India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பந்துவீச்சு மாற்றங்களை சரியாக செயல்படுத்துவதை தோனியிடம் இருந்து கற்றுக்கொள்ளும்படி ரோஹித் ஷர்மாவுக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ஆலோசனை கூறியுள்ளார். அவர் தனது X பதிவில், “ஆடுகளத்தில் தனது அணிக்கு ஏற்படும் பாதிப்பு கைமீறி செல்லும் முன்பே, கண்டறியும் தனித்துவமான திறனை தோனி கொண்டிருந்தார். அத்தகைய திறனை தனது தலைமைப் பண்பில் ரோஹித் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத அகவிலைப்படி, 53 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OTT தளங்களில் வெளியாகும் படங்களை தணிக்கை செய்ய குழு அமைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை SC தள்ளுபடி செய்தது. ஷஷாங் ஷகிர் ஷா என்ற வழக்கறிஞர் தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த CJ சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அரசின் கொள்கை சார்ந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தது. மனுதாரர், சம்பந்தப்பட்ட துறையிடம் முறையிட்டு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியது.
மேற்கு ரயில்வேயில் 5,066 அப்ரன்டிஸ் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் rrc-wr.com இணையதளத்தில் விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க வரும் 22ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சியும், வயது வரம்பாக 15- 24 வரையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
*திராட்சை சாறுடன் அரிசி மாவு கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து கழுவினால், கருந்திட்டுகள், கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சென்று தெரியும்.
*பட்டர் ஃபுரூட் (அவகோடா) சதைப்பற்றுடன் வெண்ணெய், தேன் கலந்து முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.
*தக்காளி சாறுடன், அரிசி மாவு கலந்து தடவி வர முகம் பளிச்சென மாறும்.
சென்னை DD தொலைக்காட்சி சார்பில் இன்று நடைபெறவுள்ள இந்தி மாதக் கொண்டாட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “அரசமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய அந்தஸ்தை கொடுக்கவில்லை. அப்படியிருக்கையில், இந்தி மொழிக்கு மட்டும் கொண்டாட்டம் எதற்கு? இது உள்ளூர் மொழிகளை சிறுமைப்படுத்தும் முயற்சி. எனவே, இந்தக் கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, திருப்பத்தூர், வேலூர், தி.மலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யலாம் எனவும் முன்னறிவித்துள்ளது.
ராவணனை அவமதிப்பதை ஏற்க முடியாது என சீமான் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ‘ராவண வதம்’ நிகழ்ச்சி வரும் 27-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், “என் பாட்டன் ராவணனை இழிவுப்படுத்துவது, உலகத் தமிழரை அவமதிப்பதற்கு சமம். இதை தமிழினம் வேடிக்கை பார்க்காது. எனவே, உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும். ராவணனுக்கு உலகெங்கும் பெருவிழா எடுக்கப் போகிறோம்” எனக் கூறினார்.
சில செயலிகளை இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்கள் காதலன், கணவரது செல்ஃபோனில் உள்ள தகவல்களைப் பார்க்க முடியும் என்று நிறைய ரீல்ஸ் இணையத்தில் உலவுகின்றன. அந்த செயலிகளை இன்ஸ்டால் செய்வது சட்டப்படி குற்றமாகும். அத்துடன் பாதுகாப்பற்ற அந்த செயலிகளை பயன்படுத்தும் நபரது செல்ஃபோன் அவருக்குத் தெரியாமலேயே ‘ஹேக்’ செய்யப்பட்டு தகவல்கள் திருடப்படலாம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்று 11 மணிக்கு<<14387214>> GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) நீபோஸ்கோப் 2) 33 ஆண்டுகள் 3) ஏழு 4) போவர் பறவை 5) No Objection Certificate 6) பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி 7) ஞானக்கடல். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Sorry, no posts matched your criteria.