news

News October 18, 2024

ENG கதையை முடித்த PAK அணியின் 2 பந்துவீச்சாளர்கள்

image

ENG எதிரான 2ஆவது டெஸ்டில் PAK பவுலர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர். இப்போட்டியில் 152 ரன்கள் வித்தியாசத்தில் PAK அணி வென்ற நிலையில், முதல் மற்றும் 2ஆவது இன்னிங்ஸில் ENG அணியின் அனைத்து wkt-யும் 2 பவுலர்கள் மட்டுமே வீழ்த்தினர். சஜித் கான் 9, நோமன் அலி 11 என ENG அணியின் 20 விக்கெட்டுகளை இருவர் மட்டுமே கைப்பற்றினர். டெஸ்ட் வரலாற்றில் 7 முறை மட்டுமே 2 பவுலர்கள் அனைத்து wkt-யும் எடுத்துள்ளனர்.

News October 18, 2024

சுபகாரியத் தடை நீங்க விளக்கேற்றுங்கள்!

image

விளக்கில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. தினமும் மாலை 6 மணி அளவில் (சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு) வாசலில் தண்ணீர் தெளித்துக் கோலமிட வேண்டும். அதன் பின்னர், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகிய மூன்றையும் கலந்து தீபம் ஏற்றி, திருவிளக்கு மந்திரம் பாடி, கற்பூரம் காட்டி, பால் நிவேதனம் செய்து வழிபட திருமணம் & சுபகாரியத் தடை நீங்குவதோடு சர்வ மங்களமும் உண்டாகும் என்பது ஐதீகம்.

News October 18, 2024

125 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா

image

நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஷ்வால் 35, ரோஹித் ஷர்மா 52, விராட் கோலி 70 ரன்கள் எடுத்தனர். சர்ஃபராஸ் கான் 70 ரன்களுடன் களத்தில் உள்ளார். நியூசி., முதல் இன்னிங்சில் 402 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா முதல் இன்னிங்சில் 46, 2வது இன்னிங்சில் 231/3 ரன்களும் எடுத்து, நியூசி.,யை விட 125 ரன்கள் பின்தங்கியுள்ளது.

News October 18, 2024

INDIA-வில் இருந்து தமிழகத்தை பிரிக்க முயற்சி: ஆர்.என்.ரவி

image

இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குறை கூறியுள்ளார். டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி தின விழாவில் பேசிய அவர், இந்தியாவை பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றியடையாது என்றார். இந்தியாவின் பலமான அங்கமாக தமிழ்நாடு இருக்கும் எனவும், அதை யார் நினைத்தாலும் உடைக்க இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News October 18, 2024

தீபாவளிக்கு 4 நாள் விடுமுறையா?

image

தீபாவளிக்கு 4 நாள் விடுமுறை விடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி திருநாள் OCT 31-ம் தேதி வருகிறது. அன்றைக்கு வியாழக்கிழமை. இந்நிலையில், அதற்கு அடுத்த நாளும் (வெள்ளிக்கிழமை) தமிழக அரசு, விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால், அடுத்தடுத்து சனி, ஞாயிறு வருகிறது. இதனால், தீபாவளிக்கு 4 நாள் விடுமுறை கிடைக்கும், மக்கள் சொந்த ஊருக்கு சென்றுவர வசதியாக இருக்கும்.

News October 18, 2024

கூகுள் மேப்பை பார்த்து சேற்றில் சிக்கிய இளைஞர்

image

கூகுள் மேப்பை பார்த்து உணவு டெலிவரி செய்ய சென்ற இளைஞர் சதுப்புநிலச் சேற்றில் சிக்கிக்கொண்டார். சென்னை துரைப்பாக்கத்தில் இரவு நேரத்தில் டெலிவரி செய்ய முயன்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. சேற்றில் சிக்கிய இளைஞர், தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். இதனையடுத்த அங்கு வந்த மீட்புப்படையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.

News October 18, 2024

திராவிடம் ஏன் விடுபட்டது?: பாஜக விளக்கம்

image

பாடத் தெரியாதவர்களை வைத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால், ‘திராவிடம்’ விடுபட்டதாக பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த குளறுபடி குறித்து விழா ஏற்பாட்டாளர்களிடம் கண்டனம் தெரிவிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக, ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது.

News October 18, 2024

அடுத்தடுத்து இந்திய வீரர்கள் அரை சதம்

image

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். கேப்டன் ரோஹித் ஷர்மா 52 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி, சர்ஃபராஸ் கான் இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்துள்ளனர். தற்போது வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கோலி 67*, சர்ஃபராஸ் 62* ரன்களுடன் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

News October 18, 2024

WOW: இனி பறந்துகிட்டே Office போகலாம்..!

image

பெங்களூருவில் பறக்கும் எலக்ட்ரிக் டாக்ஸிகளை Sarla Aviation என்ற தனியார் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. முதற்கட்டமாக பெங்களூரு விமான நிலையம் – எலக்ட்ரானிக்ஸ் சிட்டி இடையே சேவையை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த 52 கி.மீ தூரத்தை, 19 நிமிடங்களில் டாக்ஸி கடக்கும். இதற்காக ₹1,700 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், 7 சீட்களை கொண்ட டாக்ஸி இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 18, 2024

ஒரே பழத்தில் அனைத்துச் சத்துகளும்

image

*உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் ஒருங்கிணைந்து கிடைப்பது அத்திப்பழத்தில்தான்.
*அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட கல்லீரல் வீக்கம், ஆண்மைக் குறைவு, மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
*அத்தியில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளையும் பற்களையும் உறுதியாக்கும்.
*அத்திப்பழத்தில் காணப்படும் பொட்டாஷியம் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படாமல் தடுக்கும்.

error: Content is protected !!