காரியம் என்றும் அவர் பேசியுள்ளார். தனது மகன் இஷானுக்கு 3 மாதங்கள் மட்டுமே தாய்ப்பால் புகட்டியதாகவும் அதன்பின், மன உளைச்சலால் நிறுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.

News April 27, 2025

புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

image

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் நாளை (ஏப்.28) முதல் ஜூன் 1-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் CBSE பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. CBSE விதிப்படி முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டு நடக்கிறது. இந்நிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

UPI-ல் பில் கட்ட கிரெடிட் கார்டை யூஸ் பண்ணுவது எப்படி?

image

கிரெடிட் கார்டை Google pay-யுடன் இணைத்து ஈசியாக, UPI பரிவர்த்தனை செய்யலாம். அதற்கு, G-Pay அல்லது ஏதோ ஒரு UPI-யை ஓபன் செய்து, அதில், Bank accounts-க்கு செல்லுங்கள். அதில், Link New Credit Card என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களின் கிரெடிட் கார்டு தகவல்களை பதிவிடவும். பிறகு போனுக்கு வரும் OTP – யை பதிவிட்டு, primary transaction-ஆக தேர்வு செய்தால் போதும். ஆனால், செலவில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும்!

News April 27, 2025

2 புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் 2 MLA-க்கள் புதிதாக அமைச்சர் பொறுப்பை ஏற்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் MLA டாக்டர். R. லட்சுமணனுக்கு வனத்துறை ஒதுக்கப்படலாம் என்றும் அரவக்குறிச்சி MLA P.R.இளங்கோவுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.

News April 27, 2025

86,271 பேருக்கு இலவச பட்டா: அரசாணை வெளியீடு

image

ஆட்சேபகரமற்ற புறம்போக்கு பகுதிகளில் வசித்து வரும் 86,271 பேருக்கு இலவச பட்டா வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 17-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் 29,187 பேர், இதர மாவட்டங்களில் 57,084 பேர் தேர்வாகியுள்ளனர். இவர்களுக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 27, 2025

ரெட்ரோ vs டூரிஸ்ட் ஃபேமிலி..! உங்க சாய்ஸ் என்ன?

image

வரும் மே 1-ம் தேதி தமிழ் திரை ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் இருக்கு. இரு வேறு கதைக்களத்தை கொண்ட பெரிய படங்கள் வெளிவர உள்ளன. சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் ஆக்சன் கதைக்களத்தில் ரெட்ரோ-வும், ஃபில் குட் எமோஷனல் டிராமாவாக சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி-யும் வெளிவர இருக்கின்றன. இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இதில் எந்த படம் உங்கள் சாய்ஸ்?

News April 27, 2025

130 அணு ஆயுதங்கள் தயார்.. பாக். அமைச்சர் மிரட்டல்

image

பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தினால் இந்தியா போருக்குத் தயாராக வேண்டும் என பாக். அமைச்சர் ஹனீஃப் அபாஸி எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்களிடம் உள்ள 130 அணு ஆயுதங்கள் இந்தியாவை மட்டுமே குறிவைத்துள்ளதாகவும், ஆனால் அவை எங்கு உள்ளது என்பது யாருக்கும் தெரியாது எனவும் மிரட்டும் பாணியில் பேசியுள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியுள்ளது.

News April 27, 2025

விஜய்யுடன் கைகோர்க்கிறதா பாமக? புது ரூட்டில் ராமதாஸ்

image

தவெக உடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. NDA-ல் பாமக அங்கம் வகிக்கும் நிலையில், ராமதாஸ்-அன்புமணி இடையே மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், 2026 தேர்தலில் விஜய் உடன் கைகோர்க்க ராமதாஸ் முடிவெடுத்துள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், NDA-ல் தனது பேர வலிமையை கூட்டுவதற்காக, பாமக கையிலெடுத்த அஸ்திரமே விஜய் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை என்கிறார்கள் விமர்சகர்கள்.

News April 27, 2025

பாக்.க்கு ஆதரவாக குதிக்கிறதா சீனா? Ex ஜெனரல் புது தகவல்

image

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா
-பாக். இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ளது. ஒருவேளை பாக்.க்கு ஆதரவாக சீனா களமிறங்கினால், அது 3-வது உலகப் போரின் தொடக்கமாக இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்நிலையில், இந்தியா-பாக். இடையே போர் மூண்டால், சீனா தலையிடாது என Ex ஜெனரல் ராணா பிரதாப் கலிதா தெரிவித்துள்ளார். USA-வின் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதால், இதில் கவனம் செலுத்தாது என்றார்.

error: Content is protected !!