India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூரிய உதயத்தை முதன்முதலில் காணும் இந்திய மாநிலம் எது என அனைவருக்கும் தெரியுமா என்றால் சந்தேகமே. அதை இங்கு தெரிந்து கொள்வோம். அருணாசலப் பிரதேச மாநிலத்தின் அஞ்சோவ் மாவட்டத்தில் உள்ள டோங்கா கிராமமே முதலில் சூரிய உதயத்தைக் காண்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,240 மீட்டர் உயரத்தில் அந்த பகுதி உள்ளது. இந்தியா – சீனா எல்லையில் உள்ள அப்பகுதி சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. SHARE IT
குரூப் 4 தேர்வு குறித்த அன்புமணி ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு மனிதவள மேலாண்துறை அமைச்சர் கயல்விழி பதிலடி கொடுத்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் முட்டுக்கட்டை போட்ட ஆளுநரை கண்டிக்காத அன்புமணி, குரூப் 4 பணியிடங்களுக்கு ஏன் கவலைப்படுகிறார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சியில் குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தபோது அன்புமணி எங்கே போனார் எனவும் வினவியுள்ளார்.
ரத்த அழுத்தத்தை சீராக வைக்க சில பரிந்துரைகளை மருத்துவர்கள் அளித்துள்ளனர். அவை என்னென்ன? 1) டயட்டை தொடர்ந்து கடைபிடித்தல் 2) உப்பை குறைந்த அளவில் சேர்ப்பது 3) தொடர்ந்து உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் 4) உடல் எடையை சீராக பராமரித்தல் 5) மதுவை தவிர்த்தல் 6) புகைபிடிப்பதை கைவிடுதல் 7) சரியான நேரத்தில் தூங்கி எழுவதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர். SHARE IT.
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், அத்தியாவசிய சேவை துறைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
பருவமழை தொடர்பான மாநில காவல் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், கனமழை பெய்யும் பகுதிகள், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகள், நீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சாலைகளின் நிலை ஆகியவற்றை கண்காணிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். தமிழ்நாடு அதிதீவிர படையின் 6 பேரிடர் மீட்புக் குழுக்களை சந்தித்தும் அறிவுரை வழங்கினார்.
மழைக்காலம் என்பதால் நீர் நிலைகளையொட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிகனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பினால் குடியிருப்புக்குள் நீர் நுழைய வாய்ப்புண்டு. எனவே வீட்டில் உள்ள பொருள்களை உயரமான இடத்தில் எடுத்து வைக்க வேண்டும். பணம், நகை உள்ளிட்ட அதிக விலை மதிப்புடைய பொருள்களை பத்திரமாக வைக்க வேண்டும். மழையின்போது மரத்தின்கீழ் ஒதுங்குவதை தவிர்க்க வேண்டும்.
கடந்த 6 மணி நேரமாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து கிழக்கு- தென்கிழக்கு திசையில் 440 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 460 கி.மீ. தூரத்திலும், நெல்லூரில் இருந்து 530 கி.மீ. தூரத்திலும் நிலை காெண்டிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
நாளை (அக்.17) பவுர்ணமி ஆகும். தொடர்ந்து இந்தாண்டில் 3ஆவது முறையாக இந்தாண்டில் பூமிக்கு மிக நெருக்கமாக நிலா வருவதால் அதன் தோற்றம் மிகப் பெரிதாகவும், அதிக பிரகாசம் கொண்டதாகவும் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இக்காட்சியை நாளை மாலை 4.56 மணி முதல் 3 நாள்கள் வரை காண முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த முழு நிலவு ஹன்டர் மூன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்தத் தகவலை பகிருங்கள்.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அடுத்த சில நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் கீழ்காண்பவற்றை செய்வது நலமாகும். 1) மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை முழுவதும் சார்ஜ் செய்து கொள்ளுங்கள் 2) பால், பிஸ்கட், பிரட் இருப்பு வைத்து காெள்ளுங்கள் 3) வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் நிரப்பி கொள்ளுங்கள் 4) வீட்டில் போதிய குடிநீர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE IT.
சென்னை அருகே நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி- நெல்லூர் இடையே கரையை கடக்கவுள்ளது.
Sorry, no posts matched your criteria.