news

News October 16, 2024

விளையாட்டு துளிகள்

image

➤Chess Masters: விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா மோதிய காலிறுதியின் முதல் போட்டி ‘டிரா’ ஆனது. ➤ISSF World Cup: மகளிர் 10 மீ ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் சோனம் வெள்ளிப் பதக்கம் வென்றார். ➤Hockey India League: இந்திய வீராங்கனை உதித்தாவை ₹32 லட்சத்துக்கு பெங்கால் அணி வாங்கியது. ➤சர்வதேச ஸ்குவாஷ் தொடர்: முதல் சுற்றில் அமெரிக்காவின் ஆட்ரேவை 3-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவின் ஜோஷ்னா வென்றார்.

News October 16, 2024

மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

image

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கவிருந்த நிலையில், காலை முதலே அங்கு பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் கூட போடாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் நாளையும் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளது.

News October 16, 2024

கார உணவுகளை உண்டால் நீண்ட நாள் வாழலாமா?

image

அன்றாட உணவில் காரம் சேர்த்து கொள்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதாக வெர்மான்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. 23 ஆண்டுகள் 16,000 பேரை ஆய்வு செய்து வல்லுநர்கள் அளித்த அறிக்கையில், சிறிதளவு கூடுதலாக ஆன்டி-கார்சினோஜெனிக் & நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் கொண்ட மிளகு & மிளகாயை உணவில் அதிகம் சேர்க்கும் நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 13% குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

பா.ரஞ்சித்துக்கு தில்லு அதிகம்: டைரக்டர் முத்தையா

image

பா.ரஞ்சித்துக்கு உண்மையாகவே தில்லு அதிகம் என இயக்குநர் முத்தையா புகழ்ந்துள்ளார். ‘அட்டகத்தி’ படத்தை இயக்கிய ரஞ்சித்தால் மாறுபட்ட கதையை கொண்ட ‘காலா’வையும் பண்ண முடிகிறது. அவரைப் போல மற்ற இயக்குநர்களுக்கும் தைரியம் வரவேண்டும்’ என கூறியுள்ளார். மேலும், ரஞ்சித் போன்ற பயமில்லாத இயக்குநர்களை பார்த்து சந்தோஷப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். கொம்பன், குட்டி புலி உள்ளிட்ட படங்களை முத்தையா இயக்கியுள்ளார்.

News October 16, 2024

ரெட் அலர்ட் இன்னும் இருக்கு: IMD WARNING

image

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட போதிலும், இன்று லேசான மழையே பெய்தது. இந்நிலையில், இதுகுறித்து வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், “வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை பலவீனம் அடையவில்லை. சிஸ்டம் இன்னும் கடலில்தான் இருக்கிறது. நாளை அதிகாலை அது கரையை கடக்கும்போது, மிக கனமழை பெய்யும். ரெட் அலர்ட் தொடரவே செய்கிறது” எனக் கூறினார்.

News October 16, 2024

இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் இவர் தான்

image

சமீபத்தில் ஜாம்நகரின் மகாராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா பெரிய கோடீஸ்வரராக மாறியுள்ளார். அரச குடும்ப வாரிசாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, அரண்மனை உள்ளிட்ட அனைத்து சொத்துகளும் அவர் வசம் சென்றுள்ளது. இதையடுத்து ₹1,450 கோடிக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். இதன்மூலம் சச்சின் (1,390 கோடி), கோலி (1,090 கோடி), தோனி (1,040 கோடி) ஆகியோரின் சொத்து மதிப்பை விஞ்சியுள்ளார்.

News October 16, 2024

உமர் அப்துல்லாவுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து

image

ஜம்மு-காஷ்மீர் CM ஆகப் பதவியேற்ற உமர் அப்துல்லாவுக்கு, தமிழக CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது X தளத்தில், ”மழை வெள்ள மீட்புப் பணி காரணமாக, பதவியேற்பு விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை. எனக்கு பதிலாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி பங்கேற்றார். மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்” என பதிவிட்டுள்ளார்.

News October 16, 2024

ஆங்கிலம் அறிவோம்: Dagger Vs Knife

image

Dagger, Knife ஆகிய இரு சொற்களும் ஆயுதத்தையே குறிக்கின்றன. இருந்தாலும் இவை இரண்டும் ஒன்றல்ல.
Knife – கத்தி என்பது (காய்கறி) உயிரற்ற பொருள்களை வெட்ட பயன்படுத்தப்படுவது. Dagger – குறுவாள் என்பது உயிருள்ளவர்களைக் குத்த பயன்படுத்தப்படும் கருவியை குறிக்கும். knífr என்ற ஜெர்மானிய சொல்லில் இருந்து Knife என்பதும், dague என்ற பிரெஞ்ச் சொல்லில் இருந்து Dagger என்பதும் உருவானதாக சொல் அகராதி கூறுகிறது.

News October 16, 2024

ஆளுநரும் திமுக அரசும் புது காதலர்கள்: செல்லூர் ராஜூ

image

திமுக அரசும், ஆளுநரும் புது காதலர்கள் போல இணக்கமாக உள்ளதாக, அதிமுக Ex மினிஸ்டர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், ஆளுநர் எப்போதும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டி, மக்கள் குறைகளை எடுத்துச்சொல்லுவார்; ஆனால் தற்போது மாறி இருக்கிறார் என்றார். மேலும், திடீரென PM மோடியை CM ஸ்டாலின் சந்திக்கிறார், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்குகிறார்கள் எனவும் சந்தேகம் தெரிவித்தார்.

News October 16, 2024

இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து: அதிர்ச்சி தகவல்

image

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு பெரிய அளவில் தாக்கவுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் ICMR ஆய்வு மேற்கொண்டது. அதன்படி, இந்தியாவில் 2022 முதல் 2045 வரை புற்றுநோய் பாதிப்பும், அதனால் நிகழும் மரணங்களும் மிகக் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வாய் மற்றும் மார்பக புற்றுநோய் அதிகமாக தாக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!