India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகம் முழுவதும் வாட்ஸ் அப்பை சுமார் 300 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இதில் மோசடி நடைபெறுவதை தடுக்க வாட்ஸ் அப் பல பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்கிறது. அதன்படி, ஸ்பேம் செய்தி, ஆட்டோமெடிக் அல்லது பல்க் செய்திகளை பகிர்வது வாட்ஸ் அப் விதிப்படி சட்டவிரோதம் ஆகும். இந்த தகவலை நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பினால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டு விடும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
மேம்பாலங்களில் பார்க் செய்யப்பட்ட கார்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என தனியார் வானிலை ஆர்வலர் வெதர்மேன் கூறியுள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால், சென்னையில் அதி தீவிர கனமழைக்கான வாய்ப்பு குறைந்ததாகவும், அடுத்த 6 மணி நேரத்திற்கு மிதமான மழையே பெய்யும் எனவும் முன்னறிவித்துள்ளார். இதனால், சென்னையில் 20cmக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கணித்துள்ளார்.
சீனாவில் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. சீனர்கள் செல்லப்பிராணிகளுடன் தோழமை கொள்ள விரும்புகின்றனர். கஃபே செல்லும் மக்கள், தேநீருடன் அங்குள்ள செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடுகின்றனர். இதற்காக கஃபேக்களில் செல்லப்பிராணிகள் பணியமர்த்தப்படுகின்றன. மனிதர்களைபோல பணி நேரம் முடிந்ததும், அவை உரிமையாளர்களின் வீடுகளுக்கு திரும்புகின்றன.
அதிமுக சார்பில் Rapid Response Team உருவாக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை தத்தளித்ததையும், திமுக அரசு மக்களை கைவிட்ட அலவலத்தையும் கடந்த ஆண்டே பார்த்ததாக விமர்சித்துள்ளார். இந்நிலையில், கடுமையான தருணத்தில் மக்கள் தேவையான உதவிகளுக்கு அதிமுக தன்னார்வலர்களை எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை தொடரும் என்றும், அதி தீவிர கனமழைக்கான ஆபத்து குறைந்துள்ளது எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அதி தீவிர கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு முதல் லேசான முதல் மிதமான மழையே பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் கனமழை பெய்கிறதா?
தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத இசை நாயகனாக வலம் வரும் அனிருத், முன்னணி நாயகர்களின் விருப்பமானத் தேர்வாக இருந்து வருகிறார். ரஜினி, கமல் தொடங்கி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பெரும்பாலான ஸ்டார்களின் படங்களுக்கு இந்த ராக் ஸ்டார் இசையமைத்துள்ளார். இரைச்சல் நாயகன் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், 2K கிட்ஸ்களின் இசை அரக்கனாக திகழும் இவர், தொட்டதெல்லாம் ஹிட்டுதான். HBD அனிருத்.
WC T20 தொடரில் AUS & NZ அணிகளிடம் ஏற்பட்ட தோல்வியால் IND அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இந்நிலையில் IND அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்க தேர்வுக் குழு & தலைமை பயிற்சியாளரை பிசிசிஐ சந்திக்க உள்ளது. அவர் தொடர்ந்து அணியின் முக்கிய உறுப்பினராக இருப்பார். ஆனால் அணியை வழி நடத்த புதிய உத்வேகத்துடன் கூடிய நபரை பிசிசிஐ தேர்வு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளது.
1,000 மதுக்கடைகளில் 2 விற்பனை பிரிவுகளை அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் தினமும் ரூ.2 லட்சத்திற்கும் மேல் மதுவிற்பனையாகும் “ஏ” பிரிவு” கடைகளில் 2 விற்பனை பிரிவுகளை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வாங்க முடியும்.
கால் பாதங்களில் சிலருக்கு வெடிப்பு பிரச்னை எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து டாக்டர்கள் தெரிவிப்பதை தெரிந்து காெள்ளலாம். வைட்டமின் ஏ சத்தானது தோல் தாெடர்பான பிரச்னையை சரி செய்யும். அந்தச் சத்து பற்றாக்குறை எனில் இதுபோன்ற பிரச்னை ஏற்படும். ஆதலால் வைட்டமின் ஏ சத்து கிடைக்க கீரை வகைகள், கேரட், முட்டையை உணவில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
Sorry, no posts matched your criteria.