news

News September 19, 2024

Chess Olymbiad: மாஸ் காட்டும் மகளிர் அணி

image

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய மகளிர் அணி 7ஆவது சுற்றிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஹங்கேரியில் செஸ் ஒலிம்பியாட் தொடரின் 45ஆவது சீசன் நடந்து வருகிறது. இதில், ஜார்ஜியா அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 3 -1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 14 புள்ளிகளுடன் இந்திய அணி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. போலந்து (12), கஜகஸ்தான் (12) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

News September 19, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶ குறள் பால்: அறத்துப்பால் ▶ அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ▶ குறள் எண்: 57 ▶ குறள்: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. ▶ பொருள்: தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.

News September 19, 2024

திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்த நெய்?

image

கடந்த ஆட்சியில் திருப்பதி கோயில் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர CM சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர்களின் சிறப்புக் கூட்டத்தில் பேசிய அவர், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன் மோகன் வெட்கப்பட வேண்டும் என்றார். மேலும், தான் ஆட்சிக்கு வந்ததும் சுத்தமான நெய் பயன்படுத்த உத்தரவிட்டதாகவும் கூறினார்.

News September 19, 2024

632 நாள்களுக்குப் பிறகு களமிறங்கும் பண்ட்

image

டெஸ்ட் போட்டியில் 632 நாள்களுக்குப் பிறகு ரிஷப் பண்ட் களமிறங்க உள்ளார். நாளை நடைபெறும் BAN-க்கு எதிரான போட்டியில் அவர் விளையாட உள்ளார். கார் விபத்து, சிகிச்சை என சுமார் 2 ஆண்டுகளாக அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. கடந்த 2022ல் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடைசியாக அவர் விளையாடி இருந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு பண்ட் களமிறங்க உள்ளதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

News September 19, 2024

இன்றைய (செப்.19) நல்ல நேரம்

image

▶ செப்.19 (புரட்டாசி 3) ▶ வியாழன் ▶ நல்ல நேரம்: 10.45 – 11.45AM ▶ கெளரி நேரம்: 12.15 – 1.15AM & 6.30 – 7.30PM ▶ ராகு காலம்: 1.30 – 3.00PM ▶ எமகண்டம்: 6.00 – 7.00AM ▶ குளிகை: 9.00 – 10.30AM ▶ திதி: துவிதியை ▶ பிறை: தேய்பிறை ▶நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 11.15 மணி வரை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: தெற்கு ▶ பரிகாரம்: தைலம் ▶ யோகம்: சித்தயோகம் ▶ சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

News September 19, 2024

விஜய்யால் திமுகவுக்குதான் ஆபத்து: ஹெச்.ராஜா

image

விஜய் அரசியலுக்கு வந்ததால் திமுக வாக்குகள் பிரியும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், திராவிடர் கொள்கைகளை சொன்னால்தான் தனக்கு வாக்குகள் கிடைக்கும் என விஜய் நினைப்பதாக கூறினார். அதனால் திமுக வாக்குகள்தான் பிரியும் எனக் கூறிய அவர், அது நல்லதுதான் என்றார். மேலும், விசிகவின் மது ஒழிப்பு மாநாடு, மத போதகர் மாநாடு போல மாறி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

News September 19, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 19, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 19, 2024

ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த தெ.ஆ., அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால், 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 26 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் பறிகொடுத்து 107 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

News September 19, 2024

ராசி பலன்கள் (19.09.2024)

image

*மேஷம் – பகை தேடி வரும் *ரிஷபம் – வெற்றி நிச்சயம் *மிதுனம் – நன்மை உண்டாகும் *கடகம் – போட்டி ஏற்படும் *சிம்மம் – மேன்மை உண்டாகும் *கன்னி – மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும் *துலாம் – மருத்துவ செலவு ஏற்படும் *விருச்சிகம் – உயர்வு உண்டாகும் *தனுசு – மகிழ்ச்சியான நாளாக அமையும் *மகரம் – குடும்பத்தினரின் பாசம் கிடைக்கும் *கும்பம் – அன்பு செலுத்துங்கள் *மீனம் – அமைதியாக இருங்கள்.

error: Content is protected !!