news

News April 15, 2025

‘GBU’ பட நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்

image

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ ஆகிய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதால் 7 நாள்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ₹5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

News April 15, 2025

அதிமுக நிர்வாகி மரணம்.. இபிஎஸ் நேரில் அஞ்சலி

image

சாலை விபத்தில் உயிரிழந்த சேலம் மாநகர அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இல்லத்திற்குச் சென்று இபிஎஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். 2 நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் அதிமுக நிர்வாகி செந்தில்குமாரன் உயிரிழந்தார். அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய இபிஎஸ், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கட்சி நிர்வாகியின் அஞ்சலி நிகழ்ச்சியையொட்டி இன்றைய பேரவை நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை.

News April 15, 2025

IPL 2025: ஸ்பேரிங் போடும் இரு பலமான அணிகள்!

image

IPL தொடரின் இன்றைய மேட்சில், PBKS – KKR அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இந்த சீசனில் பலமான அணிகளாகவே இருக்கின்றன. KKR 6 மேட்சில், 3-ல் வென்றுள்ளது. மறுபுறம், இது PBKS 5 மேட்சில், 3-ல் வென்றுள்ளது. போட்டி நடைபெறும் பஞ்சாப்பின் முல்லான்பூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இன்று பெரிய ரன் மழையை எதிர்பார்க்கலாம். போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. யார் ஜெயிப்பாங்க என நினைக்குறீங்க?

News April 15, 2025

மும்மொழி போர்வையில் ஹிந்தியை திணிக்க முயற்சி: CM

image

மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்பதில் CM ஸ்டாலின் திட்டவட்டமாக உள்ளார். இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் இன்று எதிரொலித்தது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் ஹிந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். எக்காரணத்தைக் கொண்டும் மும்மொழியை ஏற்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 15, 2025

விவாகரத்து பெறுகிறாரா நவ்யா நாயர்?

image

பிரபல நடிகை நவ்யா நாயர் கணவரை பிரிந்து விட்டாரா? என்ற கேள்வி மீண்டும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது. விஷூ தினத்தில் பதிவிடப்பட்ட அவரின் இன்ஸ்டா போஸ்ட்டில் பெற்றோர், சகோதரன் மட்டுமே உள்ளனர். அதில், அவரது கணவர் சந்தோஷ் மேனன் இல்லாததை சுட்டிக்காட்டி, நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நவ்யா நாயர் தமிழில் அழகிய தீயே, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

News April 15, 2025

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நீக்கம்.. பரபரப்பு தகவல்

image

BSP மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து <<16103800>>பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்<<>> நீக்கத்திற்கு மாநிலத் தலைவர் ஆனந்தன் தான் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடந்த செயற்குழு கூட்டத்தில், பொற்கொடி தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆனந்தன் மீது பல புகார்களை கூறினர். குறிப்பாக ஆனந்தன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிடப் பிரதிநிதிகளிடம் பொற்கொடி கூறியிருந்த நிலையில், இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

News April 15, 2025

சரியும் மக்கள்தொகை: கவலையில் அரசு!

image

ஜப்பானில் பிறப்பு விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாத இறுதியில் மொத்த மக்கள் தொகை 12 கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 8,98,000 குறைவு. வேலை பளு காரணமாக இளம் வயதினர் திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருக்கின்றனர். குழந்தை பிறப்பையும் ஒத்திவைத்து வருகின்றனர். இதனால், குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை ஜப்பான் எடுத்து வருகிறது.

News April 15, 2025

ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை: TN அரசு

image

ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2016–21ல் பால் வளத்துறை அமைச்சராக இருந்த <<16105372>>ராஜேந்திர பாலாஜி<<>>, ₹3 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

News April 15, 2025

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கல்

image

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான முறைகேடு வழக்கில் நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 2016 – 21 காலக்கட்டத்தில் அவர் அமைச்சராக இருந்தபோது ஆவினில் வேலை வாங்கி தருவதாக ₹3 கோடி முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை CBI விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் கண்டனத்தை அடுத்து, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இது ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

News April 15, 2025

குழந்தைகள் தனியாக விளையாட போறாங்களா..?

image

குழந்தைகள் விளையாடும் போது, பலரும் அதிக கவனம் கொடுக்க மாட்டார்கள். அந்த பழக்கம் 2 பிஞ்சுகளின் வாழ்க்கையை பறித்துள்ளது. தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில், மாமாவின் திருமணத்தின் போது, காரில் ஏறி 2 குழந்தைகள் விளையாடி கொண்டிருந்துள்ளனர். ஆனால், கார் லாக்காகி விட குழந்தைகள் காரிலேயே மூச்சுத்திணறி துடிதுடித்து இறந்துள்ளனர். பெற்றோர்களும், உறவினர்களும் திருமணத்தில் இருந்ததால் கவனிக்கவில்லை.

error: Content is protected !!