India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாளையங்கோட்டை பள்ளியில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. காயமடைந்த 2 பேரும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எட்டாம் வகுப்பு பயிலும் சிறுவன் இப்படியான வெறிச்செயலில் ஈடுபட்டிருப்பது கவலைக்குரிய விஷயம்தான்.
சட்டப்பேரவையில் 3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி சபாநாயகரிடம் அதிமுக கடிதம் கொடுத்துள்ளது. அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிராக இந்த கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி பெண்கள் மற்றும் இந்து மதத்தைக் கேவலப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கனவே திருமணமான சவுதி அரேபிய நாட்டுத் தூதருடன் தகாத உறவில் இருந்த பிரபல மாடல் அழகி மேக்னா ஆலம் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கதேசத்தில் இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பாக மேக்னா ஆலம் பேஸ்புக்கில் LIVE வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் சிலர் தன்னை சமாதானம் செய்ய முயன்றதாகவும் கூறி அவர்களையும் சிக்க வைத்துள்ளார். இது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மாநில உரிமைகளுக்காக உயர் நிலைக் குழு அமைக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் உரையாற்றிய அவர், மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றார். இக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், அடுத்த 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையையும் வழங்கும் என கூறினார். மாநில சுயாட்சியின் முதல் குரல் தமிழகத்தில் இருந்தே ஒலிக்கிறது என்றும் தெரிவித்தார்.
CSK அணியில் அஷ்வின் சொதப்பி வருவதாக விமர்சனம் எழுந்த நிலையில், நேற்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்த தோனி, ‘அஷ்வினுக்கு நாங்கள் அதிக அழுத்தம் கொடுத்துவிட்டோம்’ என தெரிவித்துள்ளார். பந்துவீச்சை மாற்றி அமைத்தது பலனளித்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், வரும் போட்டிகளில் அஷ்வினுக்கு இடமிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
மாநில உரிமைகளை போராடி பெற வேண்டிய நிலைமை நீடிப்பதாக பேரவையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 110 விதியின் கீழ் உரையாற்றிய அவர் மாநிலங்களில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதை தான் TN தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மருத்துவக் கல்வி நீட் தேர்வால் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. இந்தி மொழியை திணிக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் அடுத்த மாதம் 2-ம் தேதி கூடுகிறது. ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இக்கூட்டம் நடக்கவுள்ளது. பாஜக உடன் கூட்டணி விவகாரம், கட்சியிலிருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரை பிரேமலதா விஜயகாந்த் புகழ்ந்ததும், பதிலுக்கு விஜயகாந்த் பற்றி நெகிழ்ச்சியாக பிரதமர் பேசியதும் தான் தமிழக அரசியலில் நேற்று ஹாட் டாபிக்கானது. இந்தச் சூழலில் பதிலுக்கு #BJP4India என குறிப்பிட்டு பிரதமருக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருக்கும் நிலையில், தேமுதிகவும் கூட்டணி சேர காய்களை நகர்த்துகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
சென்னையில் <<16104127>>தங்கம் விலை<<>> இன்று குறைந்த போதிலும் வெள்ளி விலை கிலோவுக்கு ₹2,000 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ₹110-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,10,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில மாதங்களாக தங்கத்துடன் போட்டிப் போட்டுக்கொண்டு உயர்ந்து வந்த வெள்ளி, தங்கத்தின் விலை குறையும்போது குறைந்து வந்தது. ஆனால், இன்று தங்கம் விலை குறைந்த போதிலும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
ஆண்கள் இவ்வளவு விஸ்வாசமானவர்களா என ஆச்சரியப்பட வைக்கும் ஒரு ஆய்வு முடிவு இங்கிலாந்தில் வெளியாகியுள்ளது. Capital Hair and Beauty என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, 75% ஆண்கள் தங்கள் துணையைவிட பார்பருக்கு அதிக விஸ்வாசமாக இருக்கிறார்களாம். காதலியை ஏமாற்றுவதைவிட பார்பரை ஏமாற்றுவதுதான் அதிக குற்ற உணர்ச்சியை கொடுக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுபற்றி உங்க கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.