news

News September 20, 2024

‘பேச்சி’ படத்தை ஓடிடியில் பார்க்கலாம்

image

‘பேச்சி’ திரைப்படம் நாளை முதல் ஆஹா மற்றும் அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது. ராமசந்திரன் இயக்கத்தில், நகைச்சுவை நடிகர் பால சரவணன் நடிப்பில் வெளியான இப்படம், திகில் நிறைந்த த்ரில்லர் ஜானரில் உருவாகி இருந்தது. இது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான படமாக இருந்தது. இந்நிலையில், திரையங்குகளில் இப்படத்தை பார்க்க தவறியவர்கள் ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

News September 20, 2024

போராட்டத்தை திரும்பப்பெற்ற மருத்துவர்கள்

image

கொல்கத்தாவில் கடந்த மாதம் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு நியாயம் கேட்டு ஜூனியர் மருத்துவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். சமீபத்தில் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், போராட்டத்தை திரும்பப்பெறுவதாக தற்போது அறிவித்துள்ளனர். சனிக்கிழமை பணிக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

News September 20, 2024

ராசி பலன்கள் (20.09.2024)

image

*மேஷம் – போட்டி உண்டாகும் *ரிஷபம் – கவனமாக இருங்கள் *மிதுனம் – மகிழ்ச்சி நாளாக அமையும் *கடகம் – புதிய நட்பு கிடைக்கும் *சிம்மம் – சோர்வுடன் இருப்பீர் *கன்னி – மங்கலகரமான நாளாக அமையும் *துலாம் – சந்தோஷம் கிடைக்கும் *விருச்சிகம் – மற்றவர்களிடம் இருந்து தொல்லை ஏற்படும் *தனுசு – முயற்சியை கைவிட வேண்டாம் *மகரம் – பயம் உண்டாகும் *கும்பம் – ஜாக்பாட் அடிக்கும் *மீனம் – விவேகத்துடன் செயல்படுங்கள்.

News September 20, 2024

இன்ஸ்டா, FB, வாட்ஸ் அப் பயனர்களுக்கு Sad News

image

இன்றைய சமுதாயத்தில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். இதை பயன்படுத்துபவர்களுக்கு மெட்டா நிறுவனம் அதிர்ச்சி செய்தியை அளித்துள்ளது. அதாவது முகத்தை அழகுபடுத்திக் காட்டும் ‘Filter’ வசதியை 2025 முதல் நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இயற்கைக்கு மாறான இந்த தோற்றத்தால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

News September 20, 2024

ஆம்ஸ்ட்ராங் கொலை: செல்வப்பெருந்தகை விளக்கம்

image

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு உள்ளதாக வெளியான குற்றச்சாட்டுக்கு செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், BSP-யின் குற்றச்சாட்டு ஒரு பொருட்டே அல்ல. அந்த புகாருக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதால் செல்வப்பெருந்தகையை, காங்., தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ராகுலுக்கு கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News September 19, 2024

தோனி சாதனையை முறியடித்த அஸ்வின்

image

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின் – ஜடேஜா ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து 195* ரன்கள் எடுத்துள்ளனர். இதன்மூலம் சொந்தமண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 7வது விக்கெட் அல்லது அதற்கும் கீழ் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த ஜோடிகளில், இவர்கள் 500* ரன்களுடன் 2வது இடத்தை பிடித்துள்ளனர். முன்னதாக இரண்டாவது இடத்தில் இருந்த தோனி – VVS லட்சுமண் ஜோடியை (486) மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளார்.

News September 19, 2024

சென்னை கொடூரம்.. மூளையை வறுத்து சாப்பிட்ட கொடூரன்

image

சென்னையில் சூட்கேசில் பெண் சடலம் இருந்த விவகாரத்தில், மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலையுண்ட பெண் பாலியல் தொழிலாளி தீபா (30) என்பது தெரியவந்துள்ளது. உல்லாசமாக இருக்க ₹18,000 தருவதாக கூறி ₹12,000 கொடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் சுத்தியலால் அடித்ததில் தீபா இறந்துள்ளார். பெண்ணின் மூளையை அவர் வறுத்து சாப்பிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

News September 19, 2024

தோனி சதத்தை சமன் செய்த அஸ்வின்

image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த நிலையில், வெறும் 6 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். தற்போது அஸ்வின் டெஸ்டில் தனது 6வது சதத்தை அடித்திருப்பதன் மூலம் அதனை சமன் செய்துள்ளார். சேப்பாக்கத்தில் வங்கதேசத்திற்கு எதிராக இன்று நடைபெற்ற தனது 100வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் சதம் (102*) அடித்து இந்திய அணியின் ஸ்கோர் உயர பெரும் பங்காற்றினார்.

News September 19, 2024

ஊருக்கு செல்ல ரெடியா? நாளை முதல் சிறப்பு பேருந்து

image

சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி, நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தி.மலை, மதுரை, நெல்லை, குமரி, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களுக்கு செப்.20, 21இல் 600க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.inஇல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

News September 19, 2024

உக்ரைனில் இந்திய ஆயுதங்கள்: MEA மறுப்பு

image

இந்திய ஆயுத நிறுவனங்களிடம் ஆயுதங்களை வாங்கும் ஐரோப்பிய கஸ்டமர்கள், அதை உக்ரைனுக்கு கடந்த ஓராண்டாக அனுப்பி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், இக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது மற்றும் தவறான தகவல் என கூறியுள்ளது. சர்வதேச கடமைகளுக்கு உட்பட்டு, கடுமையான விதிகளின் படியே ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.

error: Content is protected !!