India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பருவமழை தொடர்பான மாநில காவல் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர், கனமழை பெய்யும் பகுதிகள், தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகள், நீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சாலைகளின் நிலை ஆகியவற்றை கண்காணிக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். தமிழ்நாடு அதிதீவிர படையின் 6 பேரிடர் மீட்புக் குழுக்களை சந்தித்தும் அறிவுரை வழங்கினார்.
மழைக்காலம் என்பதால் நீர் நிலைகளையொட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிகனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பினால் குடியிருப்புக்குள் நீர் நுழைய வாய்ப்புண்டு. எனவே வீட்டில் உள்ள பொருள்களை உயரமான இடத்தில் எடுத்து வைக்க வேண்டும். பணம், நகை உள்ளிட்ட அதிக விலை மதிப்புடைய பொருள்களை பத்திரமாக வைக்க வேண்டும். மழையின்போது மரத்தின்கீழ் ஒதுங்குவதை தவிர்க்க வேண்டும்.
கடந்த 6 மணி நேரமாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து கிழக்கு- தென்கிழக்கு திசையில் 440 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 460 கி.மீ. தூரத்திலும், நெல்லூரில் இருந்து 530 கி.மீ. தூரத்திலும் நிலை காெண்டிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
நாளை (அக்.17) பவுர்ணமி ஆகும். தொடர்ந்து இந்தாண்டில் 3ஆவது முறையாக இந்தாண்டில் பூமிக்கு மிக நெருக்கமாக நிலா வருவதால் அதன் தோற்றம் மிகப் பெரிதாகவும், அதிக பிரகாசம் கொண்டதாகவும் இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவில் இக்காட்சியை நாளை மாலை 4.56 மணி முதல் 3 நாள்கள் வரை காண முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த முழு நிலவு ஹன்டர் மூன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்தத் தகவலை பகிருங்கள்.
தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அடுத்த சில நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் கீழ்காண்பவற்றை செய்வது நலமாகும். 1) மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை முழுவதும் சார்ஜ் செய்து கொள்ளுங்கள் 2) பால், பிஸ்கட், பிரட் இருப்பு வைத்து காெள்ளுங்கள் 3) வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் நிரப்பி கொள்ளுங்கள் 4) வீட்டில் போதிய குடிநீர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE IT.
சென்னை அருகே நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி- நெல்லூர் இடையே கரையை கடக்கவுள்ளது.
மின்தடை குறித்து பெறப்படும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்காெண்டார். மின்னகத்திற்கு வரும் அனைத்து அழைப்புகளும் உடனடியாக இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கவும், புகார்தாரரிடம் பேசி குறைகள் சரி செய்யப்பட்டதை உறுதி செய்தபிறகே புகாரை முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
*செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சும் கோழைக்கு வெற்றி வெகுதூரம் *முயற்சியுடன் செயல்படுவோரையே வெற்றி தழுவும் * வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும் *சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகில் மகிழ்ச்சியான மனிதன் * விளைவுகளை வைத்தே செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும் * உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும். ஆனால் ஒடுக்கிவிட முடியாது. SHARE IT
14 மாவட்டங்களில் இன்று காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராமநாதபுரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம், தனது பலினோ மாடல் காரின் புதிய வெர்சனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரீகல் எடிசன் என்ற பெயரில் சந்தையில் களமிறக்கியுள்ள மாருதி சுசூகி, அக்காரில் கூடுதலாக 3டி மேட், பாடி சைட் மோல்டிங், ஏர் இன்பிலேட்டர், லோகோ புரொஜெக்டர் லேம்ப் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை சேர்த்துள்ளது. அதன் எக்ஸ் சோரூம் விலை ரூ.6.66 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரை ஆகும்.
Sorry, no posts matched your criteria.