India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
NZ அணிக்கு எதிரான டெஸ்ட் இன்னிங்ஸில் IND அணியின் டாப்-7 பேட்ஸ்மேன்களில் 5 பேர் ‘0’ ரன்களில் ஆடுகளத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். சொந்த மண்ணில் இத்தகைய மோசமான ஆட்டத்தை முதல்முறையாக (கோலி, சர்பராஸ் கான், ஜடேஜா, KL ராகுல், அஸ்வின் 0 ரன்னில் அவுட் ஆகியுள்ளார்) IND அணி விளையாடியுள்ளது. இதற்கு முன் இருமுறை (1952, 2014) இங்கிலாந்து மண்ணில் மட்டுமே IND அணி இப்படியான மோசமான முறையில் ஆட்டம் இழந்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 10,500 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக, சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 1st டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு இந்திய அணி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா, NZ பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46 ரன்களில் சுருண்டது. 2 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்த நிலையில், 5 பேர் டக் அவுட் ஆனார்கள். இது டெஸ்டில் இந்தியாவின் 3ஆவது குறைந்த ஸ்கோர் ஆகும்.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நாளையும் இம்மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று முன்னறிவித்துள்ளது. தொடர்ந்து, 20, 21ம் தேதிகளில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனவும் கூறியுள்ளது.
ADMK-வின் 53ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு, ADMK தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஆந்திர Dy CM பவன் கல்யாண் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஏழைகள் முன்னேற பாடுபட்ட MGR ஒரு மிகப்பெரிய தலைவர் என்றும், அவரது பணியை தொடர்ந்த ஜெயலலிதாவின் வழியில் கட்சி மேலும் எழுச்சி பெறும் எனவும் வாழ்த்தியுள்ளார். தமிழ் மொழி, கலாசாரம் மற்றும் தமிழர்களின் போராட்ட குணத்தை தான் மிகவும் மதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை, ஸ்டார் ஹோட்டல்களுக்கு ஜாக்பாட் ஆக மாறிவிட்டது. ஆம், ரூ.8000 வரை வாடகை இருந்தும், கடந்த 2 நாள்களில் சென்னை ஸ்டார் ஹோட்டல்களில் ஐடி துறை இளைஞர்கள் ஏராளமானோர் அறைகளை புக் செய்துள்ளனர். வெள்ளத்தில் இருந்து தப்பிக்க மட்டுமல்ல, 2023-ல் நடந்தது போல் கார்களை இழந்துவிடக் கூடாது என்ற அச்சமும், தடையற்ற வை-ஃபை கிடைத்தால் ரூமிலிருந்தே வேலை செய்யலாம் என்பதும் காரணம் என்கின்றனர்.
eMAX 7 என்ற புதிய சுப்பீரியர் ரக கார்களை எலக்ட்ரிக் கார் நிறுவனமான BYD இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, 71.8 kWh திறன் கொண்ட பேட்டரி, 204 ps ஆற்றல் மோட்டார், வயர்லெஸ் சார்ஜர், கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், முழு சார்ஜில் 420 km ரேஞ்சை வழங்கும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. 4 புது வண்ணங்களில் கிடைக்கும் இதன் ஷோரூம் விலை ₹29.30 லட்சமாகும்.
NZ அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் IND அணி தடுமாறி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோஹித் சர்மா (2), கோலி (0), சர்பராஸ் கான் (0), ஜெய்ஷ்வால் (13), ஜடேஜா(0), கே.எல் ராகுல்(0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். உணவு இடைவேளை வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது. பண்ட் 15 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் 52 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக என்ற கட்சியை துவங்கிய நாள் இன்று. கட்சி துவங்கப்பட்டு 5 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த கட்சி என்ற வரலாறு அதற்கு உண்டு. அதிமுக உருவான 72ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற பேரவை தேர்தல்களின் எண்ணிக்கை 11. இதில் 7 முறை வெற்றிபெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்த தமிழ்நாட்டின் ஒரே கட்சி அதிமுக. அபார வெற்றி, படுதோல்வி என அனைத்தையும் ஒருசேர பார்த்த இயக்கம் அதிமுக.
சென்னையில் வெள்ளப் பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வெள்ளை அறிக்கை கேட்டால் முதிர்ச்சியில்லாமல் துணை முதல்வர் உதயநிதி பதிலளிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எதிர்க்கட்சி வெள்ளை அறிக்கை கேட்டால் அதை தருவது அரசின் கடமை என்றும் சாடினார். மேலும், வெறும் மழைக்கே திமுக அரசு அலறுவதாகவும், அதிமுக அரசு பல புயல்களை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.