news

News October 16, 2024

நாளை கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

image

சென்னை அருகே நாளை அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 490 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி- நெல்லூர் இடையே கரையை கடக்கவுள்ளது.

News October 16, 2024

புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை.. SB அறிவுறுத்தல்

image

மின்தடை குறித்து பெறப்படும் புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அவர் ஆய்வு மேற்காெண்டார். மின்னகத்திற்கு வரும் அனைத்து அழைப்புகளும் உடனடியாக இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கவும், புகார்தாரரிடம் பேசி குறைகள் சரி செய்யப்பட்டதை உறுதி செய்தபிறகே புகாரை முடிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

News October 16, 2024

நேருவின் பொன்மொழிகள்

image

*செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சும் கோழைக்கு வெற்றி வெகுதூரம் *முயற்சியுடன் செயல்படுவோரையே வெற்றி தழுவும் * வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும் *சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகில் மகிழ்ச்சியான மனிதன் * விளைவுகளை வைத்தே செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும் * உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும். ஆனால் ஒடுக்கிவிட முடியாது. SHARE IT

News October 16, 2024

14 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை கொட்டும்

image

14 மாவட்டங்களில் இன்று காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராமநாதபுரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

News October 16, 2024

புதிய மாடல் பலினோ காரை களமிறக்கியது மாருதி சுசூகி

image

மாருதி சுசூகி நிறுவனம், தனது பலினோ மாடல் காரின் புதிய வெர்சனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரீகல் எடிசன் என்ற பெயரில் சந்தையில் களமிறக்கியுள்ள மாருதி சுசூகி, அக்காரில் கூடுதலாக 3டி மேட், பாடி சைட் மோல்டிங், ஏர் இன்பிலேட்டர், லோகோ புரொஜெக்டர் லேம்ப் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை சேர்த்துள்ளது. அதன் எக்ஸ் சோரூம் விலை ரூ.6.66 லட்சம் முதல் ரூ.10.99 லட்சம் வரை ஆகும்.

News October 16, 2024

7 விரைவு ரயில்கள் இன்று ரத்து

image

சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் பேசின்பிரிட்ஜ் பகுதி தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியிருப்பதால், கீழ்காணும் 7 விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 1) போடி ரயில் 2) ஜோலார்பேட்டை -சென்ட்ரல் ஏலகிரி ரயில் 3) சென்ட்ரல் ஜோலார்பேட்டை ஏலகிரி ரயில் 4) திருப்பதி – சென்ட்ரல் ரயில் 5) சென்ட்ரல் -திருப்பதி ரயில் 6) திருப்பதி- சென்ட்ரல் சப்தகிரி ரயில் 7) ஈரோடு-சென்ட்ரல் ஏற்காடு ரயில்.

News October 16, 2024

கன மழை: கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவு

image

மழை நிலவரத்தை தீவிரமாக கண்காணிக்க கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 6 மாவட்ட ஆட்சியர்கள், அமைச்சர் ஆவடி நாசர் உள்ளிட்டோருடன் காணொலி மூலம் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, 2 நாள்கள் கனமழை பெய்யவுள்ளதால் இரவு முழுவதும் தீவிரமாக கண்காணிக்க ஆட்சியர்களை அறிவுறுத்தினார். கடலோரம், தாழ்வான பகுதிகளில் வசிப்போரை அரசு முகாம்களில் தங்க வைக்கவும் அவர் ஆணையிட்டார்.

News October 16, 2024

நியூசி டெஸ்ட் : உலக சாதனை படைக்க போகும் இந்தியா

image

இந்தியா – நியூசி. டெஸ்ட் போட்டி தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்த தொடரில் 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா புதிய உலக சாதனை படைக்கவுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் 2024-இல் இந்தியா 97 சிக்ஸர்கள் விளாசி உள்ளது. இன்னும் 3 சிக்ஸர் விளாசினால் 100ஆக உயரும். இது புது வரலாற்று சாதனை ஆகும். இந்தியாவுக்கு அடுத்து அதிகபட்சமாக இங்கிலாந்து 89 சிக்ஸர் (2022இல்) விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 16, 2024

அக்.16: வரலாற்றில் இன்று

image

1905: வங்காளம் 2ஆக பிரிக்கப்பட்டது
1948: நடிகையும், அரசியல்வாதியுமான ஹேமா மாலின் பிறந்தார்
1975: தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் காலிஸ் பிறந்தார்
1985: தேசிய பாதுகாப்புப் படை (NSG) அமைக்கப்பட்ட நாள்
1990: நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டது
1990: இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் பிறந்தார்

News October 16, 2024

காெட்டும் மழையில் டாஸ்மாக், இதுவா திராவிட மாடல்? பாமக

image

கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை
திறப்பது தான் திராவிட மாடல் சேவையா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், மழையால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டிய தேவை என்ன? அது என்ன உயிர்காக்கும் மருந்தா அல்லது மக்களால் தவிர்க்க முடியாத அத்தியாவசிய சேவையா? என வினவியுள்ளார்.

error: Content is protected !!